Wednesday, July 21, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள்
21.07.10

www.vaticanradio.org

----------------------------------------------------------------------------------------------------------------
1. இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் - கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ

2. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாது - கர்தினால் Juan Cipriani Thorne

3. பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய முஸ்லீம் தலைவர் கண்டனம்

4. தென் கொரியாவின் ‘நான்கு நதி திட்டத்’திற்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு

5. கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு

6. திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது


----------------------------------------------------------------------------------------------------------------

இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் - கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ

ஜூலை21,2010 இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் என்று வத்திக்கான் செய்தித்தாளான L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ (Bagnasco) கூறினார்.
சமுதாயப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலைக்குரிய போக்கு என்றுரைத்த கர்தினால் பஞாஸ்கோ, பிறரன்பு என்பதில் விசுவாசம் கொண்டுள்ள கத்தோலிக்கர்கள் முன் வந்து இந்த நிலையை மாற்றவேண்டும் என்றும், சிறப்பாக அரசியலில் இத்தகையோர் ஈடுபடுவது இத்தாலியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் கூறினார்.
சமுதாய மாற்றங்கள் பலவும் மனிதர்களின் முயற்சியால் வரக்கூடியது, மனித முயற்சிகளை மீறிய மாற்றங்களுக்கே இறைவன் துணையைத் தேட வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபை மனித சமூகத்தைப் பற்றி பல ஏடுகளில் கூறியுள்ள கருத்துக்களைச் சுட்டிக் காட்டிய கர்தினால் பஞாஸ்கோ, இன்றைய சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும் சுட்டிக் காட்டினார்.


ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாது - கர்தினால் Juan Cipriani Thorne

ஜூலை21,2010 ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாதென Lima உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Juan Cipriani Thorne கூறியுள்ளார்.
கடந்த வாரம் அர்ஜென்டீனா அரசு மேற்கொண்ட முயற்சி கண்டனத்திற்குரியதென சுட்டிக்காட்டிய கர்தினால் Cipriani, தொடர்ந்து நடைபெறவிருக்கும் பெரு நாட்டின் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டமாக்கும் கருத்து இடம் பெறக் கூடாதென்ற அழைப்பையும் விடுத்தார்.
எந்த ஒரு பொது நல ஊழியரும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்பவராக இருக்க வேண்டுமேயொழிய தங்கள் சுய கருத்துக்களையும், சுய நலனையும் மக்கள் மீது திணிக்கக் கூடாதென்றும் கர்தினால் Cipriani மேலும் கூறினார்.


பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய முஸ்லீம் தலைவர் கண்டனம்

ஜூலை21,2010 தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது குறித்தத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இந்திய முஸ்லீம் தலைவர் Asghar Ali Engineer.
இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது கொடூரமானக் குற்றம் மற்றும் இத்தகைய குற்றச் செயல்கள் பாகிஸ்தானில் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன என்றுரைத்த மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, தேவநிந்தனைத் தடைச் சட்டங்களைத் தான் முழுமையாய் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
தேவநிந்தனைத் தடைச்சட்டம் பற்றிக் குரானில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றுரைத்த Engineer, பாகிஸ்தானில் இந்தச் சட்டம் சிறுபான்மை கிறிஸ்தவர்க்கெதிராகத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.
பாகிஸ்தானில் தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 35 வயது ரஷித் இம்மானுவேல், 30 வயது சஷித் மாசிக் இம்மானுவேல் ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் இத்திங்களன்று ஃபாய்சலாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், இதேமாதிரியானக் குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கேரளாவில் முஸ்லீம்களால், கிறிஸ்தவப் பேராசிரியர் T.J.Joseph என்பவரின் கை துண்டிக்கப்பட்தையும் குறிப்பிட்டுப் பேசிய, மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, இத்தகைய வன்முறைகளைத் எத்தகைய கடும் சொற்களால் எதிர்க்க முடியுமோ அத்தகைய வார்த்தைகளால் தான் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.


தென் கொரியாவின் ‘நான்கு நதி திட்டத்’திற்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு

ஜூலை21,2010 தென் கொரியாவிலுள்ள நான்கு நதிகளையும் சீரமைக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்நாட்டின் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய ஆயர் பேரவை, கொரிய நாட்டு கிறிஸ்தவ சபைகளின் குழு, Won புத்த மதக் குழு என பல்வேறு மதக் குழுக்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டங்களின் ஒர் அங்கமாக, இத்திங்களன்று Seoulன் Myeongdong பேராலயத்தில் திருப்பலி ஒன்று நடந்ததென்றும், அந்தத் திருப்பலியில் 2000க்கும் மேற்பட்ட குருக்களும் விசுவாசிகளும் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
‘நான்கு நதி திட்டம்’ என்ற இந்த முயற்சியால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களின் குடிநீர் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உருவாகும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு அமைப்பின் செயலர் அருள்திரு Yang Jae-seong கூறினார்.
இதுவரை இந்தத் திட்டத்திற்கு 1800 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு

ஜூலை21,2010 கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் இச்செவ்வாயன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிராக No Less Human அதாவது, ‘மனிதப் பிறவிகளை விடக் குறைந்தவர்கள் இல்லை’ என்ற அமைப்பு தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
54 வயதான Tony Nicklinson ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டார் என்றும், சக்கர நாற்காலியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தன் வாழ்வைச் செலவிடும் Nicklinson, கருணைக் கொலை மூலம் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு செய்துள்ளார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உடல் குறையுள்ள மனிதர்கள், கருணைக் கொலை மூலம் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள அவர்கள் விரும்பினாலும், இந்த முறை சட்டமாக்கப்படுவதோ, அரசால் அனுமதிக்கப்படுவதோ மனித குலத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு என்று No Less Human குழுவின் உறுப்பினரான Janet Thomas கூறினார்.
உடல் அளவில் எந்த நிலையில் இருந்தாலும், மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை வலியுறுத்துவதே No Less Human என்ற தங்கள் குழுவின் நோக்கம் என்று Janet Thomas மேலும் கூறினார்.


திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ஜூலை21,2010 திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதென அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதுவர் கூறினார்.
தொடர்பு சாதனங்கள் திருத்தந்தை மீது தவறான பல தகவல்களை வெளியிட்டுவந்த வேளை, அவருக்குத் தங்கள் ஆதரவைக் காட்டும் வண்ணம் இவ்வாண்டு புனித வாரத்தில் இந்த முயற்சி ஆரம்பமானதென்று, நியூ யார்க் உயர்மறைமாவட்ட பேராயர் Timothy Nolan கூறினார்.
புனித வாரம் முதல் தூய ஆவிப் பெருவிழாவரையில் சேகரிக்கப்பட்ட இந்த ஆன்மீக மலர்கொத்தில் 24,714 திருப்பலிகளும், 31,847 உண்ணா நோன்பு முயற்சிகளும், 44,357 நற்கருணை வழிபாடுகளும் அடங்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


‘நன்றாக வாழ்’ என வாழ்த்தும் கை தான் வாழ்க்கை

வத்திக்கான் வானொலி – செய்திகள்
20.07.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------


இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் வேண்டுகோள்

ஜூலை 20, 2010. பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் ஜோசப் கூட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபாய்சாலபாத்தில் இத்திங்களன்று இரண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையே உருவாகியுள்ள பதட்ட நிலைகளில் கிறிஸ்தவ ஆலயம் சூறையாடப்பட்டது மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. மேலும், உள்ளூர் மசூதிகள் ஒலிபெருக்கிகள் மூலம் இத்தகைய வன்முறைக்கு ஊக்கம் அளிக்கும் அறிவிப்புகளைக் கூறிவந்தன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

Rashid Emmanuel, Sajid Masih Emmanuel ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களும் இறைவாக்கினர் முகமதுக்கு எதிரான வார்த்தைகளை எழுதினார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு இம்மாதம் இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டனர். எனினும், அந்த எழுத்துக்கள் இவர்களுடையது அல்ல என்று நிரூபணமானதால் இவர்கள் இத்திங்களன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நிரபராதிகள் என விடுவிக்கப்படவிருந்தனர். இவ்விருவரது கைகளும் சேர்த்து விலங்கு மாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வெளியே இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சகோதரர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதற்கொண்டு இவர்கள் கொல்லப்பட வேண்டுமென்று ஃபாய்சலாபாத் முஸ்லீம் மதக் குருக்கள் அம்மதத்தின் விசுவாசிகளைத் தூண்டி வந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இச்சகோதரர்களின் அடக்கச் சடங்குத் திருப்பலி அந்நகர் புனிதர்கள் பேதுரு பவுல் பேராலயத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்றது.

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள்விடுத்த ஆயர் கூட்ஸ், உண்மையான குற்றவாளிகள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படுமாறும் தேவநிந்தனைத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னும், இக்கொலை குறி்தது கருத்து தெரிவித்த தொமினிக்கன் சபை அருள்தந்தை பாஸ்கால் பவுலுஸ், இந்தச் சகோதரர்களுக்கு அதிகப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு தலத்திருச்சபை வற்புறுத்தி வந்தது என்றும் இத்தகைய வன்முறைச் செயலைத் தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

இவ்வன்முறையைத் தொடர்ந்து, காரித்தாஸ் தலைமையகம் உட்பட திருச்சபை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பல கிறிஸ்தவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக அறுபது முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

மேலும், கத்தோலிக்கர் இசுலாமியக் கோட்பாடுகள் குறித்து விவாதிக்கவும் அம்மதத்தைப் பற்றிப் பேசவும் வேண்டாமெனக் கேட்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள், இசுலாத்தை மதித்து சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவில் சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது - திருப்பீடம்

ஜூலை 20, 2010. ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற பிரச்னைகள் உட்பட சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வளர்ந்து வருவதாகத் திருப்பீடம் ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் எச்சரித்தது.

ஐரோப்பிய அவை, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், 24 ஆயர்கள், யூதமதத்தின் முக்கிய ராபிகள், முஸ்லீம்மதக் குருக்கள், இந்து மற்றும் சீக்கிய சமூகங்களின் பிரதிநிதிகள் இணைந்து “ஏழ்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு” குறித்து பெல்ஜிய நாட்டு பிரசல்ஸ்ஸில் நடத்திய ஒருநாள் கூட்டத்தில் உரையாற்றிய நீதி மற்றும் அமைதிக்கானத் திருப்பீட அவையின் நேரடிப் பொதுச் செயலர் Flaminia Giovanelli இவ்வாறு தெரிவித்தார்.

ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கும் அதேவேளை, பணக்காரருக்கும் ஏழைகளுக்குமிடையேயான வேறுபாடுகளும் அதிகரித்து வருகிறது மற்றும் இது துர்மாதிரிகையாகவும் இருக்கின்றது என்று Giovanelli கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் எட்டு கோடியே ஐம்பது இலட்சம் மக்கள் அதாவது 17 விழுக்காட்டு மக்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் கடும் வறுமையில் வாழ்கின்றனர், இது மதிப்பீடுகளின் அமைப்புமுறை பிரச்னையாகத் தென்படுகின்றன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

ஐரோப்பாவில் ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, மறுபுறம் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய ஜோவனெல்லி, எட்டு விழுக்காட்டு ஐரோப்பிய தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியம் கிடைக்கவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

மக்கள் தொகை பெருக்கம் குறித்த அரசு அறிக்கையை இந்தியத் திருச்சபை வரவேற்றுள்ளது

ஜூலை 20, 2010. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதக் கடுமையான முறைகளைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற அரசு அறிக்கையை வரவேற்றுள்ளது தலத்திருச்சபை.

இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.5 விழுக்காடு வீதம் இருந்து வருகிறது. மக்கள் தொகை தற்சமயம் ஏறத்தாழ 120 கோடியாக இருக்கின்றது, இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டுக்குள் சீனாவை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி அசாட், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதக் கடுமையான முறைகளையும் அரசு பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
இவ்வறிக்கையை வரவேற்றுள்ள இந்திய ஆயர் பேரவையின் குடும்ப ஆணையத் தலைவர் ஆயர் ஆக்னெல்லோ கிரேசியஸ், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சில முறைகள் வெளிப்படையாகத் தெரியவில்லையெனினும் அவை நாட்டில் இடம் பெற்று வருகின்றன என்றார்.

உலகின் பல நாடுகளில் போதுமான மக்கள் இல்லை என்ற பயமும் பிறப்பு விகிதமும் குறைவாகவே இருந்து வருகிறது, இந்த நிலை இந்தியாவில் நுழையாது என்று நம்புவோம் எனவும் கருத்து தெரிவித்தார் ஆயர் கிரேசியாஸ்.

நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் அதிக ஈடுபாடு காட்டுமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு

ஜூலை20,2010. நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் ஆண்டுக்கணக்காய் ஓரங்கட்டப்பட்டுள்ள வேளை, கிறிஸ்தவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டுமாறு அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி நேபாள பிரதமர் மாதவ் குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்நாடு அரசு இன்றி இருக்கின்றது. எனினும் இப்புதன் கிழமைக்குள் புதிய அரசை அமைக்குமாறு அரசுத்தலைவர் ராம் பரன் யாதவ் நாடாளுமன்றத்தைக் கேட்டுள்ளார்.

நேபாளத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்துப் பேசிய காத்மண்ட் ஆயர் அந்தோணி ஷர்மா, கடந்த காலத்தில் கத்தோலிக்கர் அரசியலில் ஆர்வம் காட்டியதைத் தான் பார்த்ததே இல்லை, எனினும் இந்நாள்வரை எந்தத் தலைவரும் மக்கள் நலனில் உண்மையாகவே ஆர்வம் காட்டியதில்லை, எனவே கிறிஸ்தவர்கள் நேபாள அரசியலில் உயிரூட்டமுடன் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது என்று கூறினார்.

இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்டவர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன

ஜூலை20,2010 இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்ட அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் ஆகிய இருவரையும் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன

இலங்கையில் கத்தோலிக்க இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் அருள்தந்தை கொன்சால்வெஸ் இறந்ததன் 270ம் ஆண்டு நிறைவு, அந்நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபை பரவுவதற்குக் காரணமானவராக நோக்கப்படும் முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் பிறந்ததன் 300வது ஆண்டு நிறைவு ஆகிய கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முதல்முறையாக சமய நூல்களைத் தமிழிலும் சிங்களத்திலும் எழுதியவர். இதனால் உள்ளூர் மக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்கவும் அதனைக் கற்கவும் முடிந்தது. மறைக்கல்வி ஏடு உட்பட சுமார் இருபது திருமறை நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இலங்கை டச்சு காலனியாக இருந்த சமயம் கால்வனிசம் அத்தீவின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தது. அச்சமயம் கத்தோலிக்கர் பரவலாக நசுக்கப்பட்டனர். அப்போது குருவாக இருந்த முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ், கத்தோலிக்கத் திருச்சபையை வலுப்படுத்தினார். 1651ம் ஆண்டு பிறந்த இவரை 1995ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுபெற்றவராக அறிவித்தார். சிலோனின் திருத்தூதர் என அழைக்கப்படும் இவர் பிறந்ததன் 300ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிறிஸ்துவ இளையோர் குழு கைபர் கணவாய்ப் பகுதியில் நடத்திய முகாம்

ஜூலை 20, 2010. பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்துவ இளையோர் குழு ஒன்று சுற்றுச்சூழல், மற்றும் மத நல்லிணக்கம் இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம் ஒன்றை அண்மையில் நடத்தினர்.

சென்ற வாரம் மூன்று நாட்கள் இமய மலையின் கைபர் கணவாய்ப் பகுதியில், Saiful Muluk என்ற எரிக்கருகே நடத்தப்பட்ட முகாம் ஒன்றில் மருத்துவர், ஆசிரியர், மாணவர் என்று 86 இளையோர் கலந்து கொண்டு, மலைப்பகுதியில் உள்ள அந்த ஏரியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் பல குப்பைகளை அகற்றினர்.

இயற்கையில் உள்ள குப்பைகளை அகற்றுவது சுற்றுச்சூழலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது போல், சமூகத்தில் உள்ள பிரிவுகளை அகற்றும் போது, சமூகச் சூழலும் முன்னேற வாய்ப்புண்டு என்று இந்த முகாம்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வரும் STANCE என்ற குழுவின் தலைவரான Saqib Khadim கூறினார்.

மத அடிப்படைவாதம், சகிப்புத் தன்மையற்ற நிலை, பிரித்தாளும் அரசியல், ஏழ்மை இவைகளே நாட்டின் சமுதாயச் சூழலை அதிகம் பாதிக்கும் கூறுகள் எனவே, இவைகளையும் நீக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுப்பட்டுள்ளோம் என்று இந்த முகாமில் கலந்து கொண்ட மருத்துவத் துறை மாணவர் ஜென்னிபர் பஷீர் கூறினார்.

சிகிச்சை பெறும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ளது

ஜூலை20,2010. HIV நோய்க் கிருமிகளுக்கானச் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய உலகளாவியப் பொருளாதார நெருக்கடியினால் நன்கொடை வழங்கும் நாடுகளின் இதற்கான முயற்சிகள் மந்தமடைந்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.

எய்ட்ஸ் நோய்க்கானச் சிகிச்சைகள் திட்டமிடப்பட்டபடி இடம் பெற்றால் 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இதனால் ஏற்படும் இறப்புகளை இருபது விழுக்காடாகக் குறைக்க முடியும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

மேலும், எய்ட்ஸ் நோயாளிகள் தங்கள் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல 50 சதவீத பேருந்து கட்டண சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது

இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் இளைஞர் மத்தியில் HIV நோய்க் கிருமிகள் அதிகமாகப் பரவி வருகின்றன என்றும் ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

- பகிர்வதே பலுகும் -

Tuesday, June 29, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 17.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இத்தாலியில் திருத்தந்தை புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார்

ஜூன்17,2010 இத்தாலியில் 2009ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Abruzzi பகுதிக்கு வரும் ஜூலை மாதம் திருத்தந்தை சென்று அங்குள்ள புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார் என்று திருப்பீட பத்திரிக்கை அலுவலகம் கூறுகிறது.
13ம் நூற்றாண்டில் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாம் செலெஸ்தின், ஐந்து மாதங்களே திருத்தந்தையாக இருந்த பின்னர் அந்தப் பொறுப்பைத் துறந்து, ஒரு துறவியாக வாழ்நாட்களைக் கழித்தார் என்பது வரலாறு.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Abruzzi பகுதியில் உள்ள L’Aquila நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்தப் பகுதிக்கு அவ்வாண்டு ஆகஸ்ட் மாதமே சென்றதோடு, அந்த ஆண்டை புனித செலெஸ்தின் ஆண்டாக அறிவித்தார். இந்த ஜூபிலி ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வருவதையொட்டி, திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்வார் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.
திருத்தந்தை மே மாதம் தொரினோவுக்கு மேற்கொண்ட பயணம் உட்பட, இவ்வாண்டு இத்தாலியின் நான்கு இடங்களுக்கு மெய்ப்புப் பணிக்கான திருப்பயணங்களை மேற்கொள்வார் என்று இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.


“இரத்தமயமான ஞாயிறு” குறித்த அறிக்கையை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது

ஜூன்17,2010 “இரத்தமயமான ஞாயிறு” குறித்த அறிக்கை, அச்சம்பவம் நிகழ்ந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருப்பதை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
1972ம் ஆண்டு சனவரி 30 ஞாயிறன்று, மக்கள் உரிமைக்கான போராட்டத்தில், அமைதியான முறையில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மேல் பிரித்தானியப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
எவ்வித காரணமும் இன்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்த விசாரணை 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இச்செவ்வாயன்று நிறைவு பெற்றது. விசாரணையின் முடிவில் வெளியான இந்த அறிக்கையில், பிரித்தானிய படைவீரர்களின் செயல் கண்டனத்திற்குரியது எனத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசின் சார்பாக, பிரதம மந்திரி David Cameron இச்செவ்வாயன்று மக்களவையில் மன்னிப்பு கேட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
இவ்வறிக்கை வெளியான செவ்வாய்க் கிழமையை செபத்தில் கழித்த அயர்லாந்து ஆயர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும், சிறப்பாக இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த, காயப்பட்ட நம் சகோதரர்கள் அனைவரையும் நம் மனதிலும், செபத்திலும் தொடர்ந்து நினைவுக் கூர்வோம் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.


இயேசு சபைக் குரு எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது

ஜூன்17,2010 இயேசு சபைக் குரு Gaston Roberge எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் இச்செவ்வாயன்று கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது.
"The Indian Film Theory: Flames of Sholay, Notes and Beyond" என்ற தலைப்பில் வெளியான இந்தப் புத்தகத்தை, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட வல்லுனர்கள், விமர்சனையாளர்கள் என அனைவரும் புகழ்ந்துள்ளனர்.
இந்தியாவுக்கே உரித்தான திரைப்பட கோட்பாடுகளை உலகறியச் செய்யும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளதென வங்காளத் திரைப்பட தயாரிப்பாளரும், அறிஞருமான Ashok Vishwanathan கூறினார்.
இன்றைய இந்தியாவில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெறும் திரைப் படங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த இந்திய நாட்டிய சாஸ்திரங்களில் காணக்கிடக்கின்றன என்று இப்புத்தகத்தின் ஆசிரியர் இயேசு சபைக் குரு Gaston Roberge கூறினார்.
‘சித்ரபானி’ என்ற தொடர்பு சாதன மையத்தை கொல்கொத்தாவில் உருவாக்கியதோடு, திரைப்படங்கள் குறித்து 25 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள குரு Gaston Roberge, iPod கலாச்சாரம் பெருகியுள்ள இந்தக் காலக் கட்டத்திலும், திரைப்படங்கள் இன்னும் மக்களிடையில் அழியாது என்று கூறினார்.


இளம் குருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ஆயர்

ஜூன்17,2010 குருக்கள் ஆண்டின் நிறைவையொட்டி வெளி வந்துள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் San Sebastian மறை மாவட்ட ஆயர் Jose Ignacio Munilla.
மலையேறும் முயற்சியில் ஓராண்டுக்கு முன் இறந்த இளம் குரு Pablo Dominguezஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம், குருத்துவம் குறித்த வாடிக்கையான, தவறான எண்ணங்களைச் சரி செய்யும் வகையில் வெளி வந்துள்ள ஒரு திரைப்படம் என்று ஆயர் Munilla கூறினார்.
குருக்களையும், குருத்துவத்தையும் பற்றி அண்மையில் எழுந்துள்ள பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில், குருத்துவத்தின் மாண்பை நிலைநிறுத்தும் இது போன்றதொரு திரைப்படம், அதுவும் குருக்கள் ஆண்டு நிறைவாகும் இந்த நேரத்தில் வெளி வந்திருப்பது பொருத்தமானதே என்று ஆயர் மேலும் கூறினார்.
“இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு குருவை சிலுவையில் நீ அறைந்தால், இந்த உலகம் உன்னைப் பாராட்டும்; மாறாக, ஒரு குருவை நீ பாராட்டினால், இந்த உலகம் உன்னைச் சிலுவையில் அறையும்” என்று இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் முன்னுரையாகப் பேசியிருப்பது திரைப்படத்தின் அழகான ஓர் ஆரம்பம் என்று ஆயர் Munilla கூறினார்.
ஆவணப் படத்தின் நாயகனான Pablo Dominguezன் விசுவாசம், தாழ்ச்சி, தாராள மனம், பணியில் அவர் கொண்டிருந்த தளராத ஆர்வம் இவை எல்லாம் பலர் மனதிலும் மேலான எண்ணங்களை விதைக்கும் என்று ஆயர் Jose Ignacio Munilla தெரிவித்தார்.


மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதென காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது

ஜூன்17,2010 மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதால், உலக நாடுகள் இந்த உணவு பற்றாக்குறையை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென காரித்தாஸ் அமைப்பு இப்புதன் கிழமை விண்ணப்பித்துள்ளது.
Chad, Mali, Burkina Faso ஆகிய நாடுகளில் உணவு பற்றாக்குறை இருந்தாலும், Niger பகுதியே மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு 80 லட்சம் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்றும் இப்பகுதியின் காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro கூறியுள்ளார்.
இந்த உணவு பற்றாக் குறை 2005ம் ஆண்டு ஏற்பட்ட குறையை விட அதிக அளவானது என்றும், இந்தப் பற்றாக் குறையால் மிக அதிகமாய் பாதிப்புக்கு உள்ளாகப் போவது குழந்தைகளே என்றும் Raymond Yoro மேலும் கூறினார்.
இந்த நெருக்கடி நிலை குறித்த எச்சரிக்கைகள் சென்ற ஆண்டு டிசம்பரிலேயே விடுக்கப்பட்டாலும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உலக நாடுகள் தாமதமாகச் செயல் படுகின்றன என்ற தன் வருத்தத்தையும் தெரிவித்தார், காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro.


சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – ஐ.நா. உயர் மட்ட அதிகாரிகள்

ஜூன்17,2010 சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துதல், அல்லது போர்ச் சூழ்நிலையில் அவர்களைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குதல், அவர்களது உடலுக்கும், உயிருக்கும் ஊறு விளைவித்தல் ஆகிய வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகள், குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடம் அந்நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் சென்ற மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமேரிக்கா ஆகிய நாடுகளில் சிறுவர், சிறுமிகளை போர் படையில் ஈடுபடுத்தும் 16 குழுக்களை அடையாளப்படுத்தினார்.
இந்தக் குழுக்களைப் பல வழிகளிலும் கட்டுப் படுத்தும், அல்லது தடை செய்யும் பொறுப்பு அரசுகள் மற்றும் பல்வேறு உலக நிறுவனங்களுக்கு உண்டு என்று ஐ.நா.பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியான ராதிகா கூமாரஸ்வாமி கூறினார்.
கடந்த ஒரு வாரமாக மத்திய அப்பரிக்காவின் ஆறு நாடுகளிடையே சிறார் படைவீர்கள் குறித்து நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள இந்த வேளையில், ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடமிருந்து வந்துள்ள இந்த கோரிக்கை குறிப்பிடத் தக்கது.


முல்லைதீவுப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ

ஜூன்17,2010 ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ இப்புதன்கிழமை இலங்கையின் முல்லைத்தீவு பகுதிக்கு வருகை தந்தார்.
அங்கு நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், அங்கு நடைபெறுகின்ற மறுசீரமைப்பு மற்றும் முன்னேற்றப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசினார்.
வற்றாப்பளை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன், குமாரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தனது முல்லைத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசியுள்ளார்.
வத்திக்கான் வானொலி – செய்திகள் 09.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், தேவை- கர்தினால் பெர்த்தோனே

ஜூன்09,2010 புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், இந்தக் கடினமான காலத்தில் திருச்சபைக்கும் மனித சமுதாயத்துக்கும் தேவைப்படுகிறார்கள் என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இப்புதனன்று கூறினார்.
ஓர் அருட்பணியாளர் கடவுளின் மனிதர், கிறிஸ்துவின் சாயலாக இருப்பவர் என்று சொல்வது அவர் செபிக்கும் போதும் திருவருட்சதானங்களை நிறைவேற்றும் போதும் மட்டும் அல்ல, அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கர்தினால் பெர்த்தோனே, கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இப்புதனன்று தொடங்கியுள்ளவேளை, இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே அருட்பணியாளர்கள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு இருக்கும் அன்பையும் அக்கறையையும் எடுத்துச் சொன்னார்.
ஓர் அருட்பணியாளர், அன்பாக, இரக்கமாக சிலுவையில் அறையப்பட்ட அன்பாக இருக்கும் கடவுளின் சாயல் என்றும் அவர் உரைததார்.
இந்த நிகழ்வானது இன்றைய அருட்பணியாளர்கள் என்ற தலைப்பில் நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால், இது ஒருமையில் இல்லாமல் பன்மையில் இருப்பது, அருட்பணியாளர்களின் வாழ்வு பலவகைப்பட்டதை இது குறித்து நிற்கிறது என்று விளக்கினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகளின் முதல் கட்டமாக இப்புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் “மனமாற்றமும் மறைப்பணியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஜெர்மனியின் Cologne கர்தினால் Joachim Meisner சிந்தனைகளை வழங்கினார். இந்த நிகழ்வு புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் கூடியிருந்தவர்களுக்கும் நேரடி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனமும் திருப்பலியும் நடைபெற்றன.
இவ்வியாழனன்று புனித மேரி மேஜர் பசிலிக்காவில் “சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெறும்.
வியாழன் மாலை குருக்கள் அனைவரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையைச் சந்திப்பர். திருநற்கருணை ஆராதனையுபம் ஆசீரும் இடம் பெறும்.
இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனத் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்

ஜூன்09,2010 ஸ்லோவேனியாவில் இறை சாட்சியாக உயிர் துறந்த 19 வயது இளைஞன், இத்தாலியின் 18 வயது பெண் உட்பட ஒன்பது பேர் வரும் மாதங்களில் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று திருப்பீடம் அறிவித்தது.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளித்த ஒப்புதலுடன் வெளியான இந்தச் செய்தியில், நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளராகப் பணி புரிந்த ஸ்பெயினைச் சார்ந்த Manuel Lazano Garrido இச்சனிக் கிழமையன்று ஸ்பெயினில் Linares நகரிலும், அதற்கடுத்த நாள் ஞாயிறன்று ஸ்லோவேனிய இளைஞன் Lojze Grozde, Celje நகரிலும் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்.
Lebanon நாட்டைச் சேர்ந்த Stephen Nehme, ஸ்பெயின் நாட்டினர்களான கப்பூச்சின் சபை சகோதரர் Leopoldo Sanchez Marquez de Alpandeire, திருச்சிலுவை சகோதரிகள் சபையின் Maria de la Immaculada Conepcion, இத்தாலியர்களான Chiara Badano என்ற இளம்பெண், அமல மரி பணியாளர்களின் சபையைத் தோற்றுவித்த Anna Maria Adorni, ரோமேனியாவின் ஆயரும் மறை சாட்சியுமான Szilard Bogdanffy, மரியாவின் தூய இதய சகோதரிகள் சபையை நிறுவிய பிரேசில் நாட்டு Maria Barbara, ஆகியவர்கள் முத்திபேறு பெற்றவர்களாக வரும் மாதங்களில் உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உலக வர்த்தக நிறுவனத்தில் பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Silvano Tomasi

ஜூன்09,2010 மரபணுக்களை மாற்றி நுண்ணுயிரை உருவாக்க வழங்கப்படும் உரிமை நன்னெறி பிரச்சனைகளை உருவாக்குவதுடன், இந்த உரிமை சரிவர பயன்படுத்தப்படவில்லை எனில், ஏழை நாடுகள் இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
இச்செவ்வாயன்று ஜெனீவாவில் உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த அறிவுச் சொத்துரிமை குழுவில் (TRIPS) பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
நுண்ணுயிர்கள் குறித்து வழங்கப்படும் இந்த உரிமை நன்னெறிக்கு முரணாகச் செல்வதுடன், வளர்ந்து வரும் பல ஏழை நாடுகளின் முன்னேற்றத்தையும் அதிகம் பாதிக்கும் என்று கூறிய பேராயர் Tomasi, உயிர்கள் குறித்த வளங்களில் தனியாருக்கு ஏக உரிமைகள் அளிப்பதால், அடிப்படை உணவு, மருந்துகள் போன்ற தேவைகளில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் வலியுறுத்தினார்.
தனியாருக்கு வழங்கப்படும் இந்த உரிமைகள், உணவு குறித்த பாதுகாப்புக்குப் பெரிதும் ஆபத்தானது என்றும் உலகம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து மக்களின், அதிலும் சிறப்பாக நலிந்த மக்கள், ஏழைகள் இவர்களின் நன்மைகளை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் Silvano Tomasi கூறினார்.


நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வத்திக்கான் உயர் அதிகாரி ஐ.நா.வை வலியுறுத்தல்

மே09,2010 அத்தியாவசிய மருந்துகள் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு உறுதி வழங்கி, நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 14வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் உலகின் நலவாழ்வுத்துறையில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளைப் பட்டியலிட்டார்.
தலத்திருச்சபைகளும் துறவு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் ஒவ்வொரு நாட்டிலும் சட்டத்தை மதித்து நலவாழ்வுத்துறையில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்து வருகின்றன என்றுரைத்த பேராயர், கத்தோலிக்கத் திருச்சபை, 5,378 மருத்துவமனைகள், 18,088 மருந்தகங்கள், 521 தொழுநோயாளர் மையங்கள், 15,448 முதியோர், மாற்றுத்திறனுடையோர் இல்லங்கள் உட்பட பல நலவாழ்வு மையங்களை நடத்தி வருகின்றது என்றார்.
வளரும் நாடுகளில் 50 விழுக்காட்டினர் ஏழ்மையினால் ஏற்படும் நோய்களால் துன்புறுகின்றனர், இது வளர்ந்த நாடுகளைவிட சுமார் பத்து மடங்கு அதிகம் என்றும் சுகாதாரத்திற்குப் பணம் செலவிடவேண்டியிருபப்தால் ஆண்டுதோறும் 10 கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் வளரும் நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 50 முதல் 90 விழுக்காடுவரை நோயாளிகளே செலவழிக்க வேண்டியிருக்கின்றது, சுமார் 200 கோடிப்பேர் அத்தியாவசிய மருந்துகளின்றி கஷ்டப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.

போபால் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை ஒத்துழைக்கும் - மத்திய பிரதேசத் தலத் திருச்சபை

ஜூன்09,2010 போபால் நச்சு வாயு விபத்து சம்பந்தமான வழக்கில் போபால் நீதிமன்றம் இத்திங்களன்று அளித்துள்ள தீர்ப்பு, நீதியை அவமதிக்கும் ஒரு குற்றம், எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று மத்திய பிரதேசத் தலத் திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தில், எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று கூறிய போபால் நீதி மன்றம், அவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வழங்கியிருப்பதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வளவு தாமதமாகவும், இவ்வளவு குறைந்த அளவு தண்டனையோடும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வகைத் தீர்ப்புகளால் மக்கள் வெறுப்படைந்து, பணத்திற்காக குற்றங்கள் புரிபவர்களின் துணையை நாடி, நீதியைத் தேடிக் கொள்ளும் அபாயங்கள் உள்ளன என்று ஜபல்பூர் ஆயர் Gerald Almeida கூறினார்.
இந்த விபத்தின் முக்கிய பொறுப்பாளரான Union Carbide நிறுவனத்தின் தலைவர் Warren Anderson எவ்வகையிலும் தண்டிக்கப்படாமல், அமெரிக்காவில் வாழ்ந்து வருவது இந்திய அரசையும், நீதித் துறையையும் கேலிக்குரியதாய் ஆக்கியுள்ளதென மத்திய பிரதேசத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட்தந்தை Anand Muttungal கூறினார்.
நீதிக்குப் புறம்பான இத்தகைய தீர்ப்புகளால் இந்தியர்கள் அனைவரும் அவமானப் படுகிறோம் என்று அனைத்திந்தியத் துறவியர் அவையின் செயலர் அருட் சகோதரர் Mani Mekkunnel கூறினார்.

விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடை - மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera

ஜூன்09,2010 மனிதர்கள் மேற்கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடையென்றும், வாழ்வின் பல மதிப்பீடுகளைப் பின் பற்ற இவை அதிகம் உதவும் என்றும் மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
இவ்வெள்ளியன்று தென் ஆப்ரிக்காவில் துவங்க இருக்கும் உலகக் கால்பந்து போட்டிகளுக்குச் செல்லும் மெக்சிகோ நாட்டு கால் பந்தாட்ட வீரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல் விசுவாச வாழ்வில் கிறிஸ்துவர்களும் ஆர்வமாய் பங்கேற்க வேண்டுமென கூறிய புனித பவுலின் சொற்களை நினைவு படுத்திய கர்தினால் Carrera, தியாகங்கள் இன்றி எந்த ஒரு நல்ல முடிவும் ஏற்படுவது கடினம் என்று கூறினார்.
இந்த உலகின் பரிசுகள், புகழ் எல்லாம் மறையக் கூடியவை ஆனால், மாறாமல், மறையாமல் இருக்கும் நிறைவாழ்வை நாடுவதே நம் கடமை என்பதையும் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera எடுத்துரைத்தார்.

சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை - காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர்

ஜூன்09,2010 தங்கள் சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எகிப்திலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள எகிப்து நாட்டில் கடந்த வாரம் அங்குள்ள நீதி மன்றம் ஒன்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த இருவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கியதை அடுத்து, அங்குள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான Shenouda மற்றும் அச்சபையின் 90 அதிகாரிகள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் பரவி வரும் இக்காலத்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை தன் கொள்கைகளை ஆதரித்து, நீதி மன்றத்தை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டங்களை மதிப்பது தங்கள் கடமை என்றாலும், விவிலியம் கூறும் சட்டங்களே காப்டிக் சபையின் அடிப்படையாகும் என்று தலைவரான Shenouda கூறினார்.
எகிப்தில் வாழும் 7 கோடியே 80 லட்சம் மக்களில் 10 விழுக்காடு கிறிஸ்துவர்கள். அந்தக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்கள்.

Monday, June 14, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 11.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குருக்களின் தவறானப் பாலியல் செயல்களுக்கு மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை

ஜூன் 11,2010 கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடவுளிடமிருந்து மிக உருக்கமுடன் மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அத்துடன், குருக்களின் இத்தகைய தவறானப் பாலியல் நடவடிக்கைகள் இனிமேல் ஒருபொழுதும் இடம்பெறாதிருப்பதற்குத் திருச்சபை தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்றும் திருத்தந்தை உறுதி கூறினார்.
உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சர்வதேச குருக்கள் ஆண்டின் நிறைவுக் கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக, இவ்வெள்ளி காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஏறக்குறைய பதினைந்தாயிரம் குருக்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, இச்சர்வதேச குருக்கள் ஆண்டில், குருக்களின் பாவங்கள், குறிப்பாகச் சிறாரை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் இவ்வாண்டு களங்கப்படுத்தப்பட்டு இருந்தது என்று தெரிவித்தார்.
குருத்துவ அழைத்தல்களுக்காகக் கடவுளிடம் கெஞ்ச வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, இவ்வாறு குருத்துவத் திருப்பணியில் இளையோரைச் சேர்க்கும் பொழுது அவர்கள் தங்கள் அழைத்தலுக்கு உண்மையாய் நடந்து கொள்வதற்குத் தேவையான எல்லாப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் திருச்சபை தொடர்ந்து உடன் செல்லும் என்று உறுதி கூறினார்.
இவ்வகை உருவாக்குதல் மூலமாகக் குருக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் துன்பமான சூழல்களில் இறைவன் அவர்களைப் பாதுகாத்து கண்காணித்து வருவதை அவர்கள் உணருவார்கள் என்றும் அவர் கூறினார்.
இயேசுவின் திருஇதய பெருவிழாவான இவ்வெள்ளி குருக்களின் தூய்மை வாழ்வுக்காகச் செபிக்கும் நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழாத் திருப்பலியின் பதிலுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுள்ள, ஆண்டவர் என் ஆயன், எனக்கேது குறை என்ற 23ம் திருப்பாடலை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, விசுவாசிகளைத் திசை திருப்பும் தற்போதைய உலகுப் போக்குக்கு எதிராக நின்று விசுவாசத்தைப் பாதுகாப்பதற்குத் திருச்சபை ஆயனின் கோலைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உண்மையில் இந்தக் கோலைப் பயன்படுத்துவது அன்பின் சேவையாக இருக்க வேண்டும் என்றும் ஆண்டவரின் கோலும் கைத்தடியும் எப்பொழுதும் பாதுகாப்பைத் தருகின்றது என்றும் திருத்தந்தை அறிவித்தார்.
திருச்சபையின் வரலாற்றில் இத்தனை குருக்கள் இணைந்து திருப்பலி நிகழ்த்தியது இதுவே முதன்முறையாகும். இத்திருப்பலியில் புனித ஜான் மரிய வியான்னி பயன்படுத்திய திருப்பலி பாத்திரத்தைத் திருத்தந்தை பயன்படுத்தினார். குருக்களின் பாதுகாவலராகிய இந்தப் புனிதர் இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டே இந்தச் சர்வதேச குருக்கள் ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கு நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவது அவசியம் – திருப்பீட அதிகாரி

ஜூன் 11,2010 எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கான நடவடிக்கைகள், நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவதன் வழியாக, அந்நோய்க்கான அடிப்படை காரணங்களைக் களைவதாய் இருக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் கேட்டுக் கொண்டார்.
எய்ட்ஸ் நோய் குறித்த ஐ.நா.பொது அவையின் 64வது அமர்வில் உரையாற்றிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்ய வேண்டுமானால், அந்நோய்க்கான மூலகாரணங்கள் அகற்றப்பட வேண்டும் மற்றும் அந்நோயாளிகள் மீது அன்பு காட்டப்பட வேண்டும் என்று கூறினார்.
உலகில் தினமும் 7,400 பேர் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர், தற்சமயம் ஏறத்தாழ 40 இலட்சம் பேர் இந்நோய்க்கான சிகிச்சை பெறுகின்றனர், அதேசமயம் 97 இலட்சம் பேருக்கு சிகிச்சை தேவைப்படுகின்றது, இரண்டு பேருக்கு சிகிச்சை தொடங்கும் பொழுது ஐந்து பேர் புதிதாகத் தாக்கப்படுகின்றனர் என்றும் பேராயர் மிலியோரே சுட்டிக் காட்டினார்.

அறநெறிக் கூறுகளை உள்ளடக்காத பொருளாதார நுட்பங்கள், ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது - வத்திக்கான் உயர் அதிகாரி

ஜூன்11,2010 அறநெறிக் கூறுகளை உள்ளடக்காதப் பொருளாதார நுட்பங்கள், தெளிவான மற்றும் ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது என்று, பன்னாட்டு தொழில் கருத்தரங்கில் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பன்னாட்டுத் தொழில் கருத்தரங்கின் 99வது அமர்வில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, தனியாட்களையும் குடும்பங்களையும் மிகவும் பாதித்துள்ள தற்போதைய உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் எதிர்நிலை விளைவுகள் குறித்து விளக்கினார்.
இந்த நெருக்கடிகளால், 2015ம் ஆண்டில், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்களும் உலக அளவில் 5 கோடியே 30 இலட்சம் பேரும் கடுமையான வறுமையில் வாழவேண்டியிருக்கும் என்றும் கூறிய பேராயர் தொமாசி, இவை, அமைப்புமுறை சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன என்றார்.
92 நாடுகளில், 75 விழுக்காட்டிற்கு மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியும், 200 கோடி முதல் 250 கோடிப்பேரின் வருவாயும் வேளாண்மையைச் சார்ந்து இருக்கின்றது என்றும் பேராயர் விவரித்தார்.
வேலைவாய்ப்பற்ற இளையோரின் எண்ணிக்கை 2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 85 இலட்சமாக அதிகரித்திருந்தது, இந்த அதிகரிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என்பதையும் பேராயர் தொமாசி கோடிட்டுக் காட்டினார்.

தென்னாப்ரிக்க கத்தோலிக்கத் திருச்சபை உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது

ஜூன் 11,2010 உலகிலுள்ள எல்லா தென்னாப்ரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளும் நோக்கத்தில் ஜொகானஸ்பர்க்கில் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான அமைதி கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது தலத்திருச்சபை.
இவ்வெள்ளியன்று தென்னாப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க்கில் 19-வது உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ளவேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை அதற்கு இணையான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வருவது குறித்துப் பேசிய திருச்சபை அதிகாரி ஒருவர், இதற்கான காரணத்தையும் விளக்கினார்.
உலகிலுள்ள எல்லாத் தென்னாப்ரிக்கர்களையும், சிறப்பாக, இந்த உலக நிகழ்வில் ஓரங்கட்டப்பட்டுள்ளோரை ஈடுபடுத்தும் நோக்கத்தில் இதனை நடத்துவதாகத் தெரிவித்தார், தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் பேரவையின் தொடர்புத்துறை அலுவலகத்தின் Antoine Soubrier.
கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் இந்த அமைதிக் கால்பந்து போட்டி, பன்னாட்டுக் கூறைக் கொண்டுள்ளது என்றும், இம்மாதம் 5ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமார் 15 நாடுகளின் 64 விளையாட்டு வீரர்கள் ஜொகானஸ்பர்க் நகரின் ஏழைகள் வாழும் பகுதியில் விளையாடுவார்கள் என்றும் Soubrier தெரிவித்தார்.
இது, தென்னாப்ரிக்கர்கள் ஒருவரையொருவர் அறிய வாய்ப்பாக அமைகின்றது என்றும் அவர் கூறினார்.
ஜூன் 11, இவ்வெள்ளி மாலை தொடங்கியுள்ள, உலககோப்பை கால்பந்து போட்டி, ஜுலை 11ம்தேதி வரை நடக்கும். இத்துவக்க விழாவில் சுமார் 1,500 கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

பிலிப்பைன்ஸின் புதிய அரசுத்தலைவரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயர்கள் ஆதரவு

ஜூன்11,2010 பிலிப்பைன்சில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் Benigno Aquino III வின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை, அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிலிப்பைன்சில் தேசிய அளவில் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்நாட்டு காங்கிரஸ் அவை, நாட்டின் 15வது அரசுத்தலைவர் Benigno Aquino என்றும் உதவி அரசுத்தலைவர் Jejomar Binay என்றும் இவ்வாரத்தில் அறிவித்தது.
புதிய அரசுத்தலைவரின் கொள்கைகள் செயல்வடிவம் எடுக்க ஆயர்கள் உதவுவதாக உறுதி கூறிய, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar, இவர் நேர்மையான அதிகாரிகளை நியமிப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஊழலைக் குறைத்தல், வரிகள் மீது கடுமையான கொள்கைகளைக் கொண்டு வருதல் உட்பட பல கோட்பாடுகளைத் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்திருந்தார் அக்குய்னோ.

மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளன

ஜூன்11,2010 சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் தீர்மானித்திருப்பதை வரவேற்றுள்ளது யூனிசெப் என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் அமைப்பு.
காமரூன், சாட், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நைஜர், நைஜீரியா, சூடான் ஆகிய ஆறு நாடுகளும், சிறார் பற்றிய சர்வதேச உரிமைகள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் தீர்மான அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்நடவடிக்கை, ஆப்ரிக்காவின் புதிய தொடக்கமாக இருக்கின்றது என்று பாராட்டினார் சாட் நாட்டிலுள்ள யூனிசெப் பிரதிநிதி Marzio Babille.
சிறார் விபசாரம், சிறார் படைவீரர், சிறார் வியாபாரம் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களை 2012ம் ஆண்டுக்குள் எல்லா நாடுகளும் முழுமையாய் அமல்படுத்துமாறு கடந்த மாதத்தில் ஐ.நா.பொதுச் செயலர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



வத்திக்கான் வானொலி – செய்திகள் 12.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியினால் பலன் என்ன? - திருத்தந்தை
ஜூன்12,2010 நீதி, சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் சமத்துவத்தை வளர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், இன்றைய மற்றும் வருங்கால ஐரோப்பாவுக்கு நன்மைபயக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியின் 160 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சமூகநலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் இந்த வங்கியின் நடவடிக்கைகளுக்குத் திருப்பீடம் ஆதரவு அளிக்கின்றது என்றுரைத்தார்.
மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தும் சர்வாதிகாரக் கருத்துக் கோட்பாடுகளால் ஏற்படும் பலன் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இக்காலத்தில், அப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், வெறும் நிதியை மட்டும் சார்ந்ததாக இருக்கக் கூடாது எனவும் திருத்தந்தைக் கேட்டுக் கொண்டார்.
1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியில் 1973ம் ஆண்டு அங்கத்தினராகச் சேர்ந்தது திருப்பீடம்.

மிகஅழகான காங்கோ - கத்தோலிக்கத் திருச்சபையின் முயற்சிகள்
ஜூன்12,2010 காங்கோ ஜனநாயகக் குடியரசு விடுதலை அடைந்ததன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை, என்றுமில்லாத மிக அழகான காங்கோவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
காங்கோவின் சமூகக் கட்டமைப்பைச் சீர்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை, கின்ஷாசா கத்தோலிக்கப் பல்கலைகழகத்தில் மூன்று நாள் கருத்தரங்கையும் நடத்தியுள்ளது.
பொன்விழா என்றால், நாம் எங்கிருந்து வந்தோம், நாம் எப்படி இருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்திப்பதே என்றுரைத்த ஆயர்கள், நாட்டின் நலனுக்குக் கேடு ஏற்படும் விதத்தில் இடம்பெற்ற தவறுகளுக்காகக் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் நாட்டினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதி அமைதி, பணி என்ற விருதுவாக்கைக் கொண்டுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி விடுதலை அடைந்தது. இந்நாடு 1997ம் ஆண்டுவரை சயீர் என்று அழைக்கப்பட்டது.

திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் - கேரள ஆயர்கள்

ஜூன்12,2010 திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சபை விழாக்கள் தற்சமயம் ஆன்மீகம் குறைந்து வியாபாரமாக, மிகுந்த ஆடம்பரமாக நடைபெற்று வருகின்றன, இதனைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கேரள ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத் கூறினார்.
விழாக்களில் இடம்பெறும் வானவேடிக்கைகள், போக்குவரத்து நெருக்கடிகள், நீண்ட பவனிகள், அலங்கார வளைவுகள் போன்றவைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு தேவை எனவும் கேரளாவின் சுமார் 50 இலட்சம் கத்தோலிக்கரிடம் கூறியுள்ளனர் ஆயர்கள்.
திருச்சபையில் கொண்டாடப்படும் விழாக்கள் கிறிஸ்தவச் சமூகத்தின் ஆன்மீகத்தைத் தட்டி எழுப்பி அதனைப் புதுப்பிப்பதாக இருக்க வேண்டும் என்று கேரள ஆயர்கள் இவ்வாரத்தில் நிறைவு செய்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.
கேரள மாநிலத்தில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இதனைக் குறைப்பதற்குப் பங்குத்தளங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
கேரளாவின் 3 கோடியே 50 இலட்சம் பேரில் 19 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் - திருச்சபை மனித உரிமை நடவடிக்கையாளர்

ஜூன் 12, 2010 ஒரிசா மாநிலத்தில் பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் சுரண்டப்படுவதால் இந்தியாவிலேயே அம்மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் என்று திருச்சபை மனித உரிமை நடவடிக்கையாளர் ஒருவர் கூறினார்.
பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் அதிகமாக வாழும் பகுதிகளை பல்வேறு தொழிற்சாலைகளும் வியாபாரிகளும் ஆக்ரமிப்பதால் குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன என்று அருட்தந்தை நிக்கோலாஸ் பார்வா அறிவித்தார்.
இந்த மக்கள் எப்பொழுதெல்லாம் கொதித்து எழுகிறார்களோ அப்பொழுதெல்லாம், கந்தமால் மாவட்டத்தில் இடம் பெற்றது போன்று, அவர்கள் வன்முறையால் நசுக்கப்படுகின்றனர் என்று அக்குரு மேலும் கூறினார்.
ஒரிசாவின் 3 கோடியே 68 இலட்சம் மக்களில் சுமார் 40 விழுக்காட்டினர் பூர்வீக மற்றும் தலித் இனத்தவர். இந்த மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களில் ஏறக்குறைய 90 விழுக்காடு போதிய ஆதாரங்கள் இன்றி நிரூபிக்கப்படாமல் இருக்கின்றது என்று அண்மையில் மத்திய சமூகநீதி அமைச்சர் தனது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சூதாடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை கவலை

ஜூன்12,2010 தென்னாப்ரிக்காவின் ஜோஹானஸ்பர்கில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சூதாட்டம் தன்னிலே நல்லது அல்ல என்று எச்சரித்துள்ள இயேசு சபை அருள்தந்தை Robert Ng Chi-fun, கால்பந்து போட்டியை வைத்து விளையாடும் சூதாட்டம் ஏமாற்றத்திற்கும் இட்டுச் செல்லக்கூடும் எனக் கூறியுள்ளார். இவர், ஹாங்காங் தூயஆவி குருத்துவக் கல்லூரியில் நன்னெறி இறையியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
மேலும், கால்பந்து போட்டியை வைத்து சூதாடும் மக்களில் பெரும்பாலானோர் 18க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று, இந்தச் சூதாட்டம் குறித்து 2003ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை ஆய்வு நடத்திய ஹாங்காங் காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.

பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு ஐ.நா.நிறுவனங்கள் அழைப்பு

ஜூன்12,2010 உலகில் 5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 15 கோடிச் சிறார் தொழிலாளர்கள் இன்னும் வேலை செய்கின்ற வேளை, சிறார் தொழிலாளர்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு அரசுகளும் தனியார் அமைப்புகளும் உதவுமாறு கேட்டுள்ளது யூனிசெப் நிறுவனம்.
இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும், சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளது ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப்.
கல்வி, வறுமை ஒழிப்பு, பாலியல் சமத்துவம், எய்ட்ஸ் நோய் ஒழிப்பு உட்பட மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளை, சிறார் தொழில்முறை இன்னும் நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் யூனிசெப்பின் சிறார் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் சூசன் பிஸ்ஸெல்.
அரசியல் ரீதியாக மட்டும் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்றுரைத்த பிஸ்ஸெல், அனைத்து மட்டங்களிலும் இதற்கு ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
சிறார் தொழிலாளர் ஒழிப்புமுறை தினம் 2002ம் ஆண்டில் முதன்முறையாகக் கடைபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் இதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும் உலகில் 5க்கும் 17 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர்கள் உள்ளனர் என்று உலக தொழில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாள், 2002ம் ஆண்டிலிருந்து ஜூன் 12ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வேலைவாய்ப்பு UNIDO உதவி

ஜூன்12,2010 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பதாயிரம் விதவைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டத்திற்கு UNIDO என்ற ஐ.நா.வின் தொழில் வளர்ச்சி நிறுவனம் உதவி வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்குத் தொழிற்நுட்பம் மற்றும்பிற மதிப்பீட்டுத் திட்டங்களுக்கு UNIDO நிறுவனம் உதவி வருவதாக அதன் இயக்குனர் Kandeh Yumkella அறிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் மூன்றாவது இடம்

ஜூன்12,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் மூன்றாவது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர் என்று அந்நாட்டுக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர்களில் மெக்சிகர்கள் தொடர்ந்து முதலிடத்திலும், அடுத்த இடத்தை பிலிப்பைன்ஸ் நாட்டினரும் மூன்றாவது இடத்தை இந்தியர்களும் பிடித்துள்ளனர் என்று அக்கணக்கெடுப்பு அறிவிக்கிறது.
2008ல் எடுக்கப்பட் மக்கள் தொகைக் கணக்குப்படி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 23 இலட்சமாகும். இவர்களில் 4 இலட்சத்து 55 ஆயிரம் பேர் அங்கேயே பிறந்து வளர்ந்த வம்சாவளியினர். 66.4 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள்.
கடந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பில் வெளிநாட்டினர் வரிசையில், சீனர்கள் இந்தியர்களைவிட முன்னணியில் இருந்தனர், ஆனால் தற்சமயம், சீனர்களைவிட இந்தியர்கள் முன்னணியில் இருக்கின்றனர் என்று அக்கணக்கெடுப்பு மேலும் கூறுகிறது.
நியூயார்க், கலிபோர்னியா, நியூஜெர்சி, டெக்சாஸ் பகுதிகளில், மொத்தம் உள்ள இந்தியர்களில் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் நல்ல கல்வி அறிவு உடையவர்களாகவும் உள்ளனர் என அது கூறுகிறது.

Thursday, June 10, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 09.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், தேவை- கர்தினால் பெர்த்தோனே

ஜூன்09,2010 புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், இந்தக் கடினமான காலத்தில் திருச்சபைக்கும் மனித சமுதாயத்துக்கும் தேவைப்படுகிறார்கள் என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இப்புதனன்று கூறினார்.
ஓர் அருட்பணியாளர் கடவுளின் மனிதர், கிறிஸ்துவின் சாயலாக இருப்பவர் என்று சொல்வது அவர் செபிக்கும் போதும் திருவருட்சதானங்களை நிறைவேற்றும் போதும் மட்டும் அல்ல, அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கர்தினால் பெர்த்தோனே, கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இப்புதனன்று தொடங்கியுள்ளவேளை, இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே அருட்பணியாளர்கள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு இருக்கும் அன்பையும் அக்கறையையும் எடுத்துச் சொன்னார்.
ஓர் அருட்பணியாளர், அன்பாக, இரக்கமாக சிலுவையில் அறையப்பட்ட அன்பாக இருக்கும் கடவுளின் சாயல் என்றும் அவர் உரைததார்.
இந்த நிகழ்வானது இன்றைய அருட்பணியாளர்கள் என்ற தலைப்பில் நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால், இது ஒருமையில் இல்லாமல் பன்மையில் இருப்பது, அருட்பணியாளர்களின் வாழ்வு பலவகைப்பட்டதை இது குறித்து நிற்கிறது என்று விளக்கினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகளின் முதல் கட்டமாக இப்புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் “மனமாற்றமும் மறைப்பணியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஜெர்மனியின் Cologne கர்தினால் Joachim Meisner சிந்தனைகளை வழங்கினார். இந்த நிகழ்வு புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் கூடியிருந்தவர்களுக்கும் நேரடி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனமும் திருப்பலியும் நடைபெற்றன.
இவ்வியாழனன்று புனித மேரி மேஜர் பசிலிக்காவில் “சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெறும்.
வியாழன் மாலை குருக்கள் அனைவரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையைச் சந்திப்பர். திருநற்கருணை ஆராதனையுபம் ஆசீரும் இடம் பெறும்.
இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனத் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்

ஜூன்09,2010 ஸ்லோவேனியாவில் இறை சாட்சியாக உயிர் துறந்த 19 வயது இளைஞன், இத்தாலியின் 18 வயது பெண் உட்பட ஒன்பது பேர் வரும் மாதங்களில் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று திருப்பீடம் அறிவித்தது.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளித்த ஒப்புதலுடன் வெளியான இந்தச் செய்தியில், நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளராகப் பணி புரிந்த ஸ்பெயினைச் சார்ந்த Manuel Lazano Garrido இச்சனிக் கிழமையன்று ஸ்பெயினில் Linares நகரிலும், அதற்கடுத்த நாள் ஞாயிறன்று ஸ்லோவேனிய இளைஞன் Lojze Grozde, Celje நகரிலும் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்.
Lebanon நாட்டைச் சேர்ந்த Stephen Nehme, ஸ்பெயின் நாட்டினர்களான கப்பூச்சின் சபை சகோதரர் Leopoldo Sanchez Marquez de Alpandeire, திருச்சிலுவை சகோதரிகள் சபையின் Maria de la Immaculada Conepcion, இத்தாலியர்களான Chiara Badano என்ற இளம்பெண், அமல மரி பணியாளர்களின் சபையைத் தோற்றுவித்த Anna Maria Adorni, ரோமேனியாவின் ஆயரும் மறை சாட்சியுமான Szilard Bogdanffy, மரியாவின் தூய இதய சகோதரிகள் சபையை நிறுவிய பிரேசில் நாட்டு Maria Barbara, ஆகியவர்கள் முத்திபேறு பெற்றவர்களாக வரும் மாதங்களில் உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உலக வர்த்தக நிறுவனத்தில் பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Silvano Tomasi

ஜூன்09,2010 மரபணுக்களை மாற்றி நுண்ணுயிரை உருவாக்க வழங்கப்படும் உரிமை நன்னெறி பிரச்சனைகளை உருவாக்குவதுடன், இந்த உரிமை சரிவர பயன்படுத்தப்படவில்லை எனில், ஏழை நாடுகள் இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
இச்செவ்வாயன்று ஜெனீவாவில் உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த அறிவுச் சொத்துரிமை குழுவில் (TRIPS) பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
நுண்ணுயிர்கள் குறித்து வழங்கப்படும் இந்த உரிமை நன்னெறிக்கு முரணாகச் செல்வதுடன், வளர்ந்து வரும் பல ஏழை நாடுகளின் முன்னேற்றத்தையும் அதிகம் பாதிக்கும் என்று கூறிய பேராயர் Tomasi, உயிர்கள் குறித்த வளங்களில் தனியாருக்கு ஏக உரிமைகள் அளிப்பதால், அடிப்படை உணவு, மருந்துகள் போன்ற தேவைகளில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் வலியுறுத்தினார்.
தனியாருக்கு வழங்கப்படும் இந்த உரிமைகள், உணவு குறித்த பாதுகாப்புக்குப் பெரிதும் ஆபத்தானது என்றும் உலகம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து மக்களின், அதிலும் சிறப்பாக நலிந்த மக்கள், ஏழைகள் இவர்களின் நன்மைகளை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் Silvano Tomasi கூறினார்.


நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வத்திக்கான் உயர் அதிகாரி ஐ.நா.வை வலியுறுத்தல்

மே09,2010 அத்தியாவசிய மருந்துகள் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு உறுதி வழங்கி, நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 14வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் உலகின் நலவாழ்வுத்துறையில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளைப் பட்டியலிட்டார்.
தலத்திருச்சபைகளும் துறவு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் ஒவ்வொரு நாட்டிலும் சட்டத்தை மதித்து நலவாழ்வுத்துறையில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்து வருகின்றன என்றுரைத்த பேராயர், கத்தோலிக்கத் திருச்சபை, 5,378 மருத்துவமனைகள், 18,088 மருந்தகங்கள், 521 தொழுநோயாளர் மையங்கள், 15,448 முதியோர், மாற்றுத்திறனுடையோர் இல்லங்கள் உட்பட பல நலவாழ்வு மையங்களை நடத்தி வருகின்றது என்றார்.
வளரும் நாடுகளில் 50 விழுக்காட்டினர் ஏழ்மையினால் ஏற்படும் நோய்களால் துன்புறுகின்றனர், இது வளர்ந்த நாடுகளைவிட சுமார் பத்து மடங்கு அதிகம் என்றும் சுகாதாரத்திற்குப் பணம் செலவிடவேண்டியிருபப்தால் ஆண்டுதோறும் 10 கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் வளரும் நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 50 முதல் 90 விழுக்காடுவரை நோயாளிகளே செலவழிக்க வேண்டியிருக்கின்றது, சுமார் 200 கோடிப்பேர் அத்தியாவசிய மருந்துகளின்றி கஷ்டப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.

போபால் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை ஒத்துழைக்கும் - மத்திய பிரதேசத் தலத் திருச்சபை

ஜூன்09,2010 போபால் நச்சு வாயு விபத்து சம்பந்தமான வழக்கில் போபால் நீதிமன்றம் இத்திங்களன்று அளித்துள்ள தீர்ப்பு, நீதியை அவமதிக்கும் ஒரு குற்றம், எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று மத்திய பிரதேசத் தலத் திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தில், எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று கூறிய போபால் நீதி மன்றம், அவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வழங்கியிருப்பதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வளவு தாமதமாகவும், இவ்வளவு குறைந்த அளவு தண்டனையோடும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வகைத் தீர்ப்புகளால் மக்கள் வெறுப்படைந்து, பணத்திற்காக குற்றங்கள் புரிபவர்களின் துணையை நாடி, நீதியைத் தேடிக் கொள்ளும் அபாயங்கள் உள்ளன என்று ஜபல்பூர் ஆயர் Gerald Almeida கூறினார்.
இந்த விபத்தின் முக்கிய பொறுப்பாளரான Union Carbide நிறுவனத்தின் தலைவர் Warren Anderson எவ்வகையிலும் தண்டிக்கப்படாமல், அமெரிக்காவில் வாழ்ந்து வருவது இந்திய அரசையும், நீதித் துறையையும் கேலிக்குரியதாய் ஆக்கியுள்ளதென மத்திய பிரதேசத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட்தந்தை Anand Muttungal கூறினார்.
நீதிக்குப் புறம்பான இத்தகைய தீர்ப்புகளால் இந்தியர்கள் அனைவரும் அவமானப் படுகிறோம் என்று அனைத்திந்தியத் துறவியர் அவையின் செயலர் அருட் சகோதரர் Mani Mekkunnel கூறினார்.

விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடை - மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera

ஜூன்09,2010 மனிதர்கள் மேற்கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடையென்றும், வாழ்வின் பல மதிப்பீடுகளைப் பின் பற்ற இவை அதிகம் உதவும் என்றும் மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
இவ்வெள்ளியன்று தென் ஆப்ரிக்காவில் துவங்க இருக்கும் உலகக் கால்பந்து போட்டிகளுக்குச் செல்லும் மெக்சிகோ நாட்டு கால் பந்தாட்ட வீரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல் விசுவாச வாழ்வில் கிறிஸ்துவர்களும் ஆர்வமாய் பங்கேற்க வேண்டுமென கூறிய புனித பவுலின் சொற்களை நினைவு படுத்திய கர்தினால் Carrera, தியாகங்கள் இன்றி எந்த ஒரு நல்ல முடிவும் ஏற்படுவது கடினம் என்று கூறினார்.
இந்த உலகின் பரிசுகள், புகழ் எல்லாம் மறையக் கூடியவை ஆனால், மாறாமல், மறையாமல் இருக்கும் நிறைவாழ்வை நாடுவதே நம் கடமை என்பதையும் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera எடுத்துரைத்தார்.

சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை - காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர்

ஜூன்09,2010 தங்கள் சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எகிப்திலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள எகிப்து நாட்டில் கடந்த வாரம் அங்குள்ள நீதி மன்றம் ஒன்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த இருவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கியதை அடுத்து, அங்குள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான Shenouda மற்றும் அச்சபையின் 90 அதிகாரிகள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் பரவி வரும் இக்காலத்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை தன் கொள்கைகளை ஆதரித்து, நீதி மன்றத்தை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டங்களை மதிப்பது தங்கள் கடமை என்றாலும், விவிலியம் கூறும் சட்டங்களே காப்டிக் சபையின் அடிப்படையாகும் என்று தலைவரான Shenouda கூறினார்.
எகிப்தில் வாழும் 7 கோடியே 80 லட்சம் மக்களில் 10 விழுக்காடு கிறிஸ்துவர்கள். அந்தக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்கள்.



வத்திக்கான் வானொலி – செய்திகள் 00.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்பெயின் பிரதமரைத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை

ஜூன்10,2010 ஸ்பெயின் பிரதமர் José Luis Rodríguez Zapateroஐ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்தின் நூலக அறையில் சுமார் முப்பது நிமிடங்கள் திருத்தந்தையுடன் தனியாகப் பேசிய பிரதமர் Zapatero, ஸ்பெயினின் வெளியுறவுத்துறை அமைச்சர் Miguel Ángel Moratinos உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குழுவைத் திருத்தந்தையிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஸ்பெயின் பிரதமர் Zapatero.
உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, அதன் அறநெறிக் கூறுகள், மத்திய அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளின் நிலைமைகள், இன்னும், ஸ்பெயினில் கொண்டுவரப்பட்டுள்ள சமய சுதந்திரம் குறித்த புதிய சட்டம், கல்வியின் முக்கியத்துவம், மனித வாழ்வின் புனிதம் போன்றவை பற்றிய திருச்சபையின் எண்ணங்கள் இச்சந்திப்புக்களின் போது கலந்து பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், CERN என்ற அணு ஆய்வுக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் இயக்குனர் Rolf-Dieter Heuer, நாடுகளுடனான உறவுகளின் பிரதிநிதி Walter Friedemann Eder ஆகியோரையும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை.


அருட்பணியாளர்கள் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே மறையுரையாற்றினார்

ஜூன்10,2010 ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வில் செபம் இன்றியமையாத உயிர்மூச்சாக இருக்கின்றது, அது குருத்துவ வாழ்வுக்கு இன்னும் சிறப்பான விதத்தில் அத்தியாவசியத் தேவையாக அமைந்துள்ளது என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இடம் பெற்றுவரும் வேளை, இவ்வியாழன் காலை புனித பவுல் பசிலிக்காவில் திருப்பிலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
“சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இத்தலைப்பை மையமாக வைத்துப் பேசிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே, எருசலேம் மாடியறையின் ஆன்மீக அனுபவம் பற்றி விளக்கினார்.
ஆண்டவரின் சகோதரர்கள் என்பது, அவரது வாழ்வைப் பகிர்வதாகும், ஒவ்வொரு நாளும் அவரோடு சேர்ந்து திருஅப்பத்தைப் பிட்டு வாழ்வதாகும் என்றும் உரைத்த கர்தினால், தாயாய் இருப்பது என்பது உலகில் கிறிஸ்துவைத் தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தச் சர்வதேச ஆண்டின் நிறைவு நாளான இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். அதில் குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனவும் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருத்தந்தை 12ம் பத்திநாதர் அமெரிக்க அரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது

திருத்தந்தை 12ம் பத்திநாதர் அமெரிக்க அரசுத் தலைவர் Franklin Rooseveltக்கு எழுதிய கடிதம் ஒன்று இப்புதனன்று மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
Knights of Columbus உரோமை நகருக்கு வந்து 90 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவர்களது பல்வேறு செயல்பாடுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ள கண்காட்சி ஒன்றை உரோம் நகரின் மேயரும், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயும் இப்புதனன்று திறந்து வைத்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனிக்கு எதிரான கூட்டமைப்பு, உரோமைய நகரத்தை இருமுறை தாக்கியதை அடுத்து, 1943ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 அன்று திருத்தந்தை அமெரிக்க அரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், அப்பாவி மக்களையும் கோவில்களையும், மதத் தொடர்புடைய நிறுவனங்களையும் தாக்குதலுக்கு உட்படுத்தக்கூடாதேன்று கேட்டுக் கொண்டுள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உரோமை நகரில் தாக்குதல்களுக்கு உள்ளான புனித லாரன்ஸ் சதுக்கத்திற்குத் திருத்தந்தை 12ம் பத்திநாதர் சென்று, அங்குள்ள மக்களைக் கண்டு ஆறுதல் சொன்னதையும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை கத்தோலிக்கர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து, அவர்களை ஒன்றிணைக்க குஜராத் காவல் துறையினர் அண்மையில் நடத்திய கிரிக்கெட் போட்டியை கத்தோலிக்கர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இந்து, முஸ்லிம் கலவரங்கள் பலவற்றைக் கண்டுள்ள Vadodara நகரில் இவ்விரு மதத்தினருக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சி என்று அகமதாபாத்தில் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனராக உள்ள இயேசு சபை குரு Cedric Prakash கூறினார்.
இந்த போட்டியுடன் காவல் துறையினர் தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொண்டால், இது வெறும் மேல் பூச்சு வேலையாக முடியும் என்றும், மாறாக, இந்த முயற்சியைத் தொடர்ந்து, இந்து, முஸ்லிம் இரு குழுக்களுக்கும் இடையே, இன்னும் பல நிலைகளில் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்க்க காவல் துறையும் மற்ற அரசுத் துறைகளும் முயற்சி செய்வதே இந்த முதல் முயற்சியை முழுமைக்குக் கொண்டுவரும் என்றும் குரு Cedric Prakash மேலும் கூறினார்.
2002ம் ஆண்டு நடந்த கலவரங்களின்போது இடிக்கப்பட்ட முஸ்லிம் தர்காக்களை குஜராத் அரசு மீண்டும் கட்டித் தரும் பட்சத்தில், அரசின் இந்த முயற்சி இன்னும் நம்பத் தகுந்ததாக மாறும் என்றார் குரு Cedric Prakash.
கிரிக்கெட் மீது இளையோர் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதால், இந்த கிரிக்கெட் போட்டி இளம் தலைமுறையினரிடையே மதங்களைக் கடந்த நம்பிக்கையை வளர்க்கும் என்று Vadodara மறைமாவட்ட முதன்மை குரு Joel R.Pais கூறினார்.


மங்கோலிய நாட்டின் உட்பகுதியில் இருந்த ஒரே கத்தோலிக்கக் கோவில் இரவோடிரவாக இடித்துத் தரை மட்டம்

மங்கோலிய நாட்டின் உட்பகுதியில் Ordos என்ற நகரில் இருந்த ஒரே கத்தோலிக்கக் கோவில் இத்திங்களன்று இரவோடிரவாக இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.
இத்திங்கள் நடு இரவில் 100 பேர் அளவிலான ஓர் கும்பல் கோவிலை இடிக்க ஆரம்பித்த போது, அந்த சப்தம் கேட்டு அங்கு வந்த அருட்தந்தை Gao En, அவருடன் வந்த பொதுநிலையினரின் தலைவர் Yang Yishi இருவரும் இடித்துக் கொண்டிருந்தவர்களைத் தடுத்த போது, அவர்கள் இருவரும் கை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
செவ்வாய் காலையில் திருப்பலிக்கு வந்த விசுவாசிகள் கோவில் இடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் என்றும் இடிக்கப்பட்ட இடத்தில் வேறு எந்த கட்டிடமும் எழுப்பப்படாமல் இருக்க, அந்த இடிபாடுகளைச் சுற்றி விசுவாசிகள் முகாம்கள் அமைத்துத் தங்கியுள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
கைது செய்யப்பட்ட குருவும், பொதுநிலையினரின் தலைவரும் ஒரு நாள் சிறைகாவலுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


பெற்றோர் ஒரு நாளில் 49 நிமிடங்களே குழந்தைகளுடன் தங்கள் நேரத்தைச் செலவு செய்கின்றனர் - இங்கிலாந்தில் வெளியான அறிக்கை

பெற்றோர் ஒரு சராசரி நாளில் 49 நிமிடங்களே குழந்தைகளுடன் தங்கள் நேரத்தைச் செலவு செய்கின்றனர் என்று இங்கிலாந்தில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
கத்தோலிக்க குழந்தைகளின் சங்கம் என்ற அமைப்பு, அண்மையில் 3000 பெற்றோர், 1000 குழந்தைகள் மத்தியில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், பெற்றோர் இப்படி குறைவான நேரம் செலவிட ஒரு முக்கிய காரணம் பணமே என்ற கூடுதல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குத் தரமான கல்வியைத் தருவதற்காக பெற்றோர் அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதென்பது உண்மையென்றாலும், இதனால், பெற்றோரின் அன்பைப் பெறாமல், குழந்தைகள் புறக்கணிக்கப் படுவதும் வருத்தமான ஒர் உண்மை என்று இந்தக் கணிப்பை நடத்திய Dr Rosemary Keenan கூறினார்.
இங்கிலாந்தில் குடும்ப வாரம் கொண்டாடப்படவிருக்கும் இந்தச் சூழலில், வெளி வந்திருக்கும் இந்த கணிப்பின் படி, குழந்தைகளில் 66 விழுக்காட்டினர் தங்கள் பெற்றோர், குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
1859ம் ஆண்டு Westminster மறைமாவட்டத்தில் நிறுவப்பட்ட கத்தோலிக்கக் குழந்தைகள் சங்கம், மதம், இனம் இவைகளைக் கடந்து, குடும்பங்களுக்கு, சிறப்பாகக் குழந்தைகளுக்கு, கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.


மின் சக்தியை உருவாக்கும் சன்னல்களை வடிவமைத்தவர் மில்லேன்னியத்திற்கான தொழில் நுட்பப் பரிசை வென்றார்

மின் சக்தியை உருவாக்கும் சன்னல்களை வடிவமைத்த பேராசிரியர் Michael Gratzel மில்லேன்னியத்திற்கான தொழில் நுட்பப் பரிசை வென்றிருக்கிறார்.
Finland தொழில்நுட்ப சங்கம் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கும் இந்தப் பரிசு, இப்புதனன்று Helsinkiல் பேராசிரியர் Michael Gratzelக்கு வழங்கப்பட்டது.
தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து தங்களுக்கும் உலகத்திற்கும் தேவையான சக்தியை உருவாக்குவதைப் போல், சூரிய ஒளியைப் பெறும் நமது சன்னல் கண்ணாடிகளும் ஏன் நமக்குத் தேவையான மின்சார சக்தியை உருவாக்கக் கூடாது என்ற கேள்வியே இந்த கண்டுபிடிப்பின் அடிப்படையாக இருந்ததென பேராசிரியர் Gratzel செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விருதுடன் வழங்கப்பட்டுள்ள 48,000,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுத்தொகை இந்த ஆராய்ச்சிக்கே மீண்டும் செலவழிக்கப்படும் என்று பேராசிரியர் Gratzel கூறினார்.
கணணி வலைத்தளம் (Web) என்ற தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த Sir Tim Berner-Lee, சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Tuesday, June 8, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 05.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சைப்ரஸிற் நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணம் – இரண்டாம் நாள்

விசுவாசத்தில் அனைத்துக் கிறிஸ்தவர்களின் தந்தையர்களான புனிதர்கள் பவுல் மற்றும் பர்னபாஸின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு திருப்பயணியாக நான் இங்கு வந்துள்ளேன் என திருத்தந்தை தன் முதல் உரையில் கூறி சைப்ரஸிற்கானப் பயணத்தைத் துவக்கியுள்ளார்.
சைப்ரஸ் நாடு திருத்தந்தைக்கு வழங்கிய வரவேற்பில் உரையாற்றிய அரசுத்தலைவர் தெமத்ரியூஸ் கிறிஸ்டோஃபியாஸ், திருத்தந்தையின் வருகை அமைதியின் செய்தியைக் கொண்டு வந்துள்ளது என்றார். 1974ம் வருட ஆக்ரமிப்பால் அவதியுறும் சைப்ரஸ் நாடு திருத்தந்தையின் அமைதிச் செய்திக்காய்க் காத்திருக்கிறது என்றார். வட சைப்ரஸிலான துருக்கியின் ஆக்ரமிப்பால் கிறிஸ்தவ சொத்துக்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதையும், கொள்ளையடிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் அரசுத்தலைவர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் விமான நிலையத்திலிருந்து 25கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள Agia Kiriaki Chrysopolitissa என்ற வரலாற்று சிறப்பு நிறைந்த புனித இடம் நோக்கி காரில் பயணமானார் பாப்பிறை.
Agia Kiriaki Chrysopolitissa என்ற இந்த இடமானது சைப்ரஸின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமானது. இருப்பினும் கத்தோலிக்கர்களும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்களும் இங்கு வழிபாடுகளை நடத்த உரிமைப் பெற்றுள்ளனர். இவ்விடத்திலிருந்துதான் புனித பவுல் நற்செய்தியை அறிவித்தார். இங்குதான் அவர் ரோமைய ராணுவ வீரர்களால் தூணில் கட்டப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டார். அந்த தூண் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதே இடத்தில் 4ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசிலிக்கா 7ம் நூற்றாண்டில் அராபியப் படையெடுப்பின் போது முற்றிலுமாக அழிவுக்குள்ளாக்கப்பட்டது. அதே இடத்தில் கட்டப்பட்டுள்ள சிறியக்கோவிலைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை.
பழைய பசிலிக்காவின் இடிபாடுகளிடையேக் கட்டப்பட்டுள்ள இக்கோவில் ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்களின் பொது வழிபாட்டுத்தலமாக இருப்பதால் இவ்விடத்திலேயே கிறிஸ்தவ ஐக்கிய வழிபாட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. பாஃபோஸின் ஆர்த்தடாக்ஸ் ஆயர் ஜியார்ஜியோஸ் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இவ்விடத்தை அடைந்ததும் முதலில் அங்குள்ள திருத்தலத்திற்குள் சென்றத் திருத்தந்தை முழந்தாள்படியிட்டு சிறிது நேரம் செபித்தார். வெளியிலோ சரித்திரச் சிறப்பு வாய்ந்த இடிபாடுகளிடையே விசுவாசிகள் பெருமெண்ணிக்கையில் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். கோவிலிலிருந்து திருத்தந்தை வெளியே வருகையில் 10 வயது இலங்கைச் சிறுமி ஜஸ்மிதா மஹராஜசிங்கை ஆசீர்வதித்தார். இந்தச் சிறுமியை தனிப்பட்ட விதத்தில் திருத்தந்தை ஆசீர்வதிப்பதற்கு என்ன காரணம் என சிலர் யோசிக்கலாம்.

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்டு சைப்ரஸின் போஃபாஸில் வாழ்ந்து வரும் 10வயது சிறுமி ஜஸ்மிதா மஹராஜசிங் தன் நோய் காரணமாக பல்வேறு கடுமையான சிகிச்சைகளைத் தாங்கியவர். இவர் இதய அறுவை சிகிச்சையையும் 10 மணி நேர மூளை அறுவைச் சிகிச்சையயும் தாங்கி இன்று நலமுடன் வாழ்பவர். இஸ்ராயேலில் மேற்கொள்ளப்பட்ட இவரின் அறுவச் சிகிச்சைகளுக்கென 2 இலட்சம் டாலர்கள், நல்மனதுடைய மக்களால் கொடையாக வழங்கப்பட்டது. சைப்ரஸ் மக்கள் இச்சிறுமியை “சைப்ரஸின் வானதூதர்” என்றே பெருமைப்படுத்துகின்றனர். ஏனெனில் இச்சிறுமி தன் உடலில் தாங்கிய இத்தனைத் துன்பங்களுக்குப் பின்னரும் இன்று புன்சிரிப்புடன் நன்முறையில் கல்வி பயின்று வருகிறார். இவரின் படிப்புக்கு முழு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தகையச் சிறப்பு வாய்ந்த ஒரு சிறுமியைத்தான் திருத்தந்தை ஆசீர்வதித்து வாழ்த்துக்களை வெளியிட்டார்.
கோவிலுக்கு வெளியே திருத்தந்தையைச் சந்திக்க பல ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆயர்களுடன் அர்மீனியன்,லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் உயர்மட்ட பிரதிநிதிகளோடு விசுவாசிகளும் காத்திருக்க, பாடகர் குழு பண் இசைத்து திருத்தந்தையை வரவேற்றது. புனித பூமியின் ஒரு பகுதியாக சைப்ரஸ் நாடு கருதப்படுவதால், புனித பூமி தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்குக் குழுமியிருந்தனர்.
இங்கு நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு ஜெபவழிபாட்டில் முதலில் ஆர்த்தடாக்ஸ் பேராயர் இரண்டாம் கிறிஸோஸ்தொமோஸ் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
இந்த இடத்தில் தான் அப்போஸ்தலர்களின் முதல் புதுமை இடம்பெற்றது, இங்குதான் ஐரோப்பியக் குடிமகன் ஒருவர் முதன்முதலாக திருமுழுக்குப் பெற்றார், இங்குதான் முதலில் சிலைவழிபாடுகள் அகற்றப்பட்டு சிலுவையின் மகிமை உயர்த்தப்பட்டது, இவ்விடத்திலிருந்துதான் ஐரோப்பாவின் கிறிஸ்தவ மூலத்திற்கான முதல் வித்து புறப்பட்டது, ஐரோப்பியக் கிறிஸ்தவக் கலாச்சாரத்தின் அடித்தளமே இங்கு தான் இடப்பட்டது என அவ்விடத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டேச் சென்ற ஆர்த்தடாக்ஸ் பேராயர், 1974ம் ஆண்டிற்குப்பின் துருக்கியர்களின் ஆக்ரமிப்பால் சைப்ரஸ் நாடு துண்டாடப்பட்டுள்ளது குறித்தக் கவலையையும் வெளியிட்டார். சைப்ரஸின் புனித நினைவிடங்களையும், கலாச்சாரப் பாரம்பரியங்களையும் காப்பாற்றி நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் திருத்தந்தையின் உதவியையும் நாடினார்.
அதன்பின் திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார்.

(சைப்ரஸில் Agia Kiriaki Chrysopolitissa கோவிலில் திருத்தந்தையின் உரை)

திருத்தந்தையின் உரைக்குப்பின் அனைவரும் இணைந்து கர்த்தர் கற்பித்த செபத்தை ஜெபிக்க இறுதியில் பாடலுடன் நிறைவுப் பெற்றது அக்கிறிஸ்தவ ஐக்கிய வழிபாடு.
மீண்டும் கோவிலுனுள் சென்ற திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையால் போஃபாஸ் நகரில் கட்டப்பட்டுள்ள முதியோர் இல்லத்திற்கான ஆர‌ம்ப விழாப் பலகையை ஆசீர்வதித்தார். பின்னர் கோவில் அருகே அப்பகுதி அரசு அதிகாரிகள் கூடி நின்று திருத்தந்தையை வாழ்த்தினர். போஃபாஸின் ஆளுனர் திருத்தந்தைக்கு ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார்.
இதையெல்லாம் முடித்துவிட்டு திருத்தந்தை ஆயியா கிரியாகி கிறிஸோபோலிதிஸா (Agia Kiriaki Chrysopolitissa) என்ற் இடத்திலிருந்து திருத்தந்தை புறப்பட்டபோது உள்ளூர் நேரம் பிற்பகல் 4 மணி 30 நிமிடங்களாகும். இந்திய நேரம் மாலை 7மணி. அங்கிருந்து 170 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள தலைநகர் நிக்கோஸியாவவுக்கு காரிலேயே பயணம் செய்த திருத்தந்தை, ஏறத்தாழ 2மணி நேர பயணத்திற்ப் பின் அங்குள்ள திருப்பீடத்தூதரகம் சென்று இரவு உணவருந்தி நித்திரையில் ஆழ்ந்தார்.

தலைநகர் நிக்கோஸியா இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி தற்போது திருத்தந்தை பயணம் மேற்கொண்டு வரும் சைப்ரஸ் குடியரசின் தலைனகராகவும், ஏனைய பகுதி துருக்கி ஆக்ரமிப்பின் கீழுள்ள 36 அல்லது 37 விழுக்காட்டு சைப்ரஸ் நிலப்பகுதியின் தலைநகராகவும் உள்ளது. தலை நகரிலேயே துருக்கிய ராணுவம் உள்ளது மற்றும் திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு முந்திய நாள் துருக்கியியுலுள்ள ஆயர் ஒருவர் அவரின் காரோட்டியால் கொல்லப்பட்டது ஆகியவைகளக் கருத்தில் கொண்டு சைப்ரஸ் காவல்துறை 1000க்கும் மேற்பட்ட காவலர்களை இப்பயணத்தின் பாதுகாப்பையொட்டி நிறுத்தியுள்ளதாக சைப்ரஸ் காவல்துறை பேச்சாளர் மிக்கேலிஸ் கட்சோவ்னோத்தோஸ் அறிவித்துள்ளார்.

திருத்தந்தையின் சைப்ரஸ் நாட்டிற்கான இரண்டாம் நாள் பயணத்திட்டங்கள் திருப்பீடத்தூதரகத்திலிருந்து 3கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று சந்திப்பதிலிருந்துத் தொடங்கியது. முதலில் இருதலைவர்களும் தனியாக சிறிது நேரம் சந்தித்து நினைவுப்பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர் அரசுத்தலைவர் தெமெத்ரிஸ் கிறிஸ்தோஃபியாஸின் குடும்ப அங்கத்தினர்கள் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
சைப்ரஸ் நாடு 1960ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது அந்நாட்டின் முதல் அரசுத்தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்தவர் ஆர்த்தடாக்ஸ் பேராயர் மூன்றாம் மக்கரியோஸ் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
நிக்கோஸியாவின் அரசுத்தலைவர் மாளிகையிலேயே அரசு அதிகாரிகளையும் சைப்ரஸிற்கான பிற நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்தார் திருத்தந்தை. முதலில் அரசுத்தலைவர் திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்க திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார்.

(சைப்ரஸ் குடியரசின் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை)

இந்நிகழ்ச்சியை முடித்தபின் அங்கிருந்து 5கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள புனித மரோன் துவக்கப்பள்ளிக்குச் சென்று கத்தோலிக்க சமுமூகத்தினரைச் சந்தித்தார் பாப்பிறை. மரோனைட் கிறிஸ்தவ சபையின் பேராயர் யூசூப் சியோப் திருத்தந்தையை முதலில் வாழ்த்தி வரவேற்க திருத்தந்தையும் தன் உரையை கத்தோலிக்க சமுதாயத்திற்கு வழங்கினார்.

(சைப்ரஸ் கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தையின் உரை)

கத்தோலிக்க ச‌முதாயத்தைச் சந்தித்து ஆசீரை வழங்கிய பின்னர் காரில் ஏறி 10 கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஆர்த்தடாக்ஸ் பேராயர் இல்லம் வந்தார் திருத்தந்தை. ஏற்கனவே விமான நிலைய வரவேற்பின் போதும், அதே நாளில் புனித பவுலின் நினைவிடம் இருக்கும் Agia Kiriaki Chrysopolitissa லும் திருத்தந்தை ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதாவைச் சந்திதுள்ள போதிலும், தற்போது அவரின் இருப்பிடத்திற்கே நேரடியாகச்சென்று அவருக்கான தன் மதிப்பையும் மரியாதையையும் வெளியிட்டார். முதலில் இருவரும் தனியாகச் சிறிது நேரம் சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பின்னர் திருத்தந்தை அந்நாட்டின் மிகவும் புகழ் பெற்றவரும் முதல் அரசுத்தலைவருமான ஆர்த்தடாக்ஸ் பேராயர் மக்கரியாஸின் கல்லறையைச் சென்று தரிசித்தார். பேராலயத்தையும் பார்வையிட்டு ஜெபித்தபின் திருத்தந்தை மேடைக்கு வர, பேராயர் இரண்டாம் கிறிஸோஸ்தொமோஸ் அவரை வரவேற்றுப் பேசினார். திருத்தந்தையும் அங்கு தன் வாழ்த்துரையை வழங்கினார்.

இதன் பின் திருத்தந்தை, திருஉருவங்களின் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். வட சைப்ரஸில் துருக்கியர்கள் ஆக்ரமிப்புச் செய்த பின்னர் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களால் வெளினாடுகளில் விற்கப்பட்டு தற்போது மீண்டும் சைப்ரஸுஜக்கு வந்துள்ள புனிதப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இவ்வருங்காட்சியகம்.
கோவிலையும் அதன் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டபின், அங்கேயே ஆர்த்தடாக்ஸ் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்தினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

நேயர்களே! சனி மாலை இடம்பெற்ற திருத்தந்தையின் திருப்பலி மற்றும் ஞாயிறு தின நிகழ்ச்சிகள் குறித்து, நாளை இதே நேரம் செவிமடுப்போம்.



சைப்ரஸில் Agia Kiriaki Chrysopolitissa கோவிலில் திருத்தந்தையின் உரை

என்னை அன்போடு வரவேற்ற இரண்டாம் க்ரிஸோஸ்தமசுக்கும் பஃபோசின் பெருங்குரு Georgoisக்கும் என் நன்றி. அர்மீனியன், லூதரன், ஆங்கலிக்கன் சபைகளிலிருந்து வந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
Agia Kiriaki Chrysopolitissa கோவிலில் நாம் கூடியிருப்பது தனிப்பட்ட ஒரு வரம். அப்போஸ்தலர் பவுல் தன் மறைபரப்பு பணியின் முதல் பகுதியாக சைப்ரஸில் இருந்ததை திருத்தூதர் பணியிலிருந்து நாம் வாசித்த வாசகத்தில் இப்போது கேட்டோம். அவரோடு, சைப்ரஸில் பிறந்த பர்னபாவும், நற்செய்தியின் ஆசிரியர் மாற்கும் இருந்தனர். எனவே, திருச்சபை, ரோமைய சாம்ராஜ்யம் அனைத்துக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது இங்கிருந்துதான் ஆரம்பமானது.
சைப்ரஸில் உள்ள திருச்சபை, இதே விசுவாசத்தைப் பாதுகாக்கும் பிற சபைகளுடன் வேறுபாடுகளைக் களைந்து, ஒருமைப்பாட்டை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளது. பவுலும் இதையேக் கூறியுள்ளார்: “நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே.” (எபே. 4: 4-5 )

இந்த ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்குடன் வருகிற அக்டோபர் மாதம் உரோமையில் கூடவிருக்கும் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவை, இப்பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களின் பங்கு, பிற கிறிஸ்தவ சபைகளுடன் மேற்கொள்ள வேண்டிய சமய உரையாடல், நற்செய்தியின் அடிப்படையில் வாழும் சாட்சிய வாழ்வு ஆகியவை குறித்து சிந்திக்கவிருக்கின்றது.
இந்தப் பேரவையில் பிற சபைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால், கடவுளின் ஒப்புரவாக்கும் அருளைப் பெறுவதற்கு திறந்த மனம் கொண்டிருக்கும் நம் எண்ணங்கள் உலகுக்குத் தெளிவாகும்.

தன் சீடர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்க கிறிஸ்து சிறப்பாக வேண்டிக் கொண்டார். (யோவான். 17:21) இந்த ஒருமைப்பாட்டிற்காக தந்தையை நாம் தொடர்ந்து வேண்ட கடமைப் பட்டிருக்கிறோம். இந்த ஒற்றுமையால் நற்செய்தியின் சான்றுகளாய் இந்த உலகத்தில் இன்னும் சிறந்த முறையில் நாம் திகழ முடியும். கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் பிரிவுகள் நற்செய்தி போதனைகளுக்கு மாற்று சான்றாக இருப்பதை உணர்ந்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் Edinburgh மறைபணி கருத்தரங்கில் நவீன கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் துவக்கப்பட்டது. கிழக்கித்திய, மேற்கத்திய அப்போஸ்தலிக்க பாரம்பரியங்களை உணர்ந்து, திறந்த உள்ளங்களுடன் பொறுமையாக நம் உரையாடல்களை கடந்த சில ஆண்டுகளாக நாம் மேற்கொண்டிருப்பது நல்லதொரு எதிர்காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.

கிழக்கு, மேற்கு என்ற இரு உலகங்களுக்கும் ஒரு பாலமாக அமைந்து, சைப்ரஸ் திருச்சபை இந்த ஒப்புரவை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த ஒருமைப்பாட்டைக் கொணர்வதில் கட்டாயம் பல பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இருந்தாலும், சைப்ரஸ் கத்தோலிக்கத் திருச்சபையும், சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் சபையும் இந்த முயற்சிகளைத் தொடர தூய ஆவியானவர் நமக்குத் துணை அளிப்பாராக!

அன்பு சகோதர, சகோதரிகளே, சைப்ரஸ் திருச்சபையின் அணிகலன்களாய் இருக்கும் புனிதர்களை, சிறப்பாக, சலாமிஸ் ஆயர் புனித Epiphanius குறித்து நாம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்துவ வாழ்வின் முழுமையே புனிதம். தூய ஆவியின் குரலுக்கு நாம் தொடர்ந்து செவிமடுத்து, மீட்பராம் கிறிஸ்துவைப் போல் மாறுவதே புனிதமடைவதற்கான சிறந்த வழி. சகோதர அன்புடன் கூடிவந்திருக்கும் நாம், இந்த சந்திப்பிற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். இறைவன் நம் குடும்பங்களை ஆசீர்வதிக்கவும், அப்போஸ்தலர்களின் விழி வந்த விசுவாசத்தை நாம் பாதுகாக்கவும், நம் எல்லாரையும் அன்பிலும், அமைதியிலும் வழி நடத்தவும் புனித பேதுரு, பவுல், பர்னபா, Epiphanius வழியாக வேண்டுவோம்.


சைப்ரஸ் குடியரசின் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை

எனது அப்போஸ்தலிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, சைப்ரஸ் குடியரசின் அரசுத் தலைவர்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அரசுத் தலைவர் Christofias தெரிவித்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
சைப்ரஸ் குடியரசின் முதல் அரசுத் தலைவரான பேராயர் Markariosன் நினைவு மண்டபத்தில் சற்று முன் ஒரு மலர் வளையம் வைத்தேன். அவரைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும் பொது சேவையில் ஈடுபட வேண்டும் என விழைகிறேன். பொது அரசு சேவையைத் திருச்சபை என்றும் உயர்வாக எண்ணி வந்துள்ளது. இப்பொது சேவையில் முழுமையாக ஈடுபடும் போது, ஒவ்வொருவரும் ஞானம், முழுமை, தன்னிறைவு ஆகியவற்றை பெற முடியும். நேரிய எண்ணங்களோடு உண்மை, நன்மை, அழகு ஆகிய உயரிய கோட்பாடுகளை பின்பற்றுவதை ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் வழி வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிஞர்கள் உரைத்துச் சென்றனர்.

சமய அடிப்படையில் பார்க்கையில், நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்ட மனித குடும்பத்தைச் சேந்தவர்கள், அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையை வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
ஒவ்வொரு மனிதனோடும் உறவுகளை வளர்ப்பதே, நம்பிக்கையை வளர்க்கும் முதல் படி. அத்தகைய உறவும், நம்பிக்கையும் ஒரு நாட்டையும், அரசையும் கட்டி எழுப்பும் அடிப்படைகள். பிரச்சனைகள் அதிகம் சூழ்ந்த அரசியலில், இப்படிப்பட்ட தனி நபருடனான உறவுகள் உறுதியான சமுதாயத்தை உருவாக்க உதவும். இப்படிப்பட்ட உறவுகளை வளர்க்க இங்குள்ள அனைவரையும் நான் சிறப்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நன்னெறியில் உறுதியாக வாழும் மனிதர்களாலேயே பொது நலனை உருவாக்க முடியும் என்று பாரம்பரிய கிரேக்க தத்துவம் உரைக்கின்றது. பொது வாழ்வைக் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் சுய நலத்தையும், ஒரு சிலரது நலனையும் தாண்டி நன்னெறியின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
உண்மையை எப்போதும் பின் தொடர்ந்து செல்லும் போது, உலகில் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை நிறைந்த சமுதாயம் உருவாக வழியாகும்.

உண்மையைப் பின் தொடர்வதை மூன்று வழிகளில் காணலாம்:

ஒன்று - ஒரு நிகழ்வைக் குறித்த நேர்மையான, அப்பட்டமான தகவல்களைப் பெறும் போது, எந்த ஒரு பக்கமும் சாயாமல், நடு நிலையோடு அந்த நிகழ்வைக் குறித்த முடிவுகளை எடுக்க முயல வேண்டும்.
இரண்டு - ஒவ்வொரு அரசியலுக்கும் ஏற்றது போல் சமாதானம், முன்னேற்றம், மனித உரிமைகள் என்ற கோட்பாடுகளைத் திரித்துக் கூறுவது இன்றைய காலத்தில் அதிகம் காணப்படுகிறது. இதற்கு மாறாக, உண்மைகளைத் திரிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மூன்று - இயற்கை நியதிகளின் அடிப்படையில் மனிதர்களாகிய நாம் இயற்றும் சட்டங்கள் அமைய வேண்டும். பிறர் உரிமைகளையும், அடிப்படை மனித மாண்பையும் மதிக்கும் வகையில் நம் சட்டங்கள் அமைய வேண்டும்.
அரசுத் தலைவரே, அருமை நண்பர்களே, நீங்கள் அனைவரும் தகுந்த ஞானத்துடனும், உறுதியுடனும், விடா முயற்சியுடனும் உங்கள் பணிகளைத் தொடர இறைவனின் ஆசீரை நான் வேண்டுகிறேன்.


சைப்ரஸ் கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தையின் உரை

கிறிஸ்துவில் என் அன்பு சகோதர, சகோதரிகளே,
உங்கள் சார்பில் என்னை வரவேற்ற பேராயர் Soueif க்கும், அழகானதொரு பரிசை எனக்கு அளித்த குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பிதாப் பிதா Fouad Twalக்கு என் அன்பு வாழ்த்துக்கள். மிகுந்த பொறுமையோடு புனித பூமியை பராமரித்து வரும் புனித பிரான்சிஸ் சபையினரின் சார்பில் இங்கிருக்கும் அருட்தந்தை Pizzaballaவையும் அவர்களது துறவு சகோதரர்களையும் சிறப்பான வகையில் வாழ்த்துகிறேன்.
உரோமையின் ஆயராக முதல் முறையாக சைப்ரஸ் வந்துள்ள நான், உங்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்தவும், தொடர்ந்து அப்போஸ்தலிக்கப் பாரம்பரியத்தில் நீங்கள் ஒரே மனதோடு நிலைத்திருக்கவும் விழைகிறேன். பேதுருவின் வழித் தோன்றல் என்ற முறையில் எனது முழு ஆதரவையும், செபங்களையும் உங்களுக்கு அளிக்கிறேன்.

இயேசுவின் செயல்களைப் பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விழைவதாகக் கூறிய அந்த யோவான் நற்செய்தியின் பகுதியை இப்போது வாசிக்கக் கேட்டோம். நற்செய்தியில் நாம் காணும் மனிதர்களைப் போல், நாமும் இயேசுவைக் காண, அவரை அறிந்து, அன்பு செய்து, அவருக்குப் பணி செய்ய விழைகிறோம்.
திருச்சபையின் வாழ்வில், பணியில் நீங்கள் வகிக்கும் தனிப்பட்ட பங்கை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். கிறிஸ்துவர் அல்லாத மற்றவர்களோடும், ஏனைய கிறிஸ்தவர்களோடும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய உரையாடல், அதன் வழியாக நீங்கள் காண வேண்டிய ஒப்புரவு ஆகியவை உங்களுக்கு உள்ள சிறப்புப் பங்கு.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு, திருமுழுக்கு பெற்ற அனைத்து மக்களோடும் உறவு கொள்வதென்பது திருச்சபையின் கடமையாகிறது. இந்த உறவை, உரையாடலை நீங்கள் வலுப்படுத்த நான் வாழ்த்துகிறேன்.
பிற சமயங்களுடன் நீங்கள் கொள்ள வேண்டிய உறவு, உரையாடல் இவற்றில் பொறுமையோடும், தெளிவோடும் செயல் பட வேண்டும். நீங்கள் மற்ற மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அதன் வழியாக, சமாதான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த குருக்கள் ஆண்டு முடிவுக்கு வரும் இந்த நேரத்தில், குருத்துவ, துறவற அழைப்புக்காக வேண்டிக் கொள்ளுங்கள். முழுமையான அர்ப்பணத்துடன் மக்களுக்கு உழைக்கும் குருக்கள் உருவாக வேண்டும் என்றும் மன்றாடுங்கள்.
நாம் இங்கு கூடியிருக்கும் இந்த பள்ளி உட்பட, இந்த நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக நான் சொல்ல விழைவது இது: சைப்ரஸ் திருச்சபையின் பாரம்பரியத்தில் உங்கள் பங்கு அதிகம். தொடர்ந்து நீங்கள் இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அயராது, பொறுமையோடு உழைக்கும்படி உஙகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக, அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் அனைவரையும் அன்னை மரியாவின் கண்காணிப்பில் ஒப்படைக்கிறேன். புனித பவுல், பர்னபா இவர்களின் வேண்டுதலால் நீங்கள் வாழ வாழ்த்துகிறேன்.


ஆர்த்தடாக்ஸ் பேராயருக்கு திருத்தந்தையின் வாழ்த்துரை

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் உரோமைக்கு வந்திருந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இன்று மீண்டும் உங்கள் தாயகத்தில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். உங்கள் வழியாக சைப்ரஸ் திருச்சபையின் அனைத்து ஆயர்கள், குருக்கள், தியாக்கோன்கள், துறவறத்தோர், விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
சென்ற ஆண்டு Paphosல் நடைபெற்ற அகில உலக இறையியல் உரையாடலின் போது, சைப்ரஸ் திருச்சபை அந்த நிகழ்வை ஏற்று நடத்தியதற்காக முதன் முதல் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

சைப்ரஸ் திருச்சபை உரையாடலுக்குக் கொடுத்துவரும் முக்கியத்துவத்திற்காக உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தொடர்ந்து கிழக்கு, மேற்கு திருச்சபைகளிடையே முழுமையான, அனைவரும் காணக் கூடிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு, தூய ஆவியானவர் உங்களை வழி நடத்துவாராக.

சென்ற ஆண்டு உரோமைக்கருகே L’Aquila பகுதியில் நடந்த நில நடுக்கத்தின் போது, திருச்சபையின் சகோதரத்துவம், ஒருமைப்பாடு இவற்றை உணர்த்தும் வண்ணம் அந்த மக்களுக்கு சைப்ரஸ் திருச்சபை அளித்த உதவியை நினைத்துப் பார்க்கிறேன். இதே ஒருமைப்பட்டு உணர்வை இப்பகுதியில் வளர்க்க சைப்ரஸ் திருச்சபைக்கு இறைவன் வரங்களை வழங்க வேண்டுகிறேன்.

பாரம்பரியமாக, சைப்ரஸ் புனித பூமியின் ஒரு பகுதியாக எண்ணப்பட்டு வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் கிறிஸ்துவைப் பின் தொடரும் அனைவருக்கும் கவலையை அளித்து வருகிறது.
பாரம்பரியம் மிக்க இந்தத் திருச்சபை சமாதானத்தில் வளர்ந்து வர இறைவனை வேண்டுகிறேன். மீண்டும் உங்கள் வரவேற்பிற்கு நன்றியைக் கூறுகிறேன். சைப்ரஸ் திருச்சபையின் குருக்கள், துறவறத்தார், விசுவாசிகள் அனைவருக்கும் என் செபங்கள் உண்டு என உறுதியளிக்கிறேன்.









வத்திக்கான் வானொலி – செய்திகள் 06.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சைப்ரஸ் நாட்டில் திருத்தந்தை – இறுதி தின நிகழ்வுகளின் சுருக்கம்.

ஜூன்06,2010. சைப்ரஸ் நாட்டில் மூன்று நாட்கள் திருப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து கடந்த இரு நாட்களாக நோக்கி வரும் நாம், அதன் தொடர்ச்சியாக இன்று அவரின் சைப்ரஸ் நாட்டிற்கான இறுதி நாள் பயண நிகழ்வுகள் குறித்து காண்போம்.
இறுதி நாள் ஞாயிறு தின நிகழ்ச்சிகளை நோக்குவதற்கு முன்னால், சனிக்கிழமை மாலையில் நிக்கோசியா திருப்பீடத் தூதரகத்திற்கருகில் இருக்கும் திருச்சிலுவை கோவிலில் குருக்கள், துறவியர், தியாக்கியோன்கள், வேதியர்கள் மற்றும் கத்தோலிக்க பொதுநிலை விசுவாச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு திருப்பலி நிறைவேற்றி அவர்களுக்காக திருத்தந்தை ஜெபித்ததையும் நாம் குறிப்பிட்டேயாகவேண்டும்.
லத்தீன் ரீதி பங்குதள கோவிலான இத்திருச்சிலுவை ஆலயம் 350 பேர் அமரும் வசதியுடையது. இத்திருப்பலியில் கிரேக்கம், லத்தீன் மற்றும் ஆங்கிலத்தில் ஜெபங்கள் இடம்பெற்றன.
திருப்பலிக்குப் பின் இருநூறு மீட்டர்கள் தொலைவிலுள்ள‌ திருப்பீடத்தூதரகம் சென்று இரவு உணவு அருந்தி நித்திரையிலாழ்ந்தார் திருத்தந்தை.
இதற்கிடையில் திருத்தந்தையின் இரண்டாம் நாள் பயணத்தின் நிகழ்வுகள் குறித்து பத்திரிகையாளர்களிடையேப் பேசிய திருப்பீடப்பேச்சாளர் குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி, சைப்ரஸ் சிறிய நாடாக இருப்பினும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களை அதிகம் கொண்டதாக இருப்பினும், பயண நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பு சிறப்பான முறையில் இருந்தது என மகிழ்ச்சியை வெளியிட்டார்.

திருத்தந்தையின் ஞாயிறு தினப் பயணத்திட்டத்தில் முதலில் இடம்பெற்றது பொதுமக்களுடன் கூடிய திருப்பலியே.
திருப்பீடத் தூதரகத்திலிருந்து திருப்பலி நிறைவேற்றுவதற்காக திருச்சிலுவை கோவிலை நோக்கி திருத்தந்தை புறப்படும் நேரத்தில் அவருக்காக இஸ்லாமிய தலைவர் Cheikh Mohammed Nazim Abil Al-Haqqani காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதால் உடனே அவரை சந்திக்க வந்தார் திருத்தந்தை. இஸ்லாமிய சுஃபி அமைப்பைச் சேர்ந்த 89 வயது ஆன்மீகத்தலைவரான இவர் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்காக வந்திருந்தார். திருத்தந்தையுடனான இவரின் சந்திப்பு ஏற்கனவே திருப்பயணத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தைக்காகக் காத்திருந்த நேரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன் ஏனெனில் நான் மிகவும் வயதானவன் என்று சிரித்துக்கொண்டே திருத்தந்தையிடம் அந்த இஸ்லாமியத்தலைவர் கூற, திருத்தந்தையும் சிரித்துக்கொண்டே நானும் முதியவன் தான் என்று கூறினார். இஸ்லாமியத்தலைவர் Nazim Abil Al-Haqqani திருத்தந்தைக்கு அரபு மொழியில் அமைதி வார்த்தை ஒன்று எழுதப்பட்டத் தகடு, சில உருவங்கள் பொறிக்கப்பட்ட கோல் மற்றும் இஸ்லாமிய ஜெபமாலையையும் பரிசளித்தார். திருத்தந்தையும் தன் சார்பாக இஸ்லாமியத் தலைவருக்கு பதக்கம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்த ஆன்மீகத்தலைவர் Nazim Abil Al-Haqqani திருச்சிலுவை கோவிலுக்குச் சிறிது பின்னால் தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் அப்பகுதியோ துருக்கியர் வசமிருக்கும் வட சைப்ரஸாகும். தலை நகர் நிக்கோஸியாவானது துருக்கி ஆக்ரமிப்புத் துருப்புகளால் பிரிக்கப்பட்டு, இரு சைப்ரஸ் பகுதிகளுக்கும் ஒரே தலைநக‌ராக இருப்பது நமக்குத் தெரிந்ததே.
திருத்தந்தையிடமிருந்து விடைபெறுமுன் இஸ்லாமியத்தலைவர் தனக்காக ஜெபிக்கும்படி திருத்தந்தையிடம் வேண்ட, தான் அவருக்காக ஜெபிப்பதாக உறுதியளித்ததுடன், ஒருவர் ஒருவருக்காக ஜெபிப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை.
திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய தலைநகர் நிக்கோஸியாவின் எலெஃப்தேரியா விளையாட்டரங்கானது 5000 பேர் அமர்ந்து பார்க்கவும் 1000 பேர் நின்று பார்க்கவும் வசதி உடையது. திருப்பலியைத் திருத்தந்தையுடன் மத்தியக்கிழக்குப்பகுதியின் 30 ஆயர்கள் இணைந்து நிறைவேற்றினர். இதில் 17 பேர் மெரோனைட் கத்தோலிக்க ரீதியைச் சேர்ந்தவர்கள். திருப்பலி நிறைவேற்றப்பட்ட விளையாட்டரங்கினுள் 6000 பேர் குழுமியிருக்க, ஏறத்தாழ 2000 பேர் உள்ளே இடமின்மையால் வேளியே நின்று திருப்பலியில் பங்கேற்றனர். திருப்பலியில் பாடிய மெரோனைட் பாடகர் குழுவில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க மக்களும் இடம்பெற்றிருந்தனர்.
இயேசுவின் திரு உடல், திரு இரத்த திருவிழாவைச் சிறப்பிக்கும் விதமாக நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில் சைப்ரஸின் மேரோனைட் பேராயர் முதலில் திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றார்.
ஞாயிறு காலை இடம்பெற்ற திருத்தந்தையின் இத்திருப்பலி மத்தியக்கிழக்குத் திருச்சபையின் வரலாற்றில் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகும்.
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் பேரவை வரும் அக்டோபரில் இடம்பெறுவதற்குத் தயாரிப்பதற்கான திட்ட முன்வரைவை அப்பகுதி ஆயர்களிடம் இத்திருப்பலியின் போது வழங்கினார் திருத்தந்தை.
திருப்பலிக்குப்பின் 7 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகம் சென்ற திருத்தந்தை, அங்கு மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் கலந்துகொள்ள உள்ள அப்பகுதி கத்தோலிக்க பிதாப்பிதாக்கள் மற்றும் ஆயர்களுடன் மதிய உணவருந்தினார்.
ஆயர்களுடன் உரையாடி முடித்து சிறிது நேர ஓய்வும் எடுத்து மாலை உள்ளூர் நேரம் 4 மணியளவில், அதாவது, இந்திய நேரம் ஞாயிறு மாலை 6.30 மணியளவில் திருப்பீடத் தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பிரியாவிடை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் பாப்பிறை.
பின்னர் அங்கிருந்து அருகாமையிலுள்ள மரியன்னை பேராலயம் சென்றார் அவர். மெரோனைட் கிறிஸ்தவ சபையின் இப்பேராலயம் விசுவாசிகள் வழங்கியக் கொடைக‌ளுடனும் சைப்ரஸ் அரசின் நிதியுதவியுடனும் கட்டப்பட்டு 1960ம் வருடம் திருநிலைப்படுத்தப்பட்டது.
திருத்தந்தை இப்பேராலயத்தைத் தரிசிக்கச் சென்றபோது அங்கு மெரோனைட் பாடர்குழு ஒன்று கூடியிருந்து பண்ணிசைக்க, சிறு ஜெப வழிபாடு ஒன்றும் நடத்தப்பட்டது. 300 பேர் அமரும் வசதியுடைய இப்பேராலயத்தில் கிரேக்கம், அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் ஜெபங்கள் இடம்பெற்றன. வழிபாட்டின் இறுதியில் திருத்தந்தைக்கு தலத்திருச்சபையின் சார்பில் நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
விமான நிலையத்தில் சைப்ரஸ் மக்களிடமிருந்து விடைபெறுவதற்கு முன்னால் அந்நாட்டில் திருத்தந்தை கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாகும் இது.
நேயர்களே இத்துடன் திருத்தந்தையின் சைப்ரஸ் நாட்டிற்கான திருப்பயணம் குறித்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

திருத்தந்தையின் உரைகள்

ஜூன் 05 மாலை - திருச்சிலுவைக் கோவிலில் குருக்கள், துறவியருக்கான சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

புனித பவுல் தன் மறைப்பணியை ஆரம்பித்த இந்த மண்ணில் உங்கள் கிறிஸ்துவ விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், உலகிற்கு நம்பிக்கை தரும் நற்செய்தியை அறிவிக்கவும் புனித பவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நானும் உங்கள் மத்தியில் வந்திருக்கிறேன்.
முதல் மனிதன் ஆதாம் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது மகன் செத் நட்டு வைத்த மரத்திலிருந்து கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை செய்யப்பட்டதாக ஒரு பாரம்பரியம் கூறுகிறது. சிங்கார வனத்தின் நடுவே இருந்த மரத்திலிருந்து கிடைத்த ஒரு விதையை கொல்கொத்தா என்றும் இடத்தில் செத் புதைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மரத்தைச் சுற்றி பாம்பு வடிவத்தில் வந்த அலகையின் சோதனையால் மனித குலம் வீழ்ந்தது. எந்த ஒரு மரத்திலிருந்து நமது வீழ்ச்சி வந்ததோ, அதே மரம் சிலுவையாக மாறி, நமது மீட்பையும் கொணர்ந்தது. இது இறைவனின் அற்புதத் திட்டம்.
சிலுவை மரம் துன்பம், சித்ரவதை, தோல்வி ஆகியவைகளின் அடையாளமாக இருந்தது. அதே சிலுவை கிறிஸ்துவின் மரணத்தால் வெற்றியின் அடையாளமாக மாறியுள்ளது. இதனால், உலகில் இன்றும் துன்புறும் மக்களுக்கு சிலுவை நம்பிக்கையின் அடையாளமாகிறது.
சிலுவை வெறும் தனிப்பட்ட பக்திக்கான ஒரு அடையாளம் அல்ல. மாறாக, உலகில் துன்புறுவோர், ஒடுக்கப்படுவோர், வன்முறைகளுக்கு ஆளாவோர் அனைவருக்கும் மன உறுதியளிக்கும் ஒரு அடையாளம். வெறுப்பை அன்பால் வெல்லக்கூடிய நம்பிக்கையைத் தரும் ஒரு அடையாளம்.
என் சகோதர குருக்களே, துறவியரே, மறைகல்வி ஆசிரியர்களே, உலகிற்கு இன்றும் நம்பிக்கையை வெகுவாகத் தந்து வரும் இச்சிலுவையின் செய்தியை உலகிற்கு கூற நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
குருக்களுக்கான இவ்வாண்டில் இன்று குருக்களாய் இருப்பவர்களுக்கும், குருத்துவத்திற்காகத் தங்களையே தயாரித்து வருபவர்களுக்கும் நான் சிறப்பாக கூற விழைவது இதுவே: சிலுவையில் குருவாகவும், பலியாகவும் மாறிய கிறிஸ்துவைப் போல், தன்னலமற்ற அன்பை நீங்கள் உலகிற்குப் பறை சாற்ற வேண்டும். சிலுவையை உங்கள் வாழ்வின் ஒரு முக்கிய கருவாக நீங்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் பணி புரியும் இந்த மத்திய கிழக்குப் பகுதிக்கும், உலகிற்கும் நம்பிக்கையைக் கொணரும் கருவிகளாக நீங்கள் மாற முடியும்.


ஜூன் 6 காலை - மக்களுக்கான திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

புனித பவுல், பர்னபா ஆகியோரின் முயற்சிகளால் ஆசீவதிக்கப்பட்ட இந்த மண்ணில் விசுவாசிகளாகிய உங்கள் மத்தியில் திருப்பலி செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை, பிலிப்பின்ஸ் நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியுள்ள கத்தொலிக்கர்களையும் வாழ்த்துகிறேன்.
இயேசுவின் திரு உடல், திரு இரத்தத்தின் மறை பொருளை இஞ்ஞாயிறு நாம் கொண்டாடுகிறோம். கன்னி மரியிடம் பிறந்த இயேசுவின் மனித உடல், நற்கருணையில் பிரசன்னமாகியுள்ள அவரது திரு உடல், திருச்சபை எனும் அவரது மறை உடல் என மூன்று அம்சங்களில் இயேசுவின் உடலை நாம் கண்ணோக்க வேண்டும்.
அன்று எருசலேமில், மேல் அறையில் அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்த தூய ஆவியானவர், இன்றும் அப்பம், இரசம் இவைகளின் மீது இறங்கி வந்து அவற்றை இயேசுவின் உடலாக, இரத்தமாக மாற்றுகிறார். ஆதி கிறிஸ்துவர்கள் அப்பத்தைப் பகிர்வதிலும், ஆவியால் இணைக்கப்படுவதிலும் தங்களை அடையாளப்படுத்தினர். தங்களிடம் உள்ள அனைத்தையும் பகிர்ந்து வாழ்ந்ததிலும், துன்பத்தில் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருந்ததிலும் கிறிஸ்துவர்களை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
ஆதி கிறிஸ்தவர்கள் தங்கள் அன்பை தங்கள் குழுவுக்கு மட்டும் காண்பிக்கவில்லை. தங்களை தனித்ததொரு குழுவாக அவர்கள் கருதவில்லை, மாறாக கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு பறைசாற்றும் கருவிகளாகத் தங்களைக் கருதினர்.
இந்த பாரம்பரியத்தில் வந்திருக்கும் நாம் இன்று உலகில் மோதல்களும், பிரச்சனைகளும் நிறைந்த இடங்களில் ஒப்புரவையும், ஒற்றுமையும், நம்பிக்கையையும் கொணர அழைக்கப்பட்டுள்ளோம்.


ஜூன் 6 உழைப்பின் கருவி (Instrumentum Laboris) என்ற மத்திய கிழக்கு சிறப்பு ஆயர் பேரவையின் முன்வரைவு திட்ட ஏட்டினை வழங்கும் போது, திருத்தந்தையின் உரை

மத்திய கிழுக்கு பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவையின் ஆரம்பப் பணிகளைத் திறம்பட செய்திருக்கும் உங்களை நான் பாராட்டுகிறேன். இந்தப் பேரவையின் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு என் செபங்கள் உரித்தாகுக.
துருக்கிய கத்தோலிக்க ஆயர்களின் தலைவராகச் சிறப்பாக பணியாற்றிய மறைந்த ஆயர் Luigi Padoveseஐ இந்நேரம் சிறப்பாக நினைவு கூறுகிறேன். உழைப்பின் கருவி (Instrumentum Laboris) என்ற சிறப்பு ஆயர் பேரவையின் முன்வரைவு திட்ட ஏட்டிற்கு ஆயர் Padovese ஆற்றிய பணிகள் ஏராளம். அவரது இந்த எதிர்பாராத, அதிர்ச்சி தரும் மரணம் நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நன்மை, உண்மை, நீதி ஆகியவற்றிற்கு சான்றுகளாக நாம் வாழ வேண்டும் என்பதை ஆயர் அவர்களின் மரணம் நமக்கு நினைவு படுத்துகிறது.
"ஒரே மனமும், ஒரே ஆன்மாவும்" என்ற இந்த ஆயர் பேரவையின் மையப் பொருள் ஒருமைப் பாட்டிலும், சான்று பகர்வதிலும் நாம் வாழ வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
நம் முன்னோரின் தந்தையாம் இறைவன், தன்னை முதன் முதலாக வெளிப்படுத்தியது மத்திய கிழக்கு நாடுகள் என்பதால், இந்தப் பகுதி கிறிஸ்துவர்களின் மனதில் தனிப்பட்ட ஒரு இடத்தை வகிக்கிறது. ஆபிரகாமின் அழைப்பு துவங்கி, கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு வரை இறைவனின் மீட்புச் செயல்கள் தனி மனிதர்கள், குழுக்கள் மூலமாக நிகழ்ந்ததெல்லாம் இந்த நாடுகளில்தான். இங்கிருந்துதான் நற்செய்தி உலகெங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே, இந்தப் பகுதி கிறிஸ்தவ உலகத்தில் தனி மரியாதை பெற்றுள்ளது.
இப்பகுதியில் விசுவாசத்திற்காக மக்கள் படும் துன்பங்களை உலகம் கண்டுகொள்ளவும், இந்தத் துயரங்களுக்குத் தீர்மானமான முடிவுகளை அடையவும் நடைபெற விருக்கும் மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவை உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மத்திய கிழக்குப் பகுதிகளில், சிறப்பாக, புனித பூமியில் நிலவும் அமைதியற்ற, பதட்டமானச் சூழலுக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நீடித்த அமைதியைக் கொண்டு வர பாடு பட வேண்டும்.
இந்த எண்ணங்களுடன், உழைப்பின் கருவி (Instrumentum Laboris) என்ற மத்திய கிழக்கு சிறப்பு ஆயர் பேரவையின் முன்வரைவு திட்ட எட்டினை உங்களுக்கு அளிக்கிறேன். இறைவன் உங்கள் பணிகளைச் சிறப்பாக ஆசீர்வதிப்பாராக!

ஜூன் 6 திருத்தந்தையின் மூவேளை செப உரை

இறைவனின் அன்னையாவதற்கு மரியா அளித்த அந்த ஒப்புதலை ஒவ்வொரு நாளும் நடுப்பகலில் நினைவு கூருகிறது கிறிஸ்தவ பாரம்பரியம். தாராள மனதோடு மரியா அளித்த இந்த "ஆம்" எனும் ஒப்புதல், உலகின் நம்பிக்கையை மனித உரு கொள்ளச் செய்தது.
முப்பது ஆண்டுகள் கழித்து சிலுவையடியில் மரியன்னை கண்ணீரோடு நின்றபோது, அவர் நம்பிக்கை குலைந்திருக்க வேண்டும். இருளின் சக்திகள் அதிகம் வென்றுவிட்டதைப் போல் தோன்றியிருக்க வேண்டும். இருந்தாலும், அன்று வானதூதர் சொன்ன மொழிகளை மரியா ஆழமாகப் பற்றிக் கொண்டிருந்ததால், உயிர்ப்பு ஞாயிறின் மகிமையில் மகிழ்வோடு அவரால் பங்கேற்க முடிந்தது.
உலகை அன்பாலும், ஒற்றுமையாலும் இறைவன் நிரப்ப வேண்டுமென இங்கு கூடியுள்ள நம் அனைவருக்காகவும், சைப்ரஸ் நாட்டு மக்கள் அனைவருக்காகவும், மத்திய கிழக்குப் பகுதி திருச்சபைக்காகவும் அன்னை மரியாவின் பரிந்துரையோடு இணைந்து வேண்டுவோம்.

ஜூன் 6 மூவேளை செப உரை இறுதியில்...

இன்று போலந்து நாட்டில் அருட் தந்தை Jerzy Popieluszko முத்திபேறு பெற்றவராய் உயர்த்தப்படும் தருணத்தைக் குறித்து போலந்து மொழியில் ஒரு சில வார்த்தைகள்:
அருட் தந்தை Jerzy Popieluszko முத்திபேறு பெற்றவராய் பீடங்களை அலங்கரிக்க இருக்கும் இந்நேரத்தில் போலந்து மக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அவரது தீவிர உழைப்பும், அவரது சாட்சிய மரணமும் தீமையை நன்மை வெல்லும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். வாழ்வால் அவர் காட்டிய உதாரணமும், அவரது பரிந்துரையும் குருக்கள், மக்கள் மத்தியில் அன்புக்குச் சாட்சியாய் வாழ இன்னும் அதிக ஆர்வத்தைத் தூண்டுவதாக!

ஜூன் 6 Maronite பேராலயத்தில் திருத்தந்தையின் உரை

அருள் நிறை மரியாவின் பேராலயத்தைக் காண்பதில் பெரிதும் மகிழ்கிறேன். இந்தக் கோவிலுக்கு வந்திருக்கும் வேளையில், இந்தத் தீவில் உள்ள அனைத்து Maronite கோவில்களையும் மனத்தால் தரிசிக்கிறேன். பழம்பெரும் சமுதாயமான உங்கள் அனைவரோடும் மனதால் நெருங்கி வருகிறேன்.
பல்வேறு போராட்டங்கள் மத்தியில் இதுவரை உங்கள் விசுவாசத்தைக் காத்து வந்திருக்கிறீர்கள், இனியும் காத்து வருவீர்கள் என்று ஆசிக்கிறேன்.
கிறிஸ்துவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் ஆலயத்தைக் கட்டி எழுப்பும் கற்கள் என்று புனித பேதுரு கூறிய வார்த்தைகளை இந்தப் பேராலயத்தில் நான் நினைவு கூருகிறேன். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துவின் மறைபொருளான உடலைக் கட்டி எழுப்பும் கடமையைப் பெற்றுள்ளோம்.
உங்களையும், உங்கள் குடும்பங்களையும், சிறப்பாக உங்கள் குழந்தைகளையும் புனித Maronன் பரிந்துரைக்கும், பாதுகாவலுக்கும் ஒப்படைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்குகிறேன்.




வத்திக்கான் வானொலி – செய்திகள் 07.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3 நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் நகர் திரும்பினார் திருத்தந்தை

ஜூன்07, 2010 சைப்ரஸ் நாட்டில் 3 நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு வத்திக்கான் நகர் வந்தடைந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சைப்ரஸ் நாட்டின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளூர் நேரம் மாலை 6.15 மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 8.45 மணிக்கு லர்நாக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை 3மணி நேர பயணத்திற்குப் பின் ரோம் நகர சம்பினோ விமானத்தளம் வந்தடைந்தார்.
விமானத்தளத்தில் இத்தாலிய‌ பிரதமரின் சார்பில் அவரின் நேரடித்துணைச் செயலர் Gianni Letta வந்திருந்து திருத்தந்தையை ஏனைய தலத்திருச்சபை அதிகாரிகளுடன் வரவேற்றார்.
3 நாள் திருப்பயணத்திற்குப் பின் இத்தாலித் திரும்பியுள்ள திருத்தந்தைக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பிய‌ இத்தாலிய அரசுத்தலைவர் ஜியார்ஜியோ நாப்பொலித்தானோ, அதில் சர்வதேச உயர் மதிப்பீடுகளுக்கு மனிதக்குலத்தை திருத்தந்தை மீண்டும் ஒருமுறை இத்திருப்பயணத்தின் போது அழைப்பு விடுத்துள்ளதற்கு தன் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இத்தாலிய அரசு வழங்கிய அடையாள‌ வரவேற்பில் கலந்துகொண்டு அங்கிருந்த தலத்திருச்சபை அதிகாரிகளுக்கும் வாழ்த்துக் கூறிய பின்னர் உள்ளூர் நேரம் இரவு 8.40 மணிக்கு சம்பினோ விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு வத்திகான் வந்தடைந்தார் பாப்பிறை. இத்துடன் அவரின் சைப்ரஸ் நாட்டிற்கான 3 நாள் திருப்பயணம் அதாவது அவரின் 16வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.


மாற்றத்தின் கருவிகளாக இளைஞர்களை ஊக்குவிக்க இந்திய ஆயரின் அழைப்பு

ஜூன்07, 2010 இயேசுவின் வாழ்வு மற்றும் படிப்பினைகளை அடிப்படையாகக்கொண்ட புதிய‌தொரு சமூகத்தை உருவாக்க மாற்றத்தின் கருவிகளாக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் பெல்லாரி ஆயர் Henry D'Souza.
இளைஞர்களிடையே பணியாற்றும் மறைமாவட்ட இயக்குனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 18வது இந்திய அளவிலான 10 நாள் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து உரையாற்றிய ஆயர், இளைஞர்களிடையே பணிபுரிவோர் சிறந்த எடுத்துக்காட்டுகளுடன், இளையோரின் வருங்கால வாழ்வுக் குறித்த நம்பிக்கையை விதைப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
இளைஞர்களுக்கு வழிகாட்ட முன் வருபவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ மதிப்பீடுகளில் மூழ்கி ஊறியவர்களாய் தங்கள் வார்த்தையிலும் செயலிலும் அவைகளை வெளிப்படுத்த வல்லவர்களாய் இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் ஆயர் D'Souza.
வ‌ன்முறை ம‌ற்றும் குற்ற‌ங்க‌ளின் அதிக‌ரிப்பு, ம‌னித‌ மாண்பு மீற‌ப்ப‌டுத‌ல், சுற்றுச்சூழ‌ல் சீர்கேடு, உல‌காயுதப் போக்குக‌ளின் அள‌வுக்கு மீறிய‌ நிலை போன்ற‌ ச‌வால்க‌ளை இன்றைய‌ இளைய‌ ச‌முதாய‌ம் எதிர்கொள்கின்றது என்ற‌ ஆய‌ர், இருப்பினும் இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் மாற்ற‌த்தின் க‌ருவிக‌ளாக‌ச் செய‌ல்ப‌ட‌ என்றும் த‌யாராக‌ உள்ளார்க‌ள் என்ப‌தையும் சுட்டிக்காட்டினார்.
இந்திய‌ ஆய‌ர் பேரவையின் இளைஞ‌ர்க‌ளுக்கான‌ அவை பங்களூருவில் ஏற்பாடுச் செய்துள்ள‌ இப்ப‌யிற்சி முகாம், வ‌ரும் வியாழ‌ன‌ன்று நிறைவுக்கு வ‌ருகின்ற‌து.


இந்தியக் கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உழைக்க அழைப்பு

ஜூன்07, 2010 இந்தியக் கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களும் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சுற்றுச்சூழல் சவால்களை கையிலெடுத்துச் செயலாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை.
பலவகைப்பட்ட உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கென நாம் இறைவனுக்கு நன்றி கூறும் அதேவேளை, தனிப்பட்ட மனிதர்களின் பேராசையால் ஒவ்வொரு நாளும் இவ்வுலகிலிருந்து இயற்கை வளங்கள் காணாமற்போய் வருவதைக் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார் இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் நீதி, அமைதி மற்றும் இயற்கைக்கான அவையின் செயலர் குரு. கிறிஸ்டோபர் ராஜ்குமார்.
உலகத்தைப் படைத்து அதனை இப்போதும் காத்து வருபவர் இறைவனே என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சமூகங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் சவால்களை மேற்கொள்ள உழைக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
வல்லுனர்களின் கூற்றுப்படி, இவ்வுலகின் தவறான அணுகுமுறைகளால் ஒவ்வொரு நாளும் இவ்வுலகின் 3 கோடி முதல் 5 கோடி உயிரினங்களுள் 100 இனங்கள் அழிவுக்குள்ளாகி வருகின்றன. 17,291 உயிரினங்கள் அழிவுறும் தறுவாயில் இருப்பதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


நேபாளத்தில் தலத்திருச்சபையின் உதவியுடன் புதிய கிறிஸ்தவ ஐக்கிய அவை.

ஜூன்07, 2010 பொதுநல தேசிய விவகாரங்களில் ஒன்றிணைந்த உறுதியான கிறிஸ்தவக் குரலுக்கு வழிவகுக்கும் என்ற நோக்குடன், நேபாளத்தின் கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் ஏனையக் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து புதிய கிறிஸ்தவ ஐக்கிய அவை ஒன்றை உருவாக்கியுள்ளது.
நேபாள கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைந்துப் பணியாற்ற அந்நாட்டின் 9 கிறிஸ்தவ அமைப்புகள் கையெழுத்திட்டுள்ள அதேவேளை, ஏனைய இரண்டு அமைப்புகள் விரைவில் இணைய உள்ளதாகவும் அதுவரை முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளன.
உள்நாட்டு நிதி உதவிகளுடனேயே செயல்பட உள்ள இவ்வவையில் ஒருங்கமைப்பாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவர்.
அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத்தொடர்பு நிறுவனங்களிடம் உரையாடும்போது ஒருமித்த குரலில் கருத்துக்களை முன் வைப்பது பயன் தருவதாய் அமையும் என்ற நோக்கில் இவ்வவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Gaza பகுதியில் இஸ்ராயேல் ராணுவத்தின் தடைகளை விலக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து கர்தினால்.

ஜூன்07, 2010 Gaza பகுதியில் இஸ்ராயேல் ராணுவத்தால் விதிக்கப்பட்டுள்ளத் தடைகளை விலக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து கர்தினால் Sean Brady.
இப்பகுதியில் சர்வதேசச் சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது உலகின் அனைத்து நாடுகளின் கடமையாகிறது என்றார் கர்தினால்.
கடந்த வாரம் திங்களன்று உதவிக் கப்பல் ஒன்றை இஸ்ராயேல் ராணுவத்தினர் தாக்கியதில் கொல்லப்பட்ட 9 துருக்கியர்களின் குடும்பங்களுக்குத் தன் அனுதாபங்களை வெளியிடுவதாகவும் உரைத்த அயர்லாந்து கர்தினால், இச்செயல் சர்வதேசக் கட‌ற்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
அனைவருக்குமான நீதி மற்றும் நீடித்த அமைதியை மத்தியக்கிழக்குப் பகுதியில் அனுமதிப்பதற்கு உண்மையான ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்றார் கர்தினால் Sean Brady.
மத்தியக்கிழக்கு நாடுகளின் பிரகாசமான வருங்காலத்தை உறுதிச் செய்வதற்கான சர்வதேச நாடுகளின் கடமையையும் வலியுறுத்தினார் அயர்லாந்து கர்தினால்.


இந்தோனேசிய நாடு எதிர்கொள்ளும் தீவிரமான இரு அபாயங்கள் குறித்து இயேசு சபை குரு விடுத்துள்ள எச்சரிக்கை

ஜூன்07, 2010 கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரமும், சமய அடிப்படைவாதமும் இந்தோனேசிய நாடு எதிர்கொள்ளும் தீவிரமான இரு அபாயங்கள் என்று இயேசு சபை குரு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இந்தோனேசியாவைக் கட்டியெழுப்புதல்” என்ற பொருளில் சென்ற வாரம் ஜகார்த்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய Franz Magnis-Suseno என்ற இயேசு சபைக் குரு இவ்வாறு கூறினார்.
நாட்டின் அடிப்படைக் கலாச்சாரம் பஞ்சசீலக் கொள்கைகளில் அடங்கியுள்ளதாகக் கூறிய அருட்தந்தை Franz, 1945ல் நிறுவப்பட்ட அரசியல் சாசனம் பஞ்சசீலக் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது, அதன்படி, கடவுள் பக்தி, நாட்டின் ஒருமைப்பாடு, குடியரசு, நீதி என்பவை இந்தோனேசியாவின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.
இந்தோனேசியாவில் தற்போது பரவலாகக் காணக் கிடக்கும், போதைப் பொருள் ஆதிக்கம், சமுதாய அக்கறையின்மை, பொது வாழ்வில் சட்டம் ஒழுங்குகளின் சீர்குலைவு ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடைகளாக உள்ளதென அருட் தந்தை Franz Magnis-Suseno மேலும் கூறினார்.








வத்திக்கான் வானொலி – செய்திகள் 07.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3 நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் நகர் திரும்பினார் திருத்தந்தை

ஜூன்07, 2010 சைப்ரஸ் நாட்டில் 3 நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு வத்திக்கான் நகர் வந்தடைந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சைப்ரஸ் நாட்டின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளூர் நேரம் மாலை 6.15 மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 8.45 மணிக்கு லர்நாக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை 3மணி நேர பயணத்திற்குப் பின் ரோம் நகர சம்பினோ விமானத்தளம் வந்தடைந்தார்.
விமானத்தளத்தில் இத்தாலிய‌ பிரதமரின் சார்பில் அவரின் நேரடித்துணைச் செயலர் Gianni Letta வந்திருந்து திருத்தந்தையை ஏனைய தலத்திருச்சபை அதிகாரிகளுடன் வரவேற்றார்.
3 நாள் திருப்பயணத்திற்குப் பின் இத்தாலித் திரும்பியுள்ள திருத்தந்தைக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பிய‌ இத்தாலிய அரசுத்தலைவர் ஜியார்ஜியோ நாப்பொலித்தானோ, அதில் சர்வதேச உயர் மதிப்பீடுகளுக்கு மனிதக்குலத்தை திருத்தந்தை மீண்டும் ஒருமுறை இத்திருப்பயணத்தின் போது அழைப்பு விடுத்துள்ளதற்கு தன் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இத்தாலிய அரசு வழங்கிய அடையாள‌ வரவேற்பில் கலந்துகொண்டு அங்கிருந்த தலத்திருச்சபை அதிகாரிகளுக்கும் வாழ்த்துக் கூறிய பின்னர் உள்ளூர் நேரம் இரவு 8.40 மணிக்கு சம்பினோ விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு வத்திகான் வந்தடைந்தார் பாப்பிறை. இத்துடன் அவரின் சைப்ரஸ் நாட்டிற்கான 3 நாள் திருப்பயணம் அதாவது அவரின் 16வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.


மாற்றத்தின் கருவிகளாக இளைஞர்களை ஊக்குவிக்க இந்திய ஆயரின் அழைப்பு

ஜூன்07, 2010 இயேசுவின் வாழ்வு மற்றும் படிப்பினைகளை அடிப்படையாகக்கொண்ட புதிய‌தொரு சமூகத்தை உருவாக்க மாற்றத்தின் கருவிகளாக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் பெல்லாரி ஆயர் Henry D'Souza.
இளைஞர்களிடையே பணியாற்றும் மறைமாவட்ட இயக்குனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 18வது இந்திய அளவிலான 10 நாள் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து உரையாற்றிய ஆயர், இளைஞர்களிடையே பணிபுரிவோர் சிறந்த எடுத்துக்காட்டுகளுடன், இளையோரின் வருங்கால வாழ்வுக் குறித்த நம்பிக்கையை விதைப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
இளைஞர்களுக்கு வழிகாட்ட முன் வருபவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ மதிப்பீடுகளில் மூழ்கி ஊறியவர்களாய் தங்கள் வார்த்தையிலும் செயலிலும் அவைகளை வெளிப்படுத்த வல்லவர்களாய் இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் ஆயர் D'Souza.
வ‌ன்முறை ம‌ற்றும் குற்ற‌ங்க‌ளின் அதிக‌ரிப்பு, ம‌னித‌ மாண்பு மீற‌ப்ப‌டுத‌ல், சுற்றுச்சூழ‌ல் சீர்கேடு, உல‌காயுதப் போக்குக‌ளின் அள‌வுக்கு மீறிய‌ நிலை போன்ற‌ ச‌வால்க‌ளை இன்றைய‌ இளைய‌ ச‌முதாய‌ம் எதிர்கொள்கின்றது என்ற‌ ஆய‌ர், இருப்பினும் இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் மாற்ற‌த்தின் க‌ருவிக‌ளாக‌ச் செய‌ல்ப‌ட‌ என்றும் த‌யாராக‌ உள்ளார்க‌ள் என்ப‌தையும் சுட்டிக்காட்டினார்.
இந்திய‌ ஆய‌ர் பேரவையின் இளைஞ‌ர்க‌ளுக்கான‌ அவை பங்களூருவில் ஏற்பாடுச் செய்துள்ள‌ இப்ப‌யிற்சி முகாம், வ‌ரும் வியாழ‌ன‌ன்று நிறைவுக்கு வ‌ருகின்ற‌து.


இந்தியக் கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உழைக்க அழைப்பு

ஜூன்07, 2010 இந்தியக் கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களும் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சுற்றுச்சூழல் சவால்களை கையிலெடுத்துச் செயலாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை.
பலவகைப்பட்ட உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கென நாம் இறைவனுக்கு நன்றி கூறும் அதேவேளை, தனிப்பட்ட மனிதர்களின் பேராசையால் ஒவ்வொரு நாளும் இவ்வுலகிலிருந்து இயற்கை வளங்கள் காணாமற்போய் வருவதைக் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார் இந்தியக் கிறிஸ்தவ சபைகளின் நீதி, அமைதி மற்றும் இயற்கைக்கான அவையின் செயலர் குரு. கிறிஸ்டோபர் ராஜ்குமார்.
உலகத்தைப் படைத்து அதனை இப்போதும் காத்து வருபவர் இறைவனே என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சமூகங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் சவால்களை மேற்கொள்ள உழைக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
வல்லுனர்களின் கூற்றுப்படி, இவ்வுலகின் தவறான அணுகுமுறைகளால் ஒவ்வொரு நாளும் இவ்வுலகின் 3 கோடி முதல் 5 கோடி உயிரினங்களுள் 100 இனங்கள் அழிவுக்குள்ளாகி வருகின்றன. 17,291 உயிரினங்கள் அழிவுறும் தறுவாயில் இருப்பதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


நேபாளத்தில் தலத்திருச்சபையின் உதவியுடன் புதிய கிறிஸ்தவ ஐக்கிய அவை.

ஜூன்07, 2010 பொதுநல தேசிய விவகாரங்களில் ஒன்றிணைந்த உறுதியான கிறிஸ்தவக் குரலுக்கு வழிவகுக்கும் என்ற நோக்குடன், நேபாளத்தின் கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் ஏனையக் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து புதிய கிறிஸ்தவ ஐக்கிய அவை ஒன்றை உருவாக்கியுள்ளது.
நேபாள கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைந்துப் பணியாற்ற அந்நாட்டின் 9 கிறிஸ்தவ அமைப்புகள் கையெழுத்திட்டுள்ள அதேவேளை, ஏனைய இரண்டு அமைப்புகள் விரைவில் இணைய உள்ளதாகவும் அதுவரை முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளன.
உள்நாட்டு நிதி உதவிகளுடனேயே செயல்பட உள்ள இவ்வவையில் ஒருங்கமைப்பாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவர்.
அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத்தொடர்பு நிறுவனங்களிடம் உரையாடும்போது ஒருமித்த குரலில் கருத்துக்களை முன் வைப்பது பயன் தருவதாய் அமையும் என்ற நோக்கில் இவ்வவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Gaza பகுதியில் இஸ்ராயேல் ராணுவத்தின் தடைகளை விலக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து கர்தினால்.

ஜூன்07, 2010 Gaza பகுதியில் இஸ்ராயேல் ராணுவத்தால் விதிக்கப்பட்டுள்ளத் தடைகளை விலக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்து கர்தினால் Sean Brady.
இப்பகுதியில் சர்வதேசச் சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது உலகின் அனைத்து நாடுகளின் கடமையாகிறது என்றார் கர்தினால்.
கடந்த வாரம் திங்களன்று உதவிக் கப்பல் ஒன்றை இஸ்ராயேல் ராணுவத்தினர் தாக்கியதில் கொல்லப்பட்ட 9 துருக்கியர்களின் குடும்பங்களுக்குத் தன் அனுதாபங்களை வெளியிடுவதாகவும் உரைத்த அயர்லாந்து கர்தினால், இச்செயல் சர்வதேசக் கட‌ற்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
அனைவருக்குமான நீதி மற்றும் நீடித்த அமைதியை மத்தியக்கிழக்குப் பகுதியில் அனுமதிப்பதற்கு உண்மையான ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்றார் கர்தினால் Sean Brady.
மத்தியக்கிழக்கு நாடுகளின் பிரகாசமான வருங்காலத்தை உறுதிச் செய்வதற்கான சர்வதேச நாடுகளின் கடமையையும் வலியுறுத்தினார் அயர்லாந்து கர்தினால்.


இந்தோனேசிய நாடு எதிர்கொள்ளும் தீவிரமான இரு அபாயங்கள் குறித்து இயேசு சபை குரு விடுத்துள்ள எச்சரிக்கை

ஜூன்07, 2010 கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரமும், சமய அடிப்படைவாதமும் இந்தோனேசிய நாடு எதிர்கொள்ளும் தீவிரமான இரு அபாயங்கள் என்று இயேசு சபை குரு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இந்தோனேசியாவைக் கட்டியெழுப்புதல்” என்ற பொருளில் சென்ற வாரம் ஜகார்த்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய Franz Magnis-Suseno என்ற இயேசு சபைக் குரு இவ்வாறு கூறினார்.
நாட்டின் அடிப்படைக் கலாச்சாரம் பஞ்சசீலக் கொள்கைகளில் அடங்கியுள்ளதாகக் கூறிய அருட்தந்தை Franz, 1945ல் நிறுவப்பட்ட அரசியல் சாசனம் பஞ்சசீலக் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது, அதன்படி, கடவுள் பக்தி, நாட்டின் ஒருமைப்பாடு, குடியரசு, நீதி என்பவை இந்தோனேசியாவின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.
இந்தோனேசியாவில் தற்போது பரவலாகக் காணக் கிடக்கும், போதைப் பொருள் ஆதிக்கம், சமுதாய அக்கறையின்மை, பொது வாழ்வில் சட்டம் ஒழுங்குகளின் சீர்குலைவு ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடைகளாக உள்ளதென அருட் தந்தை Franz Magnis-Suseno மேலும் கூறினார்.



வத்திக்கான் வானொலி – செய்திகள் 08.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இஸ்ராயேல் நவடிக்கையைக் குறித்து வத்திக்கான் வானொலியில் பேராயர் தொம்மாசியின் பேட்டி

ஜூன்08,2010 உதவிக்கப்பலைத் தாக்கி 9 உயிரிழப்புகளுக்குக் காரணமான இஸ்ராயேலின் நடவடிக்கையை ஐ.நா. பொது அவையிலேயே திருப்பீடத்தின் சார்பில் கண்டித்துள்ளதாக அறிவித்தார் பேராயர் சில்வானோ தொம்மாசி.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொம்மாசி வத்திக்கான் வானொலிக்கு அளித்தப் பேட்டியில், வன்முறைகள் மூலம் ஆக்கபூர்வமான ந்ல்ல விளைவுகளைப் பெறமுடியாது என்ற திருத்தந்தையின் கருத்துக்களை தான் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
சர்வதேசக் கடற்பகுதியில் இடம்பெற்ற இவ்வன்முறை, சர்வதேசச் சட்டங்களும் மனிதாபிமான விதிகளும் இன்றைய உலகில் மதிக்கப்படுவதில்லை என்பதையேக் காண்பிக்கின்றன என்ற கவலையை வெளியிட்டதுடன், இத்தகைய வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியவை எனவும் தெரிவித்தார்.
இஸ்ராயேல் நாட்டிற்கு வாழ்வதற்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் இருக்கும் உரிமைகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக உரைத்த பேராயர் தொம்மாசி, சர்வதேசச் சட்டங்களை மதிப்பது மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமே உண்மையான பாதுகாப்பைப் பெறமுடியும் எனவும் கூறினார்.
மத்தியக்கிழக்குப் பகுதியின் அரசியல் மற்றும் ராணுவ நிலையற்றத் தன்மைகளின் விளைவே இத்தகைய வன்முறைச் செயல்பாடுகள் என மேலும் கூறினார் ஐநாவிற்கான திருப்பீடத்தின் பிரதிநிதி பேராயர் தொம்மாசி.


அன்னை தெரேசாவை புனிதையாக அறிவிப்பதற்கு மேலும் ஒரு புதுமைக்காக திருச்சபை காத்திருக்கிறது

ஜூன்08,2010 அன்னை தெரேசாவை புனிதையாக அறிவிப்பதற்கு முன்னால் மேலும் ஒரு புதுமைக்காக திருச்சபை காத்திருப்பதாக தெரிவித்தார் அன்னை தெரேசாவின் அந்நிலைக்கானத் தயாரிப்புக்களைக் கவனித்து வரும் குரு Brian Kolodiejchuk.
அன்னை தெரேசாவால் 1984ம் ஆண்டுத் துவ‌க்க‌ப்ப‌ட்ட‌ குருக்க‌ளுக்கான‌ பிற‌ர‌ன்பு ம‌றைபோத‌க‌ர்கள் ச‌பையின் அதிப‌ரான‌ குரு Kolodiejchuk பேசுகையில், முத்திப்பேறு பெற்ற அன்னைதெரேசாவின் பரிந்துரைகளை வேண்டியதன் வழி கொடைகள் பலவற்றைப் பெற்றதாக எண்ணற்றோர் அறிவித்துள்ள போதிலும், புதுமை என்ற வகையில் இதுவரை எதுவும் கிட்டவில்லை எனவும் அதற்காகச் செபித்து வருவதாகவும் கூறினார்.
மனிதக் குலத்தின் புனிதத்தன்மை குறித்து ஓர் ஆழமான அறிவைக் கொண்டிருந்த அன்னை தெரேசா, மற்றவர்களுக்கான பணியில் நம்மையேக் கையளிக்கும்போதுதான் உண்மையான மகிழ்வையும் நிறைவையும் காணமுடியும் என்பதை நமக்குக் காண்பித்துச் சென்றுள்ளார் என்றார் பிற‌ர‌ன்பு ம‌றைபோத‌க‌ர்கள் ச‌பையின் அதிப‌ரான‌ குரு Kolodiejchuk.


சட்ட உதவி மையம் ஒன்றைத் திறந்துள்ளது மங்களூர் மறைமாவட்டம்

ஜூன்08,2010 பொதுமக்களுக்கான மறைமாவட்ட சட்ட உதவி மையம் ஒன்றை இத்திங்களன்று ஆசீர்வதித்துத் திறந்து வைத்தார் மங்களூர் ஆயர் Aloysius Paul D' Souza.
மங்களூர் கிறிஸ்தவச் சமூகத்திற்கான சட்ட உதவிகளையும், கல்வி மற்றும் வழிகாட்டுதல் பணிகளையும் மனதில் கொண்டு இச்சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக உரைத்த ஆயர், சட்டப்பிரச்சனைகளை எதிர் நோக்குபவர்களுக்கு இத்தகைய மையங்கள் ஓர் அத்தியாவசியத் தேவை என்றார்.
மோதல்களில் ஈடுபடுபவர்களிடையே இணக்கமானத் தீர்வைக் காண உதவவும், மங்களுர் மறைமாவட்டத்தின் ஒவ்வொருக் கிறிஸ்தவருக்கும் அடிப்படை சட்ட அறிவை வழங்கவும்,, புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தரவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்களை ஊக்குவிக்கவும், என்ற நோக்குடன் இம்மறைமாவட்ட சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.


தென் இந்தியாவின் பசுமையை வளர்க்க கேரளாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் முயன்று வருகின்றன

ஜூன்08,2010 புவி வெப்பமடைதலைத் தடுக்கவும், தென் இந்தியாவின் பசுமையை வளர்க்கவும் கேரளாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் முயன்று வருகின்றன.
நடக்கும் ஜூன் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாக அறிவித்துள்ள மலன்காரா சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபை, இம்மாதத்தில் அச்சபையைச் சார்ந்த அனைத்து பங்குகளிலும் 10,000 மரங்களை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச் சூழல் பிரச்சனைகளைக் குறித்து ஆழமாக விவாதிக்க சீரோ மலபார் சபையும் கொச்சியில் ஆகஸ்ட் மாதம் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட் தந்தை Paul Thelakat கூறினார்.
இப்போது உலகில் வாழும் இத்தலைமுறையினர் சுற்றுச் சூழலைச் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சீர் குலைத்து வருவது உண்மையிலேயே ஒரு பாவம் என்றும், இந்தப் பிரச்சனையைக் கத்தோலிக்க திருச்சபை மிகக் கவலையுடன் சிந்தித்து வருகிறது என்றும் அருட்தந்தை Thelakat மேலும் கூறினார்.
மக்கள் மத்தியில் "பசுமை ஆன்மீக"த்தை வளர்ப்பதில் திருச்சபை மிகவும் ஆர்வமாய் உள்ளதென காஞ்சிரப்பள்ளி ஆயர் Mathew Arackal கூறினார்.
இஞ்ஞாயிறன்று புனித யோசேப்புப் பேராலயத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த திருவனந்தபுரம் லத்தீன் ரீதி பேராயர் சூசை பாக்கியம், பசுமை ஆன்மீகத்தைக் கடைபிடிக்க தன் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார்.


இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்படுதல் குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்
ஜூன்08,2010 இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்படுதல் மற்றும் மதசகிப்பற்றத் தன்மைகளின் ஏனைய வெளிப்பாடுகள் குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.
அமைதிக்கான மதங்களின் இந்தோனேசிய அவையின் பொதுச்செயலர் தியோஃபிலஸ் பெலா உரைக்கையில், இதுவரை இந்தோனேசியாவில் தாக்கப்பட்ட, மூடும்படிக் கட்டாயப்படுத்தப்பட்ட, மத வழிபாடுகளுக்கான அனுமதி புதுப்பிக்கப்பட மறுக்கப்பட்ட கோவில்கள் குறித்த விவரங்களை அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரி மரியா ஒட்டேரோ உடன் ஆன சந்திப்பின் போது சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார்.
இந்தோனேசிய மத சமூகங்களிடையே நல்லுறவை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகள் உதவுவார்கள் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார் கத்தோலிக்கரான பெலோ.
2009ம் ஆண்டிலிருந்து இதுவரை 30 கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது மூடப்பட அச்சிறுத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார் அவர்.
இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்வதாகவும் கவலையை வெளியிட்டார் பெலோ.


ஆஸ்திரேலியாவின் சில மறைமாவட்டங்களில் குருமட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஜூன்08,2010 ஆஸ்திரேலியாவின் சில மறைமாவட்டங்களில் குருமட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது தலத் திருச்சபை.
சிட்னியின் புனித மரி பேராலயத்தில் கர்தினால் ஜார்ஜ் பெல் வரும் வெள்ளியன்று 6 பேரை குருக்களாகத் திருநிலைப்படுத்த உள்ளது, 1983ம் ஆண்டிற்குப் பின்னான பெரிய எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு குருமட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஒரு புதுமை என்றேச் சொல்லவேண்டும் என்ற மெல்போர்னின் Corpus Christi குருமட அதிபர் குரு Brendan Lane அம்மறைமாவட்டத்திலும் இவ்வாண்டு 6 குருக்களின் திருநிலைப்பாட்டுச் சடங்கு இடம்பெறும் என்றார்.
2000மாம் ஆண்டில் 17 குருமட மாண்வர்களையேக் கொண்டு குருக்களின் பற்றாக்குறையை மிகப்பெரிய அளவில் சந்தித்த சிட்னி மறைமாவட்டத்தில் தற்போது 63 குருமடமாணவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலும் உலக இளையோர் தினங்களும் இன்றைய இளையச் ச‌மூகத்திற்கு துண்டுதலாக இருந்து குருமட மாணவர்கள் பெருக உதவியுள்ளனர் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் சிட்னி நல்லாயன் குருமட அதிபர் குரு அந்தோனி பெர்ஸி.


இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான ஐக்கியம் குறித்து தென்கொரிய தலத்திருச்சபை

ஜூன்08,2010 இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான ஐக்கியம் அதன் போக்கிலேயே அவசரமின்றி இடம்பெறவேண்டும் எனவும், வட கொரியாவிற்கான நற்செய்தி அறிவிப்பு என்பது அப்பகுதி அகதிகளிடையேயான பணியாக இருக்கவேண்டும் என தென் கொரியக் கத்தோலிக்கர்கள் விரும்புவதாகவும் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றுத் தெரிவிக்கிறது.
வடகொரியாவிற்கு நற்செய்தியை எடுத்துச்செல்ல தென்கொரிய பொதுநிலை விசுவாசிகளுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் கத்தோலிக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
1950ம் ஆண்டு கொரியப் போர் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டு நினைவையொட்டி நடத்தப்பட்ட இவ்வாய்வில், கத்தோலிக்கர்கள் இரு கொரிய நாடுகளின் ஒன்றிணைப்பிற்கு தயாரிப்பதற்கு அவர்களுக்கிருக்கும் கடமை குறித்தும் எடுத்தியம்பியுள்ளனர்.