Monday, July 22, 2013

செய்திகள்
22.9.07.13

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : எப்பொழுதும் செபத்தையும் செயலையும் இணைத்து வாழுங்கள்

3. திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரேஇயேசுவின் குரலைக் கேளுங்கள்

4. திருத்தந்தை பிரான்சிஸ் பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியிடம் ஒப்படைப்பு

5. ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்குஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா?

6. ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் ப‌குதியில் அமைதி குறித்த‌ க‌த்தோலிக்க‌ அமைப்பின் முய‌ற்சிக்கு வெற்றி

7. பாகிஸ்தானில் மதச்சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை

8. நுரையீரல் நோயால் இறக்கும் குழந்தைகள் 4.10 இலட்சம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம்

ஜூலை,22,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முதல் வெளிநாட்டு மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை இத்திங்கள் உரோம் நேரம் காலை 8.45 மணிக்குத் தொடங்கினார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இத்திருப்பயணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்ரியோ டி ஜெனீரோவின்“Galeão/Antonio Carlos Jobim” பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடையும்போது அந்நாட்டு நேரம் மாலை 4 மணியாக இருக்கும். இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடைப்பட்ட கால இடைவெளி 8 மணி 30 நிமிடங்களாகும்.  
இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறுவரை நடைபெறும் இவ்விளையோர் தின நிகழ்வுகள், நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குகள்(மத்.28,19)”என்ற தலைப்பில் இடம்பெறும்.
மேலும்12 மணி 15 நிமிடங்கள் கொண்ட இந்த நீண்ட விமானப் பயணத்தில் தான் கடந்து செல்லும் மௌரித்தானியா,அல்ஜீரியாசெனெகல், இன்னும் இத்தாலி ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பயணத்தில் பிரேசில் பாதுகாவலர் புனித அப்பெரிசிதா அன்னைமரியா திருத்தலம் செல்வார்பிரேசில் அரசுத்தலைவரைச் சந்திப்பார்இலட்சக்கணக்கான உலக இளையோரைச் சந்திப்பார்14 உரைகளுக்குமேல் நிகழ்த்துவார்,இப்படி பல முக்கிய நிகழ்வுகளை நடத்திஜூலை 29, வருகிற திங்கள் முற்பகல் 11.30 மணியளவில் உரோம் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
A330 ஆல் இத்தாலியா விமானத்தில் இத்திருப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில்இன்னும் சில மணிநேரங்களில் நான் பிரேசில் சென்றடைவேன்28வது உலக இளையோர் தினத்தைக் கொண்டாடுவதற்காக விரைவில் உங்களோடு இருக்கப்போகிறேன் என்பதால் எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது என்று எழுதியுள்ளார்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : எப்பொழுதும் செபத்தையும் செயலையும் இணைத்து வாழுங்கள்

ஜூலை,22,2013. பொதுநிலையினராகவோ, துறவிகளாகவோ அல்லது அருள்பொழிவு செய்யப்பட்ட அருள்பணியாளர்களாகவோ யாராக இருந்தாலும் கிறிஸ்தவர்களுக்குத் தியானமும் சேவையும்செபமும் செயலும் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இயேசுவுக்கு மிகவும் விசுவாசமான சீடர்களாயிருந்த மார்த்தா,மரியா ஆகிய இரு சகோதரிகள் தங்களது பெத்தானியா வீட்டில் இயேசுவை உபசரித்த நிகழ்வை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ்,தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவிகளைச் செய்யத் தூண்டாத செபம் பலனற்ற மற்றும் முழுமையற்ற செபம் என்று கூறினார்.
அதேநேரம்திருப்பணிகளைச் செய்யும்போது வேலையை மட்டும் செய்துவிட்டு செபத்தில் கடவுளோடு உரையாடல் நடத்த நேரம் ஒதுக்காதபோதுதேவையில் இருக்கும் நம் சகோதரரில் பிரசன்னமாக இருக்கும் கடவுளுக்குப் பணிசெய்வதில் ஆபத்தைக் கொண்டுவரும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதீன வாழ்வின் தந்தையான புனித பெனடிக்ட் சொல்லியிருப்பதுபோலசெபமும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ்செபமும் செயலும் ஒன்றிலிருந்து மற்றதை பிரிக்கமுடியாததாய் இருக்கும்அதேவேளைஅனைத்துப் பிறரன்புப் பணிகளுக்கும் செபம் அடித்தளமாகச் செயல்படுகின்றது என்று கூறினார்.
நாம் பிறருக்கு உதவி செய்யும்போது அது இயேசுவின்மீதுள்ள அன்பால் செய்கிறோம்தேவையில் இருப்போருக்கு தொண்டுபுரியும்போது அது நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். 
நமது அனைத்துச் செயல்களுக்கும் முக்கிய ஊற்றாக இருக்கும் இறைவார்த்தையைக் கேட்பதிலிருந்துகிறிஸ்தவர்களின் வாழ்வில் சேவையும் பிறரன்புப் பணிகளும் ஒருபோதும் பிரிந்துவிடாமல் இருக்க வேண்டும்எப்படியெனில் சீடருக்குரிய மனநிலையுடன்இயேசுவின் பாதத்தடியில் அமர்ந்து இறைவார்த்தையைக் கேட்ட மரியாபோல.. என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரேஇயேசுவின் குரலைக் கேளுங்கள்

ஜூலை,22,2013. வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நின்று கொண்டிருந்த திருப்பயணிகளில் சிலர்போன் வியாஜ்ஜோ என்ற திருப்பயண வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விளம்பரத் துணிகளைப் பிடித்திருந்ததைத் தான் நின்றுகொண்டிருந்த வத்திக்கான் ஜன்னல் வழியாகப் பார்த்து அதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்திங்களன்று தான் தொடங்கியுள்ள பிரேசில் நாட்டுத் திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்தத் திருப்பயணத்தில் செபத்தின்மூலம் ஆன்மீக வழியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இப்பயணம்உலகெங்கிலுமுள்ள இளையோரின் மாபெரும் திருப்பயணத்தின் புதிய படிநிலை என்றும் குறிப்பிட்டார்.
உலக இளையோர் தினத்தின் இந்த ஒரு வாரத்தை உலக இளையோர் வாரம் என்றும் அழைத்த திருத்தந்தை பிரான்சிஸ்,இளையோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியிடம் ஒப்படைப்பு

ஜூலை,22,2013. இச்சனிக்கிழமை மாலையில் உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குச் சென்று தனது பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தை அன்னைமரியின் பாதுகாவலில் வைத்து,ரியோ டி ஜெனீரோவில் கூடுகின்ற மற்றும் உலகெங்கும் இருக்கின்ற இளையோருக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமை மாலை 4.45 மணிக்குபுனித மேரி மேஜர் பசிலிக்கா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ்,அப்பசிலிக்காவிலுள்ளஉரோம் மக்களின் அன்னைமரி திருப்படத்தின் முன்பாக ஏறக்குறைய அரைமணி நேரம் தனியாகச் செபித்த பின்னர்ஒரு மலர்க் கிரீடத்தையும்28வது உலக இளையோர் தின அடையாளம் பதித்த மெழுகுதிரியையும் ஏற்றி வைத்தார்.
அன்னைமரி திருப்படம் வைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்துக்குத் திருப்பூட்டறையின் பக்கக்கதவு வழியாக நேரிடையாகச் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்,அந்நேரத்தில் அங்கிருந்த விசுவாசிகளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிஇந்தப் பிரேசில் நாட்டுத் திருப்பயணத்தில்"செபம், விசுவாசம்தபம்" ஆகியவற்றோடு தன்னோடு உடன் வருமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

5. ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்குஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா?

ஜூலை,22,2013. க‌ருக்க‌லைப்பைத் தடைச்செய்யும் கொரியச் சட்டங்கள் குறித்து கவலைகொள்ளாமல் கருக்கலைப்பை மறைமுகமாக ஆதரிக்கும் அந்நாட்டு நீதித்துறையைக் குற்றஞ்சாட்டியுள்ளது கொரிய தலத்திருஅவை.
400க்கும் மேற்ப‌ட்ட‌ ச‌ட்ட‌ விரோத‌ க‌ருக்க‌லைப்புக்க‌ளை மேற்கொண்ட‌ நான்கு பேருக்குஉரிய‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌த் த‌வ‌றியுள்ள‌ அந்நாட்டின் Daejeon நீதிம‌ன்ற‌ தீர்ப்பு குறித்து க‌வ‌லையை வெளியிட்ட‌ கொரிய‌ ஆய‌ர் பேர‌வையின் வாழ்வுக்கு ஆத‌ர‌வான‌ ஆணைக்குழுவின் த‌லைவ‌ர் ஆய‌ர் Linus Lee Seong-hyoகுற்ற‌த்தின் தீவிர‌த்தை உண‌ர்த்துவ‌தாக‌ தீர்ப்பு இல்லை என்றார்.
தாயின் உயிருக்கு ஆபத்து என்பது உட்படகுறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே கருக்கலைப்பை அனுமதிக்கும் கொரியாவில்தாயின் வயிற்றில் கரு உருவாகிய 24 வாரங்களூக்குப்பின் கருவைக் கலைத்தல் முற்றிலுமாகத் தடைச் செய்யப்பட்டுள்ளபோதிலும்கருக்கலைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றார் ஆயர்.
கருக்கலைப்பைத் தடைச்செய்யும் சட்டம் இருக்கிறபோதிலும்,சுயமாக முடிவெடுப்பதற்குரிய பெண்களின் உரிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என Daejeon நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருப்பதுசட்டத்தின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என மேலும் கூறினார் ஆயர் Linus.
ஒரு பெண்ணின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதற்குஒரு குழந்தையின் வாழ்வதற்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது கொரிய தலத்திருஅவை.

ஆதாரம் :  UCAN

6. ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் ப‌குதியில் அமைதி குறித்த‌ க‌த்தோலிக்க‌ அமைப்பின் முய‌ற்சிக்கு வெற்றி

ஜூலை,22,2013. ஆப்ரிக்காவில் பெரும் ஏரியை அடுத்துள்ள நாடுகளில் அமைதியை ஏற்படுத்த கத்தோலிக்க சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு தொடர்ந்து எடுத்த முயற்சியின்பேரில் புருண்டி நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவின் மத்தியப் பகுதியில் பயணம் மேற்கொண்டுவரும் சான் எஜிதியோ அமைப்பின் தலவர்Marco Impagliazzoபுருண்டி தலைநகரில் அண்மை நாடுகளின் பிரதிநிதிகளோடு நடத்தியக் கூட்டத்தில் இந்த‌ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட ஏற்பாடுச் செய்திருந்தார்.
1988ம் ஆண்டு முதல் ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப் பகுதியில் அமைதிக்காக உழைத்து வரும் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பு2005ம் ஆண்டிலேயே அப்பகுதி நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் உருவாக உதவியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

7. பாகிஸ்தானில் மதச்சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை

ஜூலை,22,2013. கடந்த 18 மாதங்களில் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட 203 தாக்குதல்களில் 700 மரணங்கள் உட்பட 1800 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறிக்கை ஒன்று குற்றஞ்சாட்டுகிறது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிராக 77 தாக்குதல்களும்இந்துக்களுக்கு எதிராக 16 தாக்குதல்களும்சீக்கியர்களுக்கு எதிராக 3 தாக்குதல்களும் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டும் இவ்வறிக்கைகிறிஸ்தவர்களுக்கு எதிராக 37 தாக்குதல்கள் இடமெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.
பாகிஸ்தானில் மதத் தீவிரவாதம் தொடர்புடைய வன்முறைகள் களையப்படுவதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறது அமெரிக்கை ஐக்கிய நாட்டிலிருந்து வெளியிடப்பட்டுள்ள உலக மத சுதந்திரம் குறித்த இந்த அறிக்கை.

ஆதாரம் :  Fides

8. நுரையீரல் நோயால் இறக்கும் குழந்தைகள் 4.10 இலட்சம்

ஜூலை,22,2013. "இந்தியாவில் ஆண்டுதோறும் நுரையீரல் நோயால்நான்கு இலட்சத்து10 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர் எனஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன்இந்நோய் குறித்த போதிய விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள பெற்றோர்கள் முன்வந்தால்இறப்பை வெகுவாக தடுக்க முடியும்,'' எனவும் கூறினார் தஞ்சை ஆட்சியர் பாஸ்கரன்.

ஆதாரம் :  தினமலர்



கற்றனைத் தூறும்...


நாவைப் பற்றி நாலு விடயங்கள்...

  • உடலின் மிக வலுவான தசைநமது நாக்கு. Thomas Blackstone என்பவர் தன் நாவில் மாட்டப்பட்ட ஒரு கொக்கியைக் கொண்டு 24 பவுண்டு எடையுள்ள ஒரு பொருளைத் தூக்கினார். எப்பக்கமும் வளைந்துகொடுக்கும் திறன் பெற்றதும் இதுவே.
  • நாவின் மேல்பரப்பு இயற்கையான இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால்அது நல்ல அடையாளம். இதற்கு மாறாகநாவில் வெள்ளைப்படலம் படிந்திருந்தால், 'பாக்டீரியாக்கள்அதிகம் உள்ளன என்று பொருள். நாவை நாம் சுத்தமாகஇளம் சிவப்பு நிறத்தில் பாதுகாத்து வந்தால்பல நோய்களைத் தடுக்கலாம். மருத்துவர்கள் நமது நாவை நீட்டச் சொல்லிப் பார்ப்பதுநமது உடலின் நலனை அறிந்துகொள்ளவே.
  • நமது நாவில் உள்ள 3,000க்கும் அதிகமான சுவை உணரும் முகடுகளுடன் சேர்த்துநமது வாயில் 10,000க்கும் அதிகமான சுவை முகடுகள் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய பொருள்களின் சுவைகளையே நாவினால் உணர முடியும்.
  • கைவிரல்களில் உள்ள தனித்துவம் மிக்க இரேகைகள் போலவேஒவ்வொருவர் நாவிலும் தனித்துவம் மிக்க இரேகைகள் உள்ளன.

ஆதாரம் - http://www.drdeanlodding.com

Wednesday, July 21, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள்
21.07.10

www.vaticanradio.org

----------------------------------------------------------------------------------------------------------------
1. இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் - கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ

2. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாது - கர்தினால் Juan Cipriani Thorne

3. பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய முஸ்லீம் தலைவர் கண்டனம்

4. தென் கொரியாவின் ‘நான்கு நதி திட்டத்’திற்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு

5. கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு

6. திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது


----------------------------------------------------------------------------------------------------------------

இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் - கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ

ஜூலை21,2010 இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் என்று வத்திக்கான் செய்தித்தாளான L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ (Bagnasco) கூறினார்.
சமுதாயப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலைக்குரிய போக்கு என்றுரைத்த கர்தினால் பஞாஸ்கோ, பிறரன்பு என்பதில் விசுவாசம் கொண்டுள்ள கத்தோலிக்கர்கள் முன் வந்து இந்த நிலையை மாற்றவேண்டும் என்றும், சிறப்பாக அரசியலில் இத்தகையோர் ஈடுபடுவது இத்தாலியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் கூறினார்.
சமுதாய மாற்றங்கள் பலவும் மனிதர்களின் முயற்சியால் வரக்கூடியது, மனித முயற்சிகளை மீறிய மாற்றங்களுக்கே இறைவன் துணையைத் தேட வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபை மனித சமூகத்தைப் பற்றி பல ஏடுகளில் கூறியுள்ள கருத்துக்களைச் சுட்டிக் காட்டிய கர்தினால் பஞாஸ்கோ, இன்றைய சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும் சுட்டிக் காட்டினார்.


ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாது - கர்தினால் Juan Cipriani Thorne

ஜூலை21,2010 ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாதென Lima உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Juan Cipriani Thorne கூறியுள்ளார்.
கடந்த வாரம் அர்ஜென்டீனா அரசு மேற்கொண்ட முயற்சி கண்டனத்திற்குரியதென சுட்டிக்காட்டிய கர்தினால் Cipriani, தொடர்ந்து நடைபெறவிருக்கும் பெரு நாட்டின் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டமாக்கும் கருத்து இடம் பெறக் கூடாதென்ற அழைப்பையும் விடுத்தார்.
எந்த ஒரு பொது நல ஊழியரும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்பவராக இருக்க வேண்டுமேயொழிய தங்கள் சுய கருத்துக்களையும், சுய நலனையும் மக்கள் மீது திணிக்கக் கூடாதென்றும் கர்தினால் Cipriani மேலும் கூறினார்.


பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய முஸ்லீம் தலைவர் கண்டனம்

ஜூலை21,2010 தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது குறித்தத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இந்திய முஸ்லீம் தலைவர் Asghar Ali Engineer.
இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது கொடூரமானக் குற்றம் மற்றும் இத்தகைய குற்றச் செயல்கள் பாகிஸ்தானில் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன என்றுரைத்த மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, தேவநிந்தனைத் தடைச் சட்டங்களைத் தான் முழுமையாய் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
தேவநிந்தனைத் தடைச்சட்டம் பற்றிக் குரானில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றுரைத்த Engineer, பாகிஸ்தானில் இந்தச் சட்டம் சிறுபான்மை கிறிஸ்தவர்க்கெதிராகத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.
பாகிஸ்தானில் தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 35 வயது ரஷித் இம்மானுவேல், 30 வயது சஷித் மாசிக் இம்மானுவேல் ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் இத்திங்களன்று ஃபாய்சலாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், இதேமாதிரியானக் குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கேரளாவில் முஸ்லீம்களால், கிறிஸ்தவப் பேராசிரியர் T.J.Joseph என்பவரின் கை துண்டிக்கப்பட்தையும் குறிப்பிட்டுப் பேசிய, மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, இத்தகைய வன்முறைகளைத் எத்தகைய கடும் சொற்களால் எதிர்க்க முடியுமோ அத்தகைய வார்த்தைகளால் தான் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.


தென் கொரியாவின் ‘நான்கு நதி திட்டத்’திற்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு

ஜூலை21,2010 தென் கொரியாவிலுள்ள நான்கு நதிகளையும் சீரமைக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்நாட்டின் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய ஆயர் பேரவை, கொரிய நாட்டு கிறிஸ்தவ சபைகளின் குழு, Won புத்த மதக் குழு என பல்வேறு மதக் குழுக்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டங்களின் ஒர் அங்கமாக, இத்திங்களன்று Seoulன் Myeongdong பேராலயத்தில் திருப்பலி ஒன்று நடந்ததென்றும், அந்தத் திருப்பலியில் 2000க்கும் மேற்பட்ட குருக்களும் விசுவாசிகளும் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
‘நான்கு நதி திட்டம்’ என்ற இந்த முயற்சியால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களின் குடிநீர் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உருவாகும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு அமைப்பின் செயலர் அருள்திரு Yang Jae-seong கூறினார்.
இதுவரை இந்தத் திட்டத்திற்கு 1800 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு

ஜூலை21,2010 கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் இச்செவ்வாயன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிராக No Less Human அதாவது, ‘மனிதப் பிறவிகளை விடக் குறைந்தவர்கள் இல்லை’ என்ற அமைப்பு தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
54 வயதான Tony Nicklinson ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டார் என்றும், சக்கர நாற்காலியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தன் வாழ்வைச் செலவிடும் Nicklinson, கருணைக் கொலை மூலம் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு செய்துள்ளார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உடல் குறையுள்ள மனிதர்கள், கருணைக் கொலை மூலம் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள அவர்கள் விரும்பினாலும், இந்த முறை சட்டமாக்கப்படுவதோ, அரசால் அனுமதிக்கப்படுவதோ மனித குலத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு என்று No Less Human குழுவின் உறுப்பினரான Janet Thomas கூறினார்.
உடல் அளவில் எந்த நிலையில் இருந்தாலும், மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை வலியுறுத்துவதே No Less Human என்ற தங்கள் குழுவின் நோக்கம் என்று Janet Thomas மேலும் கூறினார்.


திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ஜூலை21,2010 திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதென அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதுவர் கூறினார்.
தொடர்பு சாதனங்கள் திருத்தந்தை மீது தவறான பல தகவல்களை வெளியிட்டுவந்த வேளை, அவருக்குத் தங்கள் ஆதரவைக் காட்டும் வண்ணம் இவ்வாண்டு புனித வாரத்தில் இந்த முயற்சி ஆரம்பமானதென்று, நியூ யார்க் உயர்மறைமாவட்ட பேராயர் Timothy Nolan கூறினார்.
புனித வாரம் முதல் தூய ஆவிப் பெருவிழாவரையில் சேகரிக்கப்பட்ட இந்த ஆன்மீக மலர்கொத்தில் 24,714 திருப்பலிகளும், 31,847 உண்ணா நோன்பு முயற்சிகளும், 44,357 நற்கருணை வழிபாடுகளும் அடங்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


‘நன்றாக வாழ்’ என வாழ்த்தும் கை தான் வாழ்க்கை

வத்திக்கான் வானொலி – செய்திகள்
20.07.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------


இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் வேண்டுகோள்

ஜூலை 20, 2010. பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் ஜோசப் கூட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபாய்சாலபாத்தில் இத்திங்களன்று இரண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையே உருவாகியுள்ள பதட்ட நிலைகளில் கிறிஸ்தவ ஆலயம் சூறையாடப்பட்டது மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. மேலும், உள்ளூர் மசூதிகள் ஒலிபெருக்கிகள் மூலம் இத்தகைய வன்முறைக்கு ஊக்கம் அளிக்கும் அறிவிப்புகளைக் கூறிவந்தன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

Rashid Emmanuel, Sajid Masih Emmanuel ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களும் இறைவாக்கினர் முகமதுக்கு எதிரான வார்த்தைகளை எழுதினார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு இம்மாதம் இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டனர். எனினும், அந்த எழுத்துக்கள் இவர்களுடையது அல்ல என்று நிரூபணமானதால் இவர்கள் இத்திங்களன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நிரபராதிகள் என விடுவிக்கப்படவிருந்தனர். இவ்விருவரது கைகளும் சேர்த்து விலங்கு மாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வெளியே இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சகோதரர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதற்கொண்டு இவர்கள் கொல்லப்பட வேண்டுமென்று ஃபாய்சலாபாத் முஸ்லீம் மதக் குருக்கள் அம்மதத்தின் விசுவாசிகளைத் தூண்டி வந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இச்சகோதரர்களின் அடக்கச் சடங்குத் திருப்பலி அந்நகர் புனிதர்கள் பேதுரு பவுல் பேராலயத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்றது.

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள்விடுத்த ஆயர் கூட்ஸ், உண்மையான குற்றவாளிகள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படுமாறும் தேவநிந்தனைத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னும், இக்கொலை குறி்தது கருத்து தெரிவித்த தொமினிக்கன் சபை அருள்தந்தை பாஸ்கால் பவுலுஸ், இந்தச் சகோதரர்களுக்கு அதிகப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு தலத்திருச்சபை வற்புறுத்தி வந்தது என்றும் இத்தகைய வன்முறைச் செயலைத் தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

இவ்வன்முறையைத் தொடர்ந்து, காரித்தாஸ் தலைமையகம் உட்பட திருச்சபை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பல கிறிஸ்தவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக அறுபது முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

மேலும், கத்தோலிக்கர் இசுலாமியக் கோட்பாடுகள் குறித்து விவாதிக்கவும் அம்மதத்தைப் பற்றிப் பேசவும் வேண்டாமெனக் கேட்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள், இசுலாத்தை மதித்து சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவில் சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது - திருப்பீடம்

ஜூலை 20, 2010. ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற பிரச்னைகள் உட்பட சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வளர்ந்து வருவதாகத் திருப்பீடம் ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் எச்சரித்தது.

ஐரோப்பிய அவை, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், 24 ஆயர்கள், யூதமதத்தின் முக்கிய ராபிகள், முஸ்லீம்மதக் குருக்கள், இந்து மற்றும் சீக்கிய சமூகங்களின் பிரதிநிதிகள் இணைந்து “ஏழ்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு” குறித்து பெல்ஜிய நாட்டு பிரசல்ஸ்ஸில் நடத்திய ஒருநாள் கூட்டத்தில் உரையாற்றிய நீதி மற்றும் அமைதிக்கானத் திருப்பீட அவையின் நேரடிப் பொதுச் செயலர் Flaminia Giovanelli இவ்வாறு தெரிவித்தார்.

ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கும் அதேவேளை, பணக்காரருக்கும் ஏழைகளுக்குமிடையேயான வேறுபாடுகளும் அதிகரித்து வருகிறது மற்றும் இது துர்மாதிரிகையாகவும் இருக்கின்றது என்று Giovanelli கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் எட்டு கோடியே ஐம்பது இலட்சம் மக்கள் அதாவது 17 விழுக்காட்டு மக்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் கடும் வறுமையில் வாழ்கின்றனர், இது மதிப்பீடுகளின் அமைப்புமுறை பிரச்னையாகத் தென்படுகின்றன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

ஐரோப்பாவில் ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, மறுபுறம் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய ஜோவனெல்லி, எட்டு விழுக்காட்டு ஐரோப்பிய தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியம் கிடைக்கவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

மக்கள் தொகை பெருக்கம் குறித்த அரசு அறிக்கையை இந்தியத் திருச்சபை வரவேற்றுள்ளது

ஜூலை 20, 2010. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதக் கடுமையான முறைகளைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற அரசு அறிக்கையை வரவேற்றுள்ளது தலத்திருச்சபை.

இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.5 விழுக்காடு வீதம் இருந்து வருகிறது. மக்கள் தொகை தற்சமயம் ஏறத்தாழ 120 கோடியாக இருக்கின்றது, இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டுக்குள் சீனாவை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி அசாட், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதக் கடுமையான முறைகளையும் அரசு பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
இவ்வறிக்கையை வரவேற்றுள்ள இந்திய ஆயர் பேரவையின் குடும்ப ஆணையத் தலைவர் ஆயர் ஆக்னெல்லோ கிரேசியஸ், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சில முறைகள் வெளிப்படையாகத் தெரியவில்லையெனினும் அவை நாட்டில் இடம் பெற்று வருகின்றன என்றார்.

உலகின் பல நாடுகளில் போதுமான மக்கள் இல்லை என்ற பயமும் பிறப்பு விகிதமும் குறைவாகவே இருந்து வருகிறது, இந்த நிலை இந்தியாவில் நுழையாது என்று நம்புவோம் எனவும் கருத்து தெரிவித்தார் ஆயர் கிரேசியாஸ்.

நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் அதிக ஈடுபாடு காட்டுமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு

ஜூலை20,2010. நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் ஆண்டுக்கணக்காய் ஓரங்கட்டப்பட்டுள்ள வேளை, கிறிஸ்தவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டுமாறு அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி நேபாள பிரதமர் மாதவ் குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்நாடு அரசு இன்றி இருக்கின்றது. எனினும் இப்புதன் கிழமைக்குள் புதிய அரசை அமைக்குமாறு அரசுத்தலைவர் ராம் பரன் யாதவ் நாடாளுமன்றத்தைக் கேட்டுள்ளார்.

நேபாளத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்துப் பேசிய காத்மண்ட் ஆயர் அந்தோணி ஷர்மா, கடந்த காலத்தில் கத்தோலிக்கர் அரசியலில் ஆர்வம் காட்டியதைத் தான் பார்த்ததே இல்லை, எனினும் இந்நாள்வரை எந்தத் தலைவரும் மக்கள் நலனில் உண்மையாகவே ஆர்வம் காட்டியதில்லை, எனவே கிறிஸ்தவர்கள் நேபாள அரசியலில் உயிரூட்டமுடன் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது என்று கூறினார்.

இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்டவர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன

ஜூலை20,2010 இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்ட அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் ஆகிய இருவரையும் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன

இலங்கையில் கத்தோலிக்க இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் அருள்தந்தை கொன்சால்வெஸ் இறந்ததன் 270ம் ஆண்டு நிறைவு, அந்நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபை பரவுவதற்குக் காரணமானவராக நோக்கப்படும் முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் பிறந்ததன் 300வது ஆண்டு நிறைவு ஆகிய கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முதல்முறையாக சமய நூல்களைத் தமிழிலும் சிங்களத்திலும் எழுதியவர். இதனால் உள்ளூர் மக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்கவும் அதனைக் கற்கவும் முடிந்தது. மறைக்கல்வி ஏடு உட்பட சுமார் இருபது திருமறை நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இலங்கை டச்சு காலனியாக இருந்த சமயம் கால்வனிசம் அத்தீவின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தது. அச்சமயம் கத்தோலிக்கர் பரவலாக நசுக்கப்பட்டனர். அப்போது குருவாக இருந்த முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ், கத்தோலிக்கத் திருச்சபையை வலுப்படுத்தினார். 1651ம் ஆண்டு பிறந்த இவரை 1995ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுபெற்றவராக அறிவித்தார். சிலோனின் திருத்தூதர் என அழைக்கப்படும் இவர் பிறந்ததன் 300ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிறிஸ்துவ இளையோர் குழு கைபர் கணவாய்ப் பகுதியில் நடத்திய முகாம்

ஜூலை 20, 2010. பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்துவ இளையோர் குழு ஒன்று சுற்றுச்சூழல், மற்றும் மத நல்லிணக்கம் இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம் ஒன்றை அண்மையில் நடத்தினர்.

சென்ற வாரம் மூன்று நாட்கள் இமய மலையின் கைபர் கணவாய்ப் பகுதியில், Saiful Muluk என்ற எரிக்கருகே நடத்தப்பட்ட முகாம் ஒன்றில் மருத்துவர், ஆசிரியர், மாணவர் என்று 86 இளையோர் கலந்து கொண்டு, மலைப்பகுதியில் உள்ள அந்த ஏரியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் பல குப்பைகளை அகற்றினர்.

இயற்கையில் உள்ள குப்பைகளை அகற்றுவது சுற்றுச்சூழலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது போல், சமூகத்தில் உள்ள பிரிவுகளை அகற்றும் போது, சமூகச் சூழலும் முன்னேற வாய்ப்புண்டு என்று இந்த முகாம்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வரும் STANCE என்ற குழுவின் தலைவரான Saqib Khadim கூறினார்.

மத அடிப்படைவாதம், சகிப்புத் தன்மையற்ற நிலை, பிரித்தாளும் அரசியல், ஏழ்மை இவைகளே நாட்டின் சமுதாயச் சூழலை அதிகம் பாதிக்கும் கூறுகள் எனவே, இவைகளையும் நீக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுப்பட்டுள்ளோம் என்று இந்த முகாமில் கலந்து கொண்ட மருத்துவத் துறை மாணவர் ஜென்னிபர் பஷீர் கூறினார்.

சிகிச்சை பெறும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ளது

ஜூலை20,2010. HIV நோய்க் கிருமிகளுக்கானச் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய உலகளாவியப் பொருளாதார நெருக்கடியினால் நன்கொடை வழங்கும் நாடுகளின் இதற்கான முயற்சிகள் மந்தமடைந்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.

எய்ட்ஸ் நோய்க்கானச் சிகிச்சைகள் திட்டமிடப்பட்டபடி இடம் பெற்றால் 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இதனால் ஏற்படும் இறப்புகளை இருபது விழுக்காடாகக் குறைக்க முடியும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

மேலும், எய்ட்ஸ் நோயாளிகள் தங்கள் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல 50 சதவீத பேருந்து கட்டண சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது

இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் இளைஞர் மத்தியில் HIV நோய்க் கிருமிகள் அதிகமாகப் பரவி வருகின்றன என்றும் ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

- பகிர்வதே பலுகும் -

Tuesday, June 29, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 17.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இத்தாலியில் திருத்தந்தை புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார்

ஜூன்17,2010 இத்தாலியில் 2009ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Abruzzi பகுதிக்கு வரும் ஜூலை மாதம் திருத்தந்தை சென்று அங்குள்ள புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார் என்று திருப்பீட பத்திரிக்கை அலுவலகம் கூறுகிறது.
13ம் நூற்றாண்டில் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாம் செலெஸ்தின், ஐந்து மாதங்களே திருத்தந்தையாக இருந்த பின்னர் அந்தப் பொறுப்பைத் துறந்து, ஒரு துறவியாக வாழ்நாட்களைக் கழித்தார் என்பது வரலாறு.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Abruzzi பகுதியில் உள்ள L’Aquila நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்தப் பகுதிக்கு அவ்வாண்டு ஆகஸ்ட் மாதமே சென்றதோடு, அந்த ஆண்டை புனித செலெஸ்தின் ஆண்டாக அறிவித்தார். இந்த ஜூபிலி ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வருவதையொட்டி, திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்வார் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.
திருத்தந்தை மே மாதம் தொரினோவுக்கு மேற்கொண்ட பயணம் உட்பட, இவ்வாண்டு இத்தாலியின் நான்கு இடங்களுக்கு மெய்ப்புப் பணிக்கான திருப்பயணங்களை மேற்கொள்வார் என்று இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.


“இரத்தமயமான ஞாயிறு” குறித்த அறிக்கையை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது

ஜூன்17,2010 “இரத்தமயமான ஞாயிறு” குறித்த அறிக்கை, அச்சம்பவம் நிகழ்ந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருப்பதை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
1972ம் ஆண்டு சனவரி 30 ஞாயிறன்று, மக்கள் உரிமைக்கான போராட்டத்தில், அமைதியான முறையில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மேல் பிரித்தானியப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
எவ்வித காரணமும் இன்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்த விசாரணை 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இச்செவ்வாயன்று நிறைவு பெற்றது. விசாரணையின் முடிவில் வெளியான இந்த அறிக்கையில், பிரித்தானிய படைவீரர்களின் செயல் கண்டனத்திற்குரியது எனத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசின் சார்பாக, பிரதம மந்திரி David Cameron இச்செவ்வாயன்று மக்களவையில் மன்னிப்பு கேட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
இவ்வறிக்கை வெளியான செவ்வாய்க் கிழமையை செபத்தில் கழித்த அயர்லாந்து ஆயர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும், சிறப்பாக இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த, காயப்பட்ட நம் சகோதரர்கள் அனைவரையும் நம் மனதிலும், செபத்திலும் தொடர்ந்து நினைவுக் கூர்வோம் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.


இயேசு சபைக் குரு எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது

ஜூன்17,2010 இயேசு சபைக் குரு Gaston Roberge எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் இச்செவ்வாயன்று கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது.
"The Indian Film Theory: Flames of Sholay, Notes and Beyond" என்ற தலைப்பில் வெளியான இந்தப் புத்தகத்தை, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட வல்லுனர்கள், விமர்சனையாளர்கள் என அனைவரும் புகழ்ந்துள்ளனர்.
இந்தியாவுக்கே உரித்தான திரைப்பட கோட்பாடுகளை உலகறியச் செய்யும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளதென வங்காளத் திரைப்பட தயாரிப்பாளரும், அறிஞருமான Ashok Vishwanathan கூறினார்.
இன்றைய இந்தியாவில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெறும் திரைப் படங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த இந்திய நாட்டிய சாஸ்திரங்களில் காணக்கிடக்கின்றன என்று இப்புத்தகத்தின் ஆசிரியர் இயேசு சபைக் குரு Gaston Roberge கூறினார்.
‘சித்ரபானி’ என்ற தொடர்பு சாதன மையத்தை கொல்கொத்தாவில் உருவாக்கியதோடு, திரைப்படங்கள் குறித்து 25 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள குரு Gaston Roberge, iPod கலாச்சாரம் பெருகியுள்ள இந்தக் காலக் கட்டத்திலும், திரைப்படங்கள் இன்னும் மக்களிடையில் அழியாது என்று கூறினார்.


இளம் குருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ஆயர்

ஜூன்17,2010 குருக்கள் ஆண்டின் நிறைவையொட்டி வெளி வந்துள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் San Sebastian மறை மாவட்ட ஆயர் Jose Ignacio Munilla.
மலையேறும் முயற்சியில் ஓராண்டுக்கு முன் இறந்த இளம் குரு Pablo Dominguezஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம், குருத்துவம் குறித்த வாடிக்கையான, தவறான எண்ணங்களைச் சரி செய்யும் வகையில் வெளி வந்துள்ள ஒரு திரைப்படம் என்று ஆயர் Munilla கூறினார்.
குருக்களையும், குருத்துவத்தையும் பற்றி அண்மையில் எழுந்துள்ள பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில், குருத்துவத்தின் மாண்பை நிலைநிறுத்தும் இது போன்றதொரு திரைப்படம், அதுவும் குருக்கள் ஆண்டு நிறைவாகும் இந்த நேரத்தில் வெளி வந்திருப்பது பொருத்தமானதே என்று ஆயர் மேலும் கூறினார்.
“இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு குருவை சிலுவையில் நீ அறைந்தால், இந்த உலகம் உன்னைப் பாராட்டும்; மாறாக, ஒரு குருவை நீ பாராட்டினால், இந்த உலகம் உன்னைச் சிலுவையில் அறையும்” என்று இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் முன்னுரையாகப் பேசியிருப்பது திரைப்படத்தின் அழகான ஓர் ஆரம்பம் என்று ஆயர் Munilla கூறினார்.
ஆவணப் படத்தின் நாயகனான Pablo Dominguezன் விசுவாசம், தாழ்ச்சி, தாராள மனம், பணியில் அவர் கொண்டிருந்த தளராத ஆர்வம் இவை எல்லாம் பலர் மனதிலும் மேலான எண்ணங்களை விதைக்கும் என்று ஆயர் Jose Ignacio Munilla தெரிவித்தார்.


மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதென காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது

ஜூன்17,2010 மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதால், உலக நாடுகள் இந்த உணவு பற்றாக்குறையை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென காரித்தாஸ் அமைப்பு இப்புதன் கிழமை விண்ணப்பித்துள்ளது.
Chad, Mali, Burkina Faso ஆகிய நாடுகளில் உணவு பற்றாக்குறை இருந்தாலும், Niger பகுதியே மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு 80 லட்சம் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்றும் இப்பகுதியின் காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro கூறியுள்ளார்.
இந்த உணவு பற்றாக் குறை 2005ம் ஆண்டு ஏற்பட்ட குறையை விட அதிக அளவானது என்றும், இந்தப் பற்றாக் குறையால் மிக அதிகமாய் பாதிப்புக்கு உள்ளாகப் போவது குழந்தைகளே என்றும் Raymond Yoro மேலும் கூறினார்.
இந்த நெருக்கடி நிலை குறித்த எச்சரிக்கைகள் சென்ற ஆண்டு டிசம்பரிலேயே விடுக்கப்பட்டாலும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உலக நாடுகள் தாமதமாகச் செயல் படுகின்றன என்ற தன் வருத்தத்தையும் தெரிவித்தார், காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro.


சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – ஐ.நா. உயர் மட்ட அதிகாரிகள்

ஜூன்17,2010 சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துதல், அல்லது போர்ச் சூழ்நிலையில் அவர்களைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குதல், அவர்களது உடலுக்கும், உயிருக்கும் ஊறு விளைவித்தல் ஆகிய வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகள், குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடம் அந்நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் சென்ற மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமேரிக்கா ஆகிய நாடுகளில் சிறுவர், சிறுமிகளை போர் படையில் ஈடுபடுத்தும் 16 குழுக்களை அடையாளப்படுத்தினார்.
இந்தக் குழுக்களைப் பல வழிகளிலும் கட்டுப் படுத்தும், அல்லது தடை செய்யும் பொறுப்பு அரசுகள் மற்றும் பல்வேறு உலக நிறுவனங்களுக்கு உண்டு என்று ஐ.நா.பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியான ராதிகா கூமாரஸ்வாமி கூறினார்.
கடந்த ஒரு வாரமாக மத்திய அப்பரிக்காவின் ஆறு நாடுகளிடையே சிறார் படைவீர்கள் குறித்து நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள இந்த வேளையில், ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடமிருந்து வந்துள்ள இந்த கோரிக்கை குறிப்பிடத் தக்கது.


முல்லைதீவுப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ

ஜூன்17,2010 ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ இப்புதன்கிழமை இலங்கையின் முல்லைத்தீவு பகுதிக்கு வருகை தந்தார்.
அங்கு நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், அங்கு நடைபெறுகின்ற மறுசீரமைப்பு மற்றும் முன்னேற்றப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசினார்.
வற்றாப்பளை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன், குமாரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தனது முல்லைத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசியுள்ளார்.
வத்திக்கான் வானொலி – செய்திகள் 09.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், தேவை- கர்தினால் பெர்த்தோனே

ஜூன்09,2010 புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், இந்தக் கடினமான காலத்தில் திருச்சபைக்கும் மனித சமுதாயத்துக்கும் தேவைப்படுகிறார்கள் என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இப்புதனன்று கூறினார்.
ஓர் அருட்பணியாளர் கடவுளின் மனிதர், கிறிஸ்துவின் சாயலாக இருப்பவர் என்று சொல்வது அவர் செபிக்கும் போதும் திருவருட்சதானங்களை நிறைவேற்றும் போதும் மட்டும் அல்ல, அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கர்தினால் பெர்த்தோனே, கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இப்புதனன்று தொடங்கியுள்ளவேளை, இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே அருட்பணியாளர்கள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு இருக்கும் அன்பையும் அக்கறையையும் எடுத்துச் சொன்னார்.
ஓர் அருட்பணியாளர், அன்பாக, இரக்கமாக சிலுவையில் அறையப்பட்ட அன்பாக இருக்கும் கடவுளின் சாயல் என்றும் அவர் உரைததார்.
இந்த நிகழ்வானது இன்றைய அருட்பணியாளர்கள் என்ற தலைப்பில் நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால், இது ஒருமையில் இல்லாமல் பன்மையில் இருப்பது, அருட்பணியாளர்களின் வாழ்வு பலவகைப்பட்டதை இது குறித்து நிற்கிறது என்று விளக்கினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகளின் முதல் கட்டமாக இப்புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் “மனமாற்றமும் மறைப்பணியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஜெர்மனியின் Cologne கர்தினால் Joachim Meisner சிந்தனைகளை வழங்கினார். இந்த நிகழ்வு புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் கூடியிருந்தவர்களுக்கும் நேரடி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனமும் திருப்பலியும் நடைபெற்றன.
இவ்வியாழனன்று புனித மேரி மேஜர் பசிலிக்காவில் “சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெறும்.
வியாழன் மாலை குருக்கள் அனைவரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையைச் சந்திப்பர். திருநற்கருணை ஆராதனையுபம் ஆசீரும் இடம் பெறும்.
இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனத் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்

ஜூன்09,2010 ஸ்லோவேனியாவில் இறை சாட்சியாக உயிர் துறந்த 19 வயது இளைஞன், இத்தாலியின் 18 வயது பெண் உட்பட ஒன்பது பேர் வரும் மாதங்களில் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று திருப்பீடம் அறிவித்தது.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளித்த ஒப்புதலுடன் வெளியான இந்தச் செய்தியில், நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளராகப் பணி புரிந்த ஸ்பெயினைச் சார்ந்த Manuel Lazano Garrido இச்சனிக் கிழமையன்று ஸ்பெயினில் Linares நகரிலும், அதற்கடுத்த நாள் ஞாயிறன்று ஸ்லோவேனிய இளைஞன் Lojze Grozde, Celje நகரிலும் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்.
Lebanon நாட்டைச் சேர்ந்த Stephen Nehme, ஸ்பெயின் நாட்டினர்களான கப்பூச்சின் சபை சகோதரர் Leopoldo Sanchez Marquez de Alpandeire, திருச்சிலுவை சகோதரிகள் சபையின் Maria de la Immaculada Conepcion, இத்தாலியர்களான Chiara Badano என்ற இளம்பெண், அமல மரி பணியாளர்களின் சபையைத் தோற்றுவித்த Anna Maria Adorni, ரோமேனியாவின் ஆயரும் மறை சாட்சியுமான Szilard Bogdanffy, மரியாவின் தூய இதய சகோதரிகள் சபையை நிறுவிய பிரேசில் நாட்டு Maria Barbara, ஆகியவர்கள் முத்திபேறு பெற்றவர்களாக வரும் மாதங்களில் உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உலக வர்த்தக நிறுவனத்தில் பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Silvano Tomasi

ஜூன்09,2010 மரபணுக்களை மாற்றி நுண்ணுயிரை உருவாக்க வழங்கப்படும் உரிமை நன்னெறி பிரச்சனைகளை உருவாக்குவதுடன், இந்த உரிமை சரிவர பயன்படுத்தப்படவில்லை எனில், ஏழை நாடுகள் இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
இச்செவ்வாயன்று ஜெனீவாவில் உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த அறிவுச் சொத்துரிமை குழுவில் (TRIPS) பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
நுண்ணுயிர்கள் குறித்து வழங்கப்படும் இந்த உரிமை நன்னெறிக்கு முரணாகச் செல்வதுடன், வளர்ந்து வரும் பல ஏழை நாடுகளின் முன்னேற்றத்தையும் அதிகம் பாதிக்கும் என்று கூறிய பேராயர் Tomasi, உயிர்கள் குறித்த வளங்களில் தனியாருக்கு ஏக உரிமைகள் அளிப்பதால், அடிப்படை உணவு, மருந்துகள் போன்ற தேவைகளில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் வலியுறுத்தினார்.
தனியாருக்கு வழங்கப்படும் இந்த உரிமைகள், உணவு குறித்த பாதுகாப்புக்குப் பெரிதும் ஆபத்தானது என்றும் உலகம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து மக்களின், அதிலும் சிறப்பாக நலிந்த மக்கள், ஏழைகள் இவர்களின் நன்மைகளை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் Silvano Tomasi கூறினார்.


நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வத்திக்கான் உயர் அதிகாரி ஐ.நா.வை வலியுறுத்தல்

மே09,2010 அத்தியாவசிய மருந்துகள் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு உறுதி வழங்கி, நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 14வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் உலகின் நலவாழ்வுத்துறையில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளைப் பட்டியலிட்டார்.
தலத்திருச்சபைகளும் துறவு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் ஒவ்வொரு நாட்டிலும் சட்டத்தை மதித்து நலவாழ்வுத்துறையில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்து வருகின்றன என்றுரைத்த பேராயர், கத்தோலிக்கத் திருச்சபை, 5,378 மருத்துவமனைகள், 18,088 மருந்தகங்கள், 521 தொழுநோயாளர் மையங்கள், 15,448 முதியோர், மாற்றுத்திறனுடையோர் இல்லங்கள் உட்பட பல நலவாழ்வு மையங்களை நடத்தி வருகின்றது என்றார்.
வளரும் நாடுகளில் 50 விழுக்காட்டினர் ஏழ்மையினால் ஏற்படும் நோய்களால் துன்புறுகின்றனர், இது வளர்ந்த நாடுகளைவிட சுமார் பத்து மடங்கு அதிகம் என்றும் சுகாதாரத்திற்குப் பணம் செலவிடவேண்டியிருபப்தால் ஆண்டுதோறும் 10 கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் வளரும் நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 50 முதல் 90 விழுக்காடுவரை நோயாளிகளே செலவழிக்க வேண்டியிருக்கின்றது, சுமார் 200 கோடிப்பேர் அத்தியாவசிய மருந்துகளின்றி கஷ்டப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.

போபால் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை ஒத்துழைக்கும் - மத்திய பிரதேசத் தலத் திருச்சபை

ஜூன்09,2010 போபால் நச்சு வாயு விபத்து சம்பந்தமான வழக்கில் போபால் நீதிமன்றம் இத்திங்களன்று அளித்துள்ள தீர்ப்பு, நீதியை அவமதிக்கும் ஒரு குற்றம், எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று மத்திய பிரதேசத் தலத் திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தில், எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று கூறிய போபால் நீதி மன்றம், அவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வழங்கியிருப்பதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வளவு தாமதமாகவும், இவ்வளவு குறைந்த அளவு தண்டனையோடும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வகைத் தீர்ப்புகளால் மக்கள் வெறுப்படைந்து, பணத்திற்காக குற்றங்கள் புரிபவர்களின் துணையை நாடி, நீதியைத் தேடிக் கொள்ளும் அபாயங்கள் உள்ளன என்று ஜபல்பூர் ஆயர் Gerald Almeida கூறினார்.
இந்த விபத்தின் முக்கிய பொறுப்பாளரான Union Carbide நிறுவனத்தின் தலைவர் Warren Anderson எவ்வகையிலும் தண்டிக்கப்படாமல், அமெரிக்காவில் வாழ்ந்து வருவது இந்திய அரசையும், நீதித் துறையையும் கேலிக்குரியதாய் ஆக்கியுள்ளதென மத்திய பிரதேசத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட்தந்தை Anand Muttungal கூறினார்.
நீதிக்குப் புறம்பான இத்தகைய தீர்ப்புகளால் இந்தியர்கள் அனைவரும் அவமானப் படுகிறோம் என்று அனைத்திந்தியத் துறவியர் அவையின் செயலர் அருட் சகோதரர் Mani Mekkunnel கூறினார்.

விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடை - மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera

ஜூன்09,2010 மனிதர்கள் மேற்கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடையென்றும், வாழ்வின் பல மதிப்பீடுகளைப் பின் பற்ற இவை அதிகம் உதவும் என்றும் மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
இவ்வெள்ளியன்று தென் ஆப்ரிக்காவில் துவங்க இருக்கும் உலகக் கால்பந்து போட்டிகளுக்குச் செல்லும் மெக்சிகோ நாட்டு கால் பந்தாட்ட வீரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல் விசுவாச வாழ்வில் கிறிஸ்துவர்களும் ஆர்வமாய் பங்கேற்க வேண்டுமென கூறிய புனித பவுலின் சொற்களை நினைவு படுத்திய கர்தினால் Carrera, தியாகங்கள் இன்றி எந்த ஒரு நல்ல முடிவும் ஏற்படுவது கடினம் என்று கூறினார்.
இந்த உலகின் பரிசுகள், புகழ் எல்லாம் மறையக் கூடியவை ஆனால், மாறாமல், மறையாமல் இருக்கும் நிறைவாழ்வை நாடுவதே நம் கடமை என்பதையும் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera எடுத்துரைத்தார்.

சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை - காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர்

ஜூன்09,2010 தங்கள் சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எகிப்திலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள எகிப்து நாட்டில் கடந்த வாரம் அங்குள்ள நீதி மன்றம் ஒன்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த இருவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கியதை அடுத்து, அங்குள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான Shenouda மற்றும் அச்சபையின் 90 அதிகாரிகள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் பரவி வரும் இக்காலத்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை தன் கொள்கைகளை ஆதரித்து, நீதி மன்றத்தை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டங்களை மதிப்பது தங்கள் கடமை என்றாலும், விவிலியம் கூறும் சட்டங்களே காப்டிக் சபையின் அடிப்படையாகும் என்று தலைவரான Shenouda கூறினார்.
எகிப்தில் வாழும் 7 கோடியே 80 லட்சம் மக்களில் 10 விழுக்காடு கிறிஸ்துவர்கள். அந்தக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்கள்.

Monday, June 14, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 11.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குருக்களின் தவறானப் பாலியல் செயல்களுக்கு மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை

ஜூன் 11,2010 கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடவுளிடமிருந்து மிக உருக்கமுடன் மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அத்துடன், குருக்களின் இத்தகைய தவறானப் பாலியல் நடவடிக்கைகள் இனிமேல் ஒருபொழுதும் இடம்பெறாதிருப்பதற்குத் திருச்சபை தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்றும் திருத்தந்தை உறுதி கூறினார்.
உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சர்வதேச குருக்கள் ஆண்டின் நிறைவுக் கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக, இவ்வெள்ளி காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஏறக்குறைய பதினைந்தாயிரம் குருக்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, இச்சர்வதேச குருக்கள் ஆண்டில், குருக்களின் பாவங்கள், குறிப்பாகச் சிறாரை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் இவ்வாண்டு களங்கப்படுத்தப்பட்டு இருந்தது என்று தெரிவித்தார்.
குருத்துவ அழைத்தல்களுக்காகக் கடவுளிடம் கெஞ்ச வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, இவ்வாறு குருத்துவத் திருப்பணியில் இளையோரைச் சேர்க்கும் பொழுது அவர்கள் தங்கள் அழைத்தலுக்கு உண்மையாய் நடந்து கொள்வதற்குத் தேவையான எல்லாப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் திருச்சபை தொடர்ந்து உடன் செல்லும் என்று உறுதி கூறினார்.
இவ்வகை உருவாக்குதல் மூலமாகக் குருக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் துன்பமான சூழல்களில் இறைவன் அவர்களைப் பாதுகாத்து கண்காணித்து வருவதை அவர்கள் உணருவார்கள் என்றும் அவர் கூறினார்.
இயேசுவின் திருஇதய பெருவிழாவான இவ்வெள்ளி குருக்களின் தூய்மை வாழ்வுக்காகச் செபிக்கும் நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழாத் திருப்பலியின் பதிலுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுள்ள, ஆண்டவர் என் ஆயன், எனக்கேது குறை என்ற 23ம் திருப்பாடலை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, விசுவாசிகளைத் திசை திருப்பும் தற்போதைய உலகுப் போக்குக்கு எதிராக நின்று விசுவாசத்தைப் பாதுகாப்பதற்குத் திருச்சபை ஆயனின் கோலைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உண்மையில் இந்தக் கோலைப் பயன்படுத்துவது அன்பின் சேவையாக இருக்க வேண்டும் என்றும் ஆண்டவரின் கோலும் கைத்தடியும் எப்பொழுதும் பாதுகாப்பைத் தருகின்றது என்றும் திருத்தந்தை அறிவித்தார்.
திருச்சபையின் வரலாற்றில் இத்தனை குருக்கள் இணைந்து திருப்பலி நிகழ்த்தியது இதுவே முதன்முறையாகும். இத்திருப்பலியில் புனித ஜான் மரிய வியான்னி பயன்படுத்திய திருப்பலி பாத்திரத்தைத் திருத்தந்தை பயன்படுத்தினார். குருக்களின் பாதுகாவலராகிய இந்தப் புனிதர் இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டே இந்தச் சர்வதேச குருக்கள் ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கு நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவது அவசியம் – திருப்பீட அதிகாரி

ஜூன் 11,2010 எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கான நடவடிக்கைகள், நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவதன் வழியாக, அந்நோய்க்கான அடிப்படை காரணங்களைக் களைவதாய் இருக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் கேட்டுக் கொண்டார்.
எய்ட்ஸ் நோய் குறித்த ஐ.நா.பொது அவையின் 64வது அமர்வில் உரையாற்றிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்ய வேண்டுமானால், அந்நோய்க்கான மூலகாரணங்கள் அகற்றப்பட வேண்டும் மற்றும் அந்நோயாளிகள் மீது அன்பு காட்டப்பட வேண்டும் என்று கூறினார்.
உலகில் தினமும் 7,400 பேர் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர், தற்சமயம் ஏறத்தாழ 40 இலட்சம் பேர் இந்நோய்க்கான சிகிச்சை பெறுகின்றனர், அதேசமயம் 97 இலட்சம் பேருக்கு சிகிச்சை தேவைப்படுகின்றது, இரண்டு பேருக்கு சிகிச்சை தொடங்கும் பொழுது ஐந்து பேர் புதிதாகத் தாக்கப்படுகின்றனர் என்றும் பேராயர் மிலியோரே சுட்டிக் காட்டினார்.

அறநெறிக் கூறுகளை உள்ளடக்காத பொருளாதார நுட்பங்கள், ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது - வத்திக்கான் உயர் அதிகாரி

ஜூன்11,2010 அறநெறிக் கூறுகளை உள்ளடக்காதப் பொருளாதார நுட்பங்கள், தெளிவான மற்றும் ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது என்று, பன்னாட்டு தொழில் கருத்தரங்கில் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பன்னாட்டுத் தொழில் கருத்தரங்கின் 99வது அமர்வில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, தனியாட்களையும் குடும்பங்களையும் மிகவும் பாதித்துள்ள தற்போதைய உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் எதிர்நிலை விளைவுகள் குறித்து விளக்கினார்.
இந்த நெருக்கடிகளால், 2015ம் ஆண்டில், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்களும் உலக அளவில் 5 கோடியே 30 இலட்சம் பேரும் கடுமையான வறுமையில் வாழவேண்டியிருக்கும் என்றும் கூறிய பேராயர் தொமாசி, இவை, அமைப்புமுறை சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன என்றார்.
92 நாடுகளில், 75 விழுக்காட்டிற்கு மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியும், 200 கோடி முதல் 250 கோடிப்பேரின் வருவாயும் வேளாண்மையைச் சார்ந்து இருக்கின்றது என்றும் பேராயர் விவரித்தார்.
வேலைவாய்ப்பற்ற இளையோரின் எண்ணிக்கை 2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 85 இலட்சமாக அதிகரித்திருந்தது, இந்த அதிகரிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என்பதையும் பேராயர் தொமாசி கோடிட்டுக் காட்டினார்.

தென்னாப்ரிக்க கத்தோலிக்கத் திருச்சபை உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது

ஜூன் 11,2010 உலகிலுள்ள எல்லா தென்னாப்ரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளும் நோக்கத்தில் ஜொகானஸ்பர்க்கில் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான அமைதி கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது தலத்திருச்சபை.
இவ்வெள்ளியன்று தென்னாப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க்கில் 19-வது உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ளவேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை அதற்கு இணையான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வருவது குறித்துப் பேசிய திருச்சபை அதிகாரி ஒருவர், இதற்கான காரணத்தையும் விளக்கினார்.
உலகிலுள்ள எல்லாத் தென்னாப்ரிக்கர்களையும், சிறப்பாக, இந்த உலக நிகழ்வில் ஓரங்கட்டப்பட்டுள்ளோரை ஈடுபடுத்தும் நோக்கத்தில் இதனை நடத்துவதாகத் தெரிவித்தார், தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் பேரவையின் தொடர்புத்துறை அலுவலகத்தின் Antoine Soubrier.
கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் இந்த அமைதிக் கால்பந்து போட்டி, பன்னாட்டுக் கூறைக் கொண்டுள்ளது என்றும், இம்மாதம் 5ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமார் 15 நாடுகளின் 64 விளையாட்டு வீரர்கள் ஜொகானஸ்பர்க் நகரின் ஏழைகள் வாழும் பகுதியில் விளையாடுவார்கள் என்றும் Soubrier தெரிவித்தார்.
இது, தென்னாப்ரிக்கர்கள் ஒருவரையொருவர் அறிய வாய்ப்பாக அமைகின்றது என்றும் அவர் கூறினார்.
ஜூன் 11, இவ்வெள்ளி மாலை தொடங்கியுள்ள, உலககோப்பை கால்பந்து போட்டி, ஜுலை 11ம்தேதி வரை நடக்கும். இத்துவக்க விழாவில் சுமார் 1,500 கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

பிலிப்பைன்ஸின் புதிய அரசுத்தலைவரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயர்கள் ஆதரவு

ஜூன்11,2010 பிலிப்பைன்சில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் Benigno Aquino III வின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை, அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிலிப்பைன்சில் தேசிய அளவில் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்நாட்டு காங்கிரஸ் அவை, நாட்டின் 15வது அரசுத்தலைவர் Benigno Aquino என்றும் உதவி அரசுத்தலைவர் Jejomar Binay என்றும் இவ்வாரத்தில் அறிவித்தது.
புதிய அரசுத்தலைவரின் கொள்கைகள் செயல்வடிவம் எடுக்க ஆயர்கள் உதவுவதாக உறுதி கூறிய, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar, இவர் நேர்மையான அதிகாரிகளை நியமிப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஊழலைக் குறைத்தல், வரிகள் மீது கடுமையான கொள்கைகளைக் கொண்டு வருதல் உட்பட பல கோட்பாடுகளைத் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்திருந்தார் அக்குய்னோ.

மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளன

ஜூன்11,2010 சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் தீர்மானித்திருப்பதை வரவேற்றுள்ளது யூனிசெப் என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் அமைப்பு.
காமரூன், சாட், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நைஜர், நைஜீரியா, சூடான் ஆகிய ஆறு நாடுகளும், சிறார் பற்றிய சர்வதேச உரிமைகள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் தீர்மான அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்நடவடிக்கை, ஆப்ரிக்காவின் புதிய தொடக்கமாக இருக்கின்றது என்று பாராட்டினார் சாட் நாட்டிலுள்ள யூனிசெப் பிரதிநிதி Marzio Babille.
சிறார் விபசாரம், சிறார் படைவீரர், சிறார் வியாபாரம் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களை 2012ம் ஆண்டுக்குள் எல்லா நாடுகளும் முழுமையாய் அமல்படுத்துமாறு கடந்த மாதத்தில் ஐ.நா.பொதுச் செயலர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



வத்திக்கான் வானொலி – செய்திகள் 12.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியினால் பலன் என்ன? - திருத்தந்தை
ஜூன்12,2010 நீதி, சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் சமத்துவத்தை வளர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், இன்றைய மற்றும் வருங்கால ஐரோப்பாவுக்கு நன்மைபயக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியின் 160 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சமூகநலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் இந்த வங்கியின் நடவடிக்கைகளுக்குத் திருப்பீடம் ஆதரவு அளிக்கின்றது என்றுரைத்தார்.
மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தும் சர்வாதிகாரக் கருத்துக் கோட்பாடுகளால் ஏற்படும் பலன் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இக்காலத்தில், அப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், வெறும் நிதியை மட்டும் சார்ந்ததாக இருக்கக் கூடாது எனவும் திருத்தந்தைக் கேட்டுக் கொண்டார்.
1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியில் 1973ம் ஆண்டு அங்கத்தினராகச் சேர்ந்தது திருப்பீடம்.

மிகஅழகான காங்கோ - கத்தோலிக்கத் திருச்சபையின் முயற்சிகள்
ஜூன்12,2010 காங்கோ ஜனநாயகக் குடியரசு விடுதலை அடைந்ததன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை, என்றுமில்லாத மிக அழகான காங்கோவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
காங்கோவின் சமூகக் கட்டமைப்பைச் சீர்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை, கின்ஷாசா கத்தோலிக்கப் பல்கலைகழகத்தில் மூன்று நாள் கருத்தரங்கையும் நடத்தியுள்ளது.
பொன்விழா என்றால், நாம் எங்கிருந்து வந்தோம், நாம் எப்படி இருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்திப்பதே என்றுரைத்த ஆயர்கள், நாட்டின் நலனுக்குக் கேடு ஏற்படும் விதத்தில் இடம்பெற்ற தவறுகளுக்காகக் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் நாட்டினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதி அமைதி, பணி என்ற விருதுவாக்கைக் கொண்டுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி விடுதலை அடைந்தது. இந்நாடு 1997ம் ஆண்டுவரை சயீர் என்று அழைக்கப்பட்டது.

திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் - கேரள ஆயர்கள்

ஜூன்12,2010 திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சபை விழாக்கள் தற்சமயம் ஆன்மீகம் குறைந்து வியாபாரமாக, மிகுந்த ஆடம்பரமாக நடைபெற்று வருகின்றன, இதனைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கேரள ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத் கூறினார்.
விழாக்களில் இடம்பெறும் வானவேடிக்கைகள், போக்குவரத்து நெருக்கடிகள், நீண்ட பவனிகள், அலங்கார வளைவுகள் போன்றவைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு தேவை எனவும் கேரளாவின் சுமார் 50 இலட்சம் கத்தோலிக்கரிடம் கூறியுள்ளனர் ஆயர்கள்.
திருச்சபையில் கொண்டாடப்படும் விழாக்கள் கிறிஸ்தவச் சமூகத்தின் ஆன்மீகத்தைத் தட்டி எழுப்பி அதனைப் புதுப்பிப்பதாக இருக்க வேண்டும் என்று கேரள ஆயர்கள் இவ்வாரத்தில் நிறைவு செய்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.
கேரள மாநிலத்தில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இதனைக் குறைப்பதற்குப் பங்குத்தளங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
கேரளாவின் 3 கோடியே 50 இலட்சம் பேரில் 19 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் - திருச்சபை மனித உரிமை நடவடிக்கையாளர்

ஜூன் 12, 2010 ஒரிசா மாநிலத்தில் பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் சுரண்டப்படுவதால் இந்தியாவிலேயே அம்மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் என்று திருச்சபை மனித உரிமை நடவடிக்கையாளர் ஒருவர் கூறினார்.
பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் அதிகமாக வாழும் பகுதிகளை பல்வேறு தொழிற்சாலைகளும் வியாபாரிகளும் ஆக்ரமிப்பதால் குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன என்று அருட்தந்தை நிக்கோலாஸ் பார்வா அறிவித்தார்.
இந்த மக்கள் எப்பொழுதெல்லாம் கொதித்து எழுகிறார்களோ அப்பொழுதெல்லாம், கந்தமால் மாவட்டத்தில் இடம் பெற்றது போன்று, அவர்கள் வன்முறையால் நசுக்கப்படுகின்றனர் என்று அக்குரு மேலும் கூறினார்.
ஒரிசாவின் 3 கோடியே 68 இலட்சம் மக்களில் சுமார் 40 விழுக்காட்டினர் பூர்வீக மற்றும் தலித் இனத்தவர். இந்த மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களில் ஏறக்குறைய 90 விழுக்காடு போதிய ஆதாரங்கள் இன்றி நிரூபிக்கப்படாமல் இருக்கின்றது என்று அண்மையில் மத்திய சமூகநீதி அமைச்சர் தனது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சூதாடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை கவலை

ஜூன்12,2010 தென்னாப்ரிக்காவின் ஜோஹானஸ்பர்கில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சூதாட்டம் தன்னிலே நல்லது அல்ல என்று எச்சரித்துள்ள இயேசு சபை அருள்தந்தை Robert Ng Chi-fun, கால்பந்து போட்டியை வைத்து விளையாடும் சூதாட்டம் ஏமாற்றத்திற்கும் இட்டுச் செல்லக்கூடும் எனக் கூறியுள்ளார். இவர், ஹாங்காங் தூயஆவி குருத்துவக் கல்லூரியில் நன்னெறி இறையியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
மேலும், கால்பந்து போட்டியை வைத்து சூதாடும் மக்களில் பெரும்பாலானோர் 18க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று, இந்தச் சூதாட்டம் குறித்து 2003ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை ஆய்வு நடத்திய ஹாங்காங் காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.

பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு ஐ.நா.நிறுவனங்கள் அழைப்பு

ஜூன்12,2010 உலகில் 5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 15 கோடிச் சிறார் தொழிலாளர்கள் இன்னும் வேலை செய்கின்ற வேளை, சிறார் தொழிலாளர்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு அரசுகளும் தனியார் அமைப்புகளும் உதவுமாறு கேட்டுள்ளது யூனிசெப் நிறுவனம்.
இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும், சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளது ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப்.
கல்வி, வறுமை ஒழிப்பு, பாலியல் சமத்துவம், எய்ட்ஸ் நோய் ஒழிப்பு உட்பட மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளை, சிறார் தொழில்முறை இன்னும் நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் யூனிசெப்பின் சிறார் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் சூசன் பிஸ்ஸெல்.
அரசியல் ரீதியாக மட்டும் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்றுரைத்த பிஸ்ஸெல், அனைத்து மட்டங்களிலும் இதற்கு ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
சிறார் தொழிலாளர் ஒழிப்புமுறை தினம் 2002ம் ஆண்டில் முதன்முறையாகக் கடைபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் இதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும் உலகில் 5க்கும் 17 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர்கள் உள்ளனர் என்று உலக தொழில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாள், 2002ம் ஆண்டிலிருந்து ஜூன் 12ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வேலைவாய்ப்பு UNIDO உதவி

ஜூன்12,2010 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பதாயிரம் விதவைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டத்திற்கு UNIDO என்ற ஐ.நா.வின் தொழில் வளர்ச்சி நிறுவனம் உதவி வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்குத் தொழிற்நுட்பம் மற்றும்பிற மதிப்பீட்டுத் திட்டங்களுக்கு UNIDO நிறுவனம் உதவி வருவதாக அதன் இயக்குனர் Kandeh Yumkella அறிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் மூன்றாவது இடம்

ஜூன்12,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் மூன்றாவது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர் என்று அந்நாட்டுக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர்களில் மெக்சிகர்கள் தொடர்ந்து முதலிடத்திலும், அடுத்த இடத்தை பிலிப்பைன்ஸ் நாட்டினரும் மூன்றாவது இடத்தை இந்தியர்களும் பிடித்துள்ளனர் என்று அக்கணக்கெடுப்பு அறிவிக்கிறது.
2008ல் எடுக்கப்பட் மக்கள் தொகைக் கணக்குப்படி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 23 இலட்சமாகும். இவர்களில் 4 இலட்சத்து 55 ஆயிரம் பேர் அங்கேயே பிறந்து வளர்ந்த வம்சாவளியினர். 66.4 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள்.
கடந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பில் வெளிநாட்டினர் வரிசையில், சீனர்கள் இந்தியர்களைவிட முன்னணியில் இருந்தனர், ஆனால் தற்சமயம், சீனர்களைவிட இந்தியர்கள் முன்னணியில் இருக்கின்றனர் என்று அக்கணக்கெடுப்பு மேலும் கூறுகிறது.
நியூயார்க், கலிபோர்னியா, நியூஜெர்சி, டெக்சாஸ் பகுதிகளில், மொத்தம் உள்ள இந்தியர்களில் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் நல்ல கல்வி அறிவு உடையவர்களாகவும் உள்ளனர் என அது கூறுகிறது.